Tuesday, August 24, 2021

 

@avargal unmaigal

பாஜகவில் மட்டுமல்ல உலகமெங்கும் கே டி ராகவன்களால் சூழப்பட்டிருக்கிறது இந்த உலகு

தமிழகத்தில் இன்று கேடி ராகவன்  பற்றிய செய்திகள் பேசு பொருளாக இருக்கின்றது... கே டி ராகவன் செய்த தவற்றை உலகமெங்கும் உள்ள ஆண்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் அதிகார பதவியில் உள்ளவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலகத்தில் யாரும் செய்யாத தவற்றைக் கேடி ராகவன் செய்துவிடவில்லை.. குறிப்பிட்ட சிறிய சதவிகித ஆண்களைத் தவிரப் பல ஆண்கள் இப்படிப்பட்ட தவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அப்படிச் செய்யாமல் இருக்கும் சதவிகிதத்தில் இருப்பவர்கள் கூட சந்தர்ப்பம் வாய்க்காதவர்களும் அல்லது மிகப் பயந்த சுபாவம் உள்ளவர்களும் என்று கூட சொல்லாம், இன்னும் சுருங்க பார்த்தோமானால் ஒரு சதவிகித ஆண்கள்தான் ஒழுக்கம் மிக்கவர்களாக இருக்கக் கூடும் மீதி உள்ளவர்கள் தவறுகளைச் செய்துவிட்டு மாட்டிக் கொள்ளாதவரை யோக்கியர்களாகவே இருக்கிறார்கள்

@avargal unmaigal



தமிழகத்தில் கேடி ராகவன் மட்டுமல்ல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  போன்றவர்கள் மட்டுமல்ல நீயூயார்க் ஆளுநர்  ஆண்ட்ருகோமோ வரை இப்படி மாட்டிக் கொண்டவர்கள்தான்... ஆனால் என்ன அமெரிக்காவில் இப்படி மாட்டிக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதவிகளை இழப்பதோடு சட்டத்திற்குள் சிக்கி தண்டனை பெறுகிறார்கள் இப்படி கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தவறுகள் செய்யும் போது அதற்காக யாரும் கட்சியைக் குறை கூறுவதில்லை என்பதோடு கட்சியில் உள்ள மற்றவர்களும்  இவர்கள் செய்த தவறுகளுக்காக முட்டுக் கொடுப்பதில்லை,, இங்கே அமெரிக்காவில் ஆளுநர் பதவி என்பது  இந்தியாவில் உள்ள முதல்வர் பதவிக்கு இணையானது. அப்படிப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்த கோமோ என்பவர் சில பெண்களை அணைப்பது முத்தம் கொடுப்பது அவர்களின் பின் பக்கத்தில் தட்டுவது என்ற தவற்றைச் செய்து இருக்கிறார் அதைப் பற்றி பெண்கள் குற்றம் சாட்டியதும் அவர் பதவி விலகாமலிருந்த போது அவரது கட்சிமட்டுமல்ல அமெரிக்க அதிபரே பதவியிலிருந்து விலகி வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறார். இறுதியில் அவர் விலகி உள்ளார்.. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும்..


இப்போது நாம் இந்தியாவிற்குள் வருவோம்.. இப்போது கேடி ராகவன் செய்த தவற்றை உடனே மக்கள் அவரது கட்சியோடா சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள் அது மிகவும் தவறு அவர் செய்த தவறுக்கு கட்சி என்ன செய்யும்.. ஒரு வேளை கட்சி தலைமை அவர் செய்த தவறுக்கு முட்டுக் கொடுத்து அவரை ஆதரித்தால் அவரை ஆதரிப்பவர்களைத்தான் தோல் உரித்துக் காட்ட வேண்டுமே தவிரக் கட்சியைக் குறை சொலவது தவறு.


இன்று இணையம் முழுவதும் கேடி ராகவனைப் பற்றி எழுதும் யோக்கியர்கள் பலர் யாகூ சாட் ஆர்குட் மைபேஸ் போன்றவைகளில் தொடங்கி இன்று பேஸ்புக் இன்பாக்ஸ் மூலம் பல பெண்களுக்குக் கேடி ராகவன் செய்தது போலத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கேடி ராகவன் போல மாட்டாத வரை இவர்கள் யோக்கியர்கள்தான்


மக்களுக்குச் சேவை செய்யக் கட்சி பதவிகளில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்கக் கேட்டுக்களை ஏன் செய்கிறார்கள் அதன் பின் கேவலப்பட்டு தலை குனிந்து நிற்கிறார்கள் அவர்கள் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்தானே தங்கள் ஆசைகளை அரிப்புக்களைத் தீர்க்க சில லட்சங்களை செலவழித்து தாய்லாந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வியாரப் பூர்வமாகச் செயல்படும் பெண்களிடம் தங்களை ஆசைகளைத் தீர்க்க வேண்டியதுதானே


ஒரு தனிப்பட்ட யூடியுப் சேனல் நடத்தும் மதனால் இந்த செய்தி வெளி உலகிற்குக் கொண்டு வரமுடிகிறது என்றால் பிரபல செய்தி நிறுவனங்கள் இப்படிப்பட்ட செய்திகளை வெளிக் கொணர வரமுடியாதது ஏன்... அவர்களுக்குத் தெரிந்தும் அவர்களால் கொண்டவர் முடியவில்லை என்றால் அவர்களும் ஆதாயங்களுக்காகச் செயல்படும் மாமாக்கள்தானே அவர்களுக்கும் இந்த கேடி ராகவனுக்கு என்ன வேறுபாடு


இந்த விஷயம் தனிப்பட்டவரின் பிரச்சனை அதனால் இதனைக் கட்சியோடு தொடர்புப் படுத்தி விமர்சிக்கக் கூடாது கட்சியை விமர்சிக்க வேண்டுமென்றால் அதன் கொள்கைகள் கோட்பாடு அதன் திட்டங்களை விமர்சிக்கலாம் அது போலக் கட்சி தலைமையும் இது போன்று தவறுகள் செய்பவர்களுக்குத் துணை போகாமல் இருக்க வேண்டும்


https://youtu.be/vTWayYsaPw4


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. //மீதி உள்ளவர்கள் தவறுகளைச் செய்து விட்டு மாட்டிக் கொள்ளாதவரை யோக்கியர்களாகவே இருக்கிறார்கள்//

    இதுதான் உண்மை நண்பரே...

    ReplyDelete
  2. சொன்ன கருத்து சரியே... ஆனால்...

    வழக்கம் போல் ஒரு பெரிய பதவி உண்டு...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.