Saturday, August 28, 2021

சும்மா ஜாலியாக எழுதிய கிறுக்கல்கள்

 

@avargal unmaigal



இளம் வயது பெண்களின் கவலை எல்லாம் உதட்டிற்கு மேல் முடி வளர்கிறதே என்றுதான் அது போல இளம் வயது ஆண்களின் கவலை எல்லாம் தலியில் இருந்து முடி கொட்டி வழுக்கையாகிறதே என்றுதான்

பெண்கள் தங்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்காமலே தங்களுக்கு ஆண்களுக்குச் சமமான உரிமைகள் வேண்டுமென்று  போராடிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினாலே அவர்கள் ஆண்களை விட அதிகமான உரிமைகளைப் பெற்று இருப்பது புரியும்


அழகான பெண்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் நல்லவர்களாக இருக்கும் பெண்கள் எல்லோரும் மிக அழகாக இருப்பார்கள் என்பது நிச்சயம்


காரில் ரேடியா இருப்பதற்குப் பதிலாக டிவி வைத்து கார் தயாரிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லா ரேடியோ ஸ்டேஷங்களும் இழுத்து மூடப்படும்


நீங்கள் யாருடைய ஆலோசனையும் கேட்கவில்லை என்றால், நீங்கள் ஒரு முட்டாள்.  அதே நேரத்தில் நீங்கள் அனைவரின் ஆலோசனையையும் கொண்டு இருந்தால் நீங்களும் ஒரு முட்டாள்.

பஸ்ஸில், யாரவது என் அருகில் அமரும்போது நான் வெறுக்கிறேன் ஆனால் யாருமே என் அருகில் அமரவில்லை என்றால் எல்லோரும் என்னை வெறுக்கிறார்களோ என்று  நினைத்து  என் மனம்  புண்படுகிறது



குடிப்பதை விட்டு விடுவோருக்கு இந்த சமுகம் தரும் மரியாதையைக் குடிக்காமல் இருப்பவர்களுக்குத் தருவதில்லை. அதனால் மக்களே குடிக்க ஆரம்பித்து பின் அதை விட்டுவிடுங்கள்





அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. Replies
    1. கிறுக்கும் போது சில கிறுக்கல்கள் நன்றாக வந்துவிடுகிறது முரளி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.