Saturday, July 2, 2022

 

@avargal unmaigal

நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்


பாஜக கட்சிக்கு  மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2  தலைவர்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தர் கட்சி சார்பிலும் ஒருத்தர் அரசாங்க சார்பிலும் நியமிக்கப்படுகிறார்கள்.  அவர்களில் ஒருவர் ஆளுநர் என்று அழைக்கப்படுகிறார் மற்றொருவர்  மாநில தலைவர் என்று அழைக்கப்படுகிறார். இவர்களது வேலை கட்சிக் கொள்கைகளைப் பரப்புவது கட்சியை வளர்ப்பதுதான்


உலகில் உள்ள எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டுத் தலைவர்களே  எங்கள் ஜீயை  ஒடோடி வந்து வரவேற்கும் போதுவரவேற்கும் போது ஹைதாராபத்தில் உள்ள ஒரு சிங்கம் மட்டும் அடிபணியாமல் நிற்கிறது. வேண்டாம் ஜீ இந்த அவமானம்

உலகத்தில் எந்த நாட்டுத் தலைவர்களும் வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போது அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் போட்டோ செய்திக்காக மட்டுமே வெளிவரும் .  ஆனால்  அது மாதிரி எடுக்கும் போட்டோக்களை இந்தியப் பிரதமர் மட்டும் ஏதோ ஒரு சாதனை புரிந்த மாதிரி சமுக இணைய தளங்களில் வெளியிட்டு பெருமை கொள்வார். இதைத்தான் தமிழில்  அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பார்கள்

பிரதமரின்  மௌனம்   நாட்டில் நடக்கும் வெறுப்பு குற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போல இருக்கிறதா? 


ஜனாதிபதி பதவி  காலியானால் ஒரு தலித்தோ ஒரு பழங்குடியினரோ எளிதாக  ஜனாதிபதியாக முடியும் ஆனால் அரசு துறையில் ?

மத்திய சேவையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசியின் பின்னடைவு காலியிடங்கள்:
ரயில்வே துறை-17,769
பாதுகாப்புத் துறை- 8,594
வருவாய்த்துறை - 8,899
நிதித்துறை- 3,055
அஞ்சல் துறை-2,337
அணுசக்தி துறை-857
நகர்ப்புற வீட்டு வசதி துறை-555
மொத்த காலியிடங்கள்- 42,066
 SC, ST, OBC உரிமை கொள்ளை இன்னும் எவ்வளவு காலம் தொடரும்...?

வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று சொல்லும் மோடி அவர்களே இருக்கும் வேலை வாய்ப்பில் மக்களை பணி அமர்த்துவதில் என்ன தயக்கம் அவர்கள்  SC, ST, OBC என்ற சமுகத்தை சார்ந்தவர்கள் என்பதலா?ஃபேக்ட் செக்கர் சுபைரைப் பிடித்த காவல்துறை, இப்போது ராகுல் காந்தியைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜீ நியூஸ் தொகுப்பாளர் சிக்குகிறாரா என்று பார்ப்போம்மோடி வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது அவர்களுடன் போட்டோ எடுத்து தனது சமுக இணைய தளத்தில் பதிவது எனக்கு எப்படி தோன்றுகிறது தெரியுமா? இந்த அமெரிக்க தமிழ்சங்க தலைவர்கள்  தமிழ் சங்க விழாவிற்கு வரும் பிரபலங்களுடன் கூட சேர்ந்து செல்ஃபி எடுத்து தங்கள் சமுக இணைய தள பக்கங்களில் வெளிவிடுவது போலத்தான் இருக்கிறது. #பெட்னா நிகழ்விற்கு அப்புறம் பாருங்கள் ஹீஹீஹி

 

 பலவீனமடைந்து வரும் உங்கள் எலும்புகளை  ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள் 

@avargal unmaigalஅன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. வெங்கோலன் பொய்யும் புரட்டும் எ(ஏ)ட்டில் விரைவில் வரும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.