தமிழகத்தில் இருந்து வருகைதரும் பிரபலங்களால்தான் அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம் பண்பாடு வளர்கிறதா?
மிகவும் நன்றாகப் படித்து ,மிகப் பெரிய பட்டங்கள் பெற்று ,தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்து ,பல துறையில் மிகச் சிறந்து விளங்கும் தமிழர்கள் அமெரிக்காவில் தமிழைத், தமிழ்க் கலாச்சாரத்தை ,பண்பாட்டை வளர்க்க இங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலம் தமிழகத்திலிருந்து பல பிரபலங்களை ,அறிஞர்களை அதாவது "அறிவாளிகளை: அமெரிக்கா அழைத்து வந்து பேசச் செய்து கேட்கிறார்கள். இந்த வருடம் அவர்கள் அழைத்து இருப்பவர்களில் அநேகம் பேர் திராவிட கழக அறிவாளிகள் . இந்த வருடம் பெட்னாவால் நடத்தப்பட்டது திராவிட கழக கூட்டம்தான். எனக்கொரு சந்தேகம் அமெரிக்காவிற்கு வந்து பல துறைகளில் சாதிக்கும் இங்குள்ள அமெரிக்கத் தமிழர்களை விட இந்த திராவிட மாடல் அறிவாளிகளால் இங்குத் தமிழும் தமிழ்க் கலாச்சாரமும் வளர்ந்து விடவா போகிறது.
இதில் என்ன கூத்து என்றால் ,அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகளோ அமெரிக்க கலாச்சாரத்தை பின் பற்றி வாழ ஆரம்பிக்கிறது .சில குடும்பங்களில் பெற்றோர்களின் வற்புறுத்துதலின் காரணமாகத் தமிழைக் கொஞ்சம் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர் அவ்வளவுதான். அப்படி ஒரு நிலை இருக்கத் தமிழகத்திலிருந்து பிரபலங்களை ,அறிவாளிகளைக் கூட்டி வந்து பேசச் சொல்வதால் இங்கு எப்படி தமிழும் தமிழ்க் கலாச்சாரமும் வளரும் என்பது எனக்குத் தெரியவில்லை... இப்படி தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்களின் பேச்சை இங்குள்ள தமிழ் குழந்தைகள் யாருமே கேட்பதில்லை. கேட்பது எல்லாம் 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள்தான். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அதைக் கேட்பதை விட அப்படி வந்தவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்து தங்கள் சமுக இணையதளங்களில் பதிவிட்டு லைக்ஸ் மட்டுமே பெற விழைகிறார்கள்.. இப்படிச் செய்வதால் தமிழும் தமிழ்க் கலாச்சாரமும் வளர்ந்துவிடுமா என்ன?
___________________________________________________________
இளையராஜா ஒன்று புனிதர் அல்ல இந்த நியமன எம்பி பதவி அவரின் திறமைக்கு கிடைத்த பரிசும் அல்ல __________________________________________________________
தமிழகத்திலிருந்து வந்த பிரபலங்கள் சொல்லிய விஷயங்களை எத்தனை பேர் விவாதித்து விமர்சித்து சமுக இணைய தளங்களில் பேசி அதை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் அப்படி எடுத்துச் சென்ற விஷயங்கள் உலகில் உள்ள பல நாடுகளில் வசிக்கும் தமிழ்ர்களை அடையச் செய்து இருக்கிறதா என்ன?
இதுவரை எத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன எத்தனை தமிழக பிரபலங்கள் , அறிவாளிகள் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள். எத்தனை பேச்சுக்கள் சொற்பொழிவுகள் கேட்டு இருப்பார்கள்.. அதன் மூலம் அவர்களின் குழந்தைகள் கற்றுக் கொண்டது எவ்வளவு என்று சொல்ல முடியுமா?
தமிழில் மிகச் சிறந்த நூல் திருக்குறள் அதை உங்கள் வீட்டுக் குழந்தைகளில் எத்தனை பேருக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் அல்லது வாசித்துச் சொல்லி இருக்கிறீர்கள் . அதில் சொல்லாத விஷயத்தையா தமிழகத்திலிருந்து வரும் பிரபலங்கள் கற்றுக் கொடுத்துவிடப் போகிறார்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு எத்தனை பேருக்குத் தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்கள் என்னென்ன என்றாவது தெரியுமா ?
அமெரிக்காவில் உள்ள தமிழ் குழந்தைகள் தமிழைத் தமிழ்க் கலாச்சார பண்பாட்டைக் கொஞ்சம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் என்றால் தமிழகத்திலிருந்து சங்கங்களுக்கு அழைக்கப்பட்ட பிரபலங்களால் அல்ல தங்கள் வீட்டிற்குக் கோடைக் கால விடுமுறைக்கு வரும் தாத்தா பாட்டிகளினால்தான். இதை யாராவது மறுக்க முடியுமா?
இங்குள்ள சங்கத்தால் கிடைக்கும் உண்மையான பலன் என்னவென்றால் தங்களது நட்பு வட்டம் விரிவடைவதுமட்டும்தான் அதிலும் உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பு வட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே பலரும் இதனை பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான் மேட்டர் இப்படிச் செய்வதைத்தான் நாசூக்காகத் தமிழை வளர்க்கிறோம் கலாச்சாரம் வளர்க்கிறோம் என்று சொல்லுகிறார்கள்
டாட்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நீங்கள் சொல்வது சரி... திருக்குறள் ஒன்றே போதும் மனித வாழ்விற்கு...
ReplyDelete