தமிழகத்தில் செஸ் போட்டி நடத்துவதால் என்ன பயன்?
கொரோனா மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரமே ஆடிக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியாவின் நிலையையோ சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.. இந்த நேரத்தில் தமிழகத்தில் மோடியின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி அமைந்து ஸ்டாலின் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி சாக்கடை போலத் தேங்கிக் கிடக்கின்றது..தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நியாயமாகக் கொடுக்க வேண்டிய நிதிகளைக் குறைத்தும் தாமதமாகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலின் தமிழக வளர்ச்சிக்காக முயற்சி செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்க அவரோ 100 கோடி செலவில் தனக்கு அற்புதமான ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக ஒரு செஸ் போட்டியைத் தமிழகத்தில் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அது மட்டுமல்ல ரஷ்யாவில் நடக்கவிருந்த இந்த போட்டி போர் காரணமாகத் தடை பெற்றதால் அதை வேறு எங்க நடத்தலாம் என்று ஆலோசனை நடந்ததைக் கேள்விப்பட்டதை அறிந்த ஸ்டாலின் அதைத் தமிழகத்தில் நடத்த முயற்சி செய்து இருக்கிறார் அதற்குக் காரணம் இப்படிப்பட்ட ஒரு நிகழவை தமிழகத்தில் நடத்தி அதில் பிரதமரைத் தலைமை தாங்க அழைத்து அவரை கௌரவப்படுத்தி அவருடன் நெருங்கிய உறவுகொள்ள இதை ஒரு மறைமுக வாய்ப்பாக பயன்படுத்தி செஸ்ஸில் ஒரு காயை நகர்த்துவது போல நகர்த்தி இருக்கிறார்.
இப்படி பிரதமரிடம் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில் தப்பேதுமில்லை ஆனால் அப்படி ஏற்படுத்திக் கொள்ளும் உறவால் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்றால் சரி ஆனால் அந்த உறவால் தம்து குடும்பத்திற்கு வருங்காலத்தில் பிரச்சனைகள் ஏதும் இருக்கக் கூடாது என்று நினைத்து குடும்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் தவறு
தமிழக மக்கள் எடப்பாடி அரசு மோசமான ஆட்சியைக் கொடுத்தது என்பதற்காக அவர்களைத் தூக்கி எறிந்து ஸ்டாலின் அவர்களிடம் கொடுக்கவில்லை/ அவர்கள் தூக்கி எரிந்து எல்லாம் மோடி மீது மோடி அரசின் மீது உள்ள வெறுப்பாலும் அவர்களின் ஆதிக்கம் அதிமுக மூலம் தமிழகத்தில் நடக்கிறது என்பதால்தான் அவர்கள் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள்.. அதை உணர்ந்தால் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது அப்படி இல்லை என்றால் எப்படி மோடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்தியா அவதிப்படுகிறதோ அது போலத்தான் தமிழகமும் அவதிப்படும்
முதலாண்டு ஆட்சியில் நல்ல பல செயல்களைச் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஸ்டாலின் இப்போது மக்கள் மனதிலிருந்து சறுக்கி விழ ஆரம்பித்து இருக்கிறார் . பல திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை என்று சொல்லும் போது செஸ் போட்டி நடத்த மட்டும் நிதி ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கின்றது என்று சாமானியரின் மனதில் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாது
புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்பத்தான் தமிழக முதல்வரின் நிலை இருக்கிறது போல
காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளினால் மக்கள் மனம் மாறி பாஜகவிற்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் ஆனால் இப்போது நடக்கும் பாஜக ஆட்சியினால் காங்கிரசே பரவாயில்லை என்ற மனநிலைதான் மக்கள் மனதில் இருக்கிறது அது போலத்தான் தமிழகத்திலும் அதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறினால்தான் திமுகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ளாமல் அதிமுக ஆட்சியே பெட்டர் என்று நிலைக்கு மக்களைத் தள்ளிவிட வேண்டாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு : இன்றைய நாள் சந்தோசமாக இருக்க #GoBackModi என்று சொல்லி இந்ந இனிய நாளை ஆரம்பிப்போம்
எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிப்பது போல இந்த நேரத்திலிருந்து 2 நாட்களுக்கு எந்த பதிவு போட்டாலும் முதலில் #GoBackModi போட்டுப் பதிவு எழுதவும்
தமிழகத்தில் நடப்பது செஸ் போட்டி அல்ல.. செஸ் பெயரில் நடக்கும் தலைவர்களுக்கான விளம்பரப் போட்டி, இந்த விளம்பரப் போட்டியில் மோடியைவிட ஸ்டாலின் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன,
செஸ் போட்டியைத் துவக்க வாங்க என்று அழைப்பிதழ் கொடுத்தவுடன் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக ஓடோடி வந்த மோடி தமிழக பிரச்சனைகள் பேசி தீர்க்க வாங்க என்றால் வந்திருப்பாரா என்ன? #GoBackModi

வெங்கோலன் முகத்தில் ஒரே குஷி... அது தான் பிரச்சனை...
ReplyDelete