Monday, July 18, 2022

 
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?

 

@avargal unmaigal



தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பள்ளிகளில் பல மாணவிகள் மாணவர்கள் அங்கு நடந்த சம்பவங்களின் காரணமாக மரணித்துப் போய் இருக்கிறார்கள் அந்த சாவுகள் கொலையாக இருந்தாலும் தற்கொலை என்று சொல்லி செய்திகள் மடை மாற்றப்பட்ட சம்பவங்கள் பலவும் நடந்து இருக்கிறது..அது போலத்தான் இந்த கள்ளக்குறிச்சியில் நடந்த மாணவியின் மரணமும்..

இது போலப் பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து இருந்த போதிலும் அப்போது எழாதா போராட்டம் இப்போது நடந்து இருக்கிறது என்றால் அது பல சந்தேகங்கள் அடங்கியதாக இருக்கிறது. எதோ ஒரு சக்தியின் பின்னணியில் ஆர்கனைஸ் செய்து ஒரு போராட்டம் நடத்துகிறார்கள்.அந்த பள்ளியின் நிறுவனர் பாஜகவில் இருப்பவர் என்ற தகவல்களும் கசிந்து வருகின்றன அவரை காப்பாற்றத் தகவலின் உண்மையைத் திசை திருப்ப இந்த போராட்டம் யாரோ ஒருவாரால் திட்டமிடப்பட்டு செய்லப்படுத்தப்பட்டுக் இருக்கிறது,என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழகம் என்பது கலவர பூமியாக இருக்கிறது  என்று யாருக்கோ உணர்த்துவதற்காக நடக்கும் ஆர்கனைஸ்டு குற்றம்தான் இது என்று நான் நினைக்கிறேன். ஜெயலலிதா ஆட்சியின் போது கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியானபோதும்கூட தமிழ்நாட்டில் இப்படி மிகப் பெரிய போராட்டம் நடந்து  பள்ளி அடித்து நொறுக்கப்பட்டதை  இதுவரை நான் கண்டதில்லை .கேள்விப்பட்டதில்லை..




 நிச்சயம் இதன் பின்னணியில்  ஒரு தனிப்பட்ட மாணவியின் மரணத்துக்கான நீதி கேட்கும் போராட்டத்தை விட அரசியல் உள்நோக்கத்தோடு கூடிய ஒரு திட்டமிடல் இருப்பதாகத்தான் பலரும்  சந்தேகப் படுகிறார்கள். இந்த நிகழ்வைத் தினத் தந்தி போன்ற ஊடகங்கள் உதவிகளுடன்  இப்போராட்டத்தை மாநிலம் தழுவிய போராட்டமாக. பெரிய பிரச்சினையாக மடை மாற்றத் துவங்கி இருக்கிறார்கள்  இது புரிந்தால் . இதன் பின்னணியில் எழும் சந்தேகங்களின் உண்மைத்தன்மை பலருக்கும்  புரியும் என்று நினைக்கிறேன்..

என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் நடக்கும் போட்டியில்  கள்ளக் குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை முதல் கோலை மிக சாமார்த்தியமாகப் போட்டு அதகளம் பண்ணிவிட்டார். அடுத்த கோலை திமுக தலைவர் ஸ்டாலின் போடப் போகிறாரா அல்லது அண்ணாமலை வெற்றி பெற்று தாமரை கோப்பையைக் கைப்பற்றப் போகிறாரா என்பதைத் தமிழகம் மிக ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது


 டீம்கே பாய்ஸ்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான் .சங்கிகள் களம் இறங்கி ஆட ஆர்ம்பிச்சுட்டாங்க. நீங்க பேஸ்புக்கில் டிவிட்டரில் திராவிட மாடல் என்று பதிவுகள் போட்டுக் கொண்டு இருந்தால் தாமரை தமிழகத்தில் மலருவதைத் தவிர்க்க முடியாது . எப்படி மேற்கு வங்காள மம்தா  சொந்தமாகத் தனியாக ஒரு டீம் வைத்து  டவுஸர் பாய்ஸ்களை சிறப்பாகக் கவனித்து  , ரோட்டுல ஓட விட்டு டவுஸரை கிழிப்பார்களோ அது போல தமிழகத்தில் டவுஸர் பாய்ஸ்கள் எங்கெல்லாம் பிரச்சனைகள் பண்ணுவார்கள் என்பதை அறிந்து அவர்களின் டவுசர்களை கழட்டி அடித்து ஓட ஓட விரட்ட உடனடியாக மிகத் தைரியமான டீம்களை ரெடி பண்ணி களம் இறக்க வேண்டும்.. அப்படி இல்லையென்றால் அடுத்த மகாராஷ்டிரமாகத் தமிழகம் மாறும் மாறும். மம்தா காவல்துறையை நம்பாமல் தனக்கென்று டீம் வைத்து சங்கிகளை கவனிப்பதால்தான் அங்கு அவர் நிமிர்ந்து நிற்க முடிகிறது தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைக்க முடிகிறது யோசிங்க இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்லி ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிக தூரம் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. பல ஆண்டுகளாக விதைத்த நஞ்சு, முளைக்க ஆரம்பித்துள்ளது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.