Tuesday, August 3, 2021

@avargal unmaigal

யோசிக்கும் வேளையில் : மனிதர்களின் விசுவாசத்தை விட விலங்குகளின் விசுவாசம் அதிகம்தானே?


ஆறறிவு பெற்ற மனிதர்கள் நன்றாக இருக்கும் வேளையில் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதும் அவருக்கு மாலை மற்றும் பழங்கள் வாங்கி அர்ச்சனை செய்யும் மக்கள் உடல் நலம் குன்றுகையில் ஹாஸ்பிடலுக்கு ஒடி சென்று மருத்துவரிடம் சரணடைகிறார்கள். ஆனால் காப்பாற்றுவது என்னவோ மருத்துவர்கள் ஆனால் அதன் பின் நன்றி சொல்ல ஓடுவதோ கோயிலுக்கு என்ன மாதிரியான  மனிதர்கள் நாம்

ஆனால் ஐந்து அறிவு பெற்ற விலங்குகளைப் பாருங்கள்.. அதைக் காப்பாற்றும் மனிதர்களிடம் விசுவாசம் காட்டிக் கொண்டே இருக்கும்.


ஒருவன் கோபப்படுகிறான் என்பதால் அவனொன்றும் கெட்டவன் அல்ல அதே நேரத்தில் ஊமையாய் மௌனமாய் இருப்பவனெல்லாம் நல்லவனும் அல்ல...

கோபப் படுபவன் நடிக்கத் தெரியாதவன் புன்னகைக்கத் தெரிந்தவன் நடிக்கத் தெரிந்தவனாகக் கூட இருப்பான்




முகம் தெரிந்த நபர்களை இழந்து முகம் தெரியாத நபர்களைச் சேர்த்துக் கொள்ளும் இடமாக பேஸ்புக்கும் டிவிட்டரும் ஆகிவிட்டது

மனிதர்களுக்கு மனிதர்கள் மேல் ஏற்படும் பச்சாதாபத்தை விட நாய்கள் மீது ஏற்படும் பச்சாதாபம் அதிகம்



வளர்ந்த பிள்ளைகளை கை நீட்டி அடிக்க முடியாது திட்ட முடியாது என்ற காரணத்தால்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்



உங்கள் அன்புக்குரியவர்களுக்காக எப்போதும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்,நாளை உங்களுக்கு நேரம் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு உங்கள் சொந்தம் இல்லாமல் போக இந்த கொரோனாகாலத்தில் வாய்ப்புக்கள் அதிகம் .


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நல்லதொரு போதனைகள் தமிழரே...

    ReplyDelete
  2. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இக்காலத்தில் குறைந்து விட்டது.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    அன்புக்குரியவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் . தொலைக்காட்சி பெட்டி, கணினி வந்த பின் குடும்பமாக அமர்ந்து பல கதைகள் பேசி பொழுதுகள் போக்கிய காலம் குறைந்து விட்டது. அந்த நாளும் வந்து விடாதா? என்று ஏங்குபவர்களில் நானும் ஒருவள். மாலை நேரம் வீட்டு வாசலில், மொட்டை மாடியில் அமர்ந்து கதைகள் பேசி மகிழ்ந்த காலம், வானத்து நடசத்திரங்களை அடையாளம் காட்டி குழந்தைகளிடம் பேசிய காலங்கள், வானத்து மேகங்களில் தெரியும் உருவங்களை உனக்கு எப்படி தெரிகிறது என்று கேட்ட காலங்கள் மீண்டும் வர ஆசை.

    ReplyDelete
  4. இதில் சிலவற்றை பேதைமை என்கிறார் ஐயன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.