Monday, August 9, 2021

 

@avargal unmaigal



நம்ம வீட்டு பெண் ஜோதிமணி


மிக எளிமையான விவசாயக்குடும்பத்தில் பிறந்து எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாதக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான ஜோதிமணி அவர்கள் இன்று பாரளுமன்ற உறுப்பினராக  தடைகள் பல கடந்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்.


சாதாரண மக்களுக்கு நேர்மையும்  போராட்டக் குணமும் கடும் உழைப்பும்தான்  எந்தத் துறையிலும்  வெற்றிபெற  அணிகலன்களும் ஆயுதமாகவும் உள்ளன. இவை இருந்தால் அரசியலில் மட்டுமல்ல எந்தத் துறையிலும் நாம் வெற்றிபெற முடியும். அப்படி ஒரு ஆயுதம் தரித்து ஒருவர் வெற்றி பெற்று இருக்கிறார் என்றால் அவர் ஜோதிமணிதான்

எப்படி ஒருவர் ஒலிம்பிக்கில் தன்னுடைய சுய முயற்சியால் வெற்றிப் பெற்றுத் தங்கப்பதக்கத்தைப் பெற்று இருக்கிறாரோ அது போலத்தான் அரசியல் என்ற விளையாட்டில் பல பெருச்சாளிகளைச் சமாளித்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்,

இந்த வெற்றியின் மூலம் அவர் வெற்றியின் ஆரம்ப படிக்கட்டில் ஏறி இருக்கிறார். அவர்  ஏறி செல்ல வேண்டிய படியோ இன்னும் அதிகம் நிச்சயம் அந்த படிகளில் அவர் ஏறி உயர செல்வார் செல்ல வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் நான் அவரை வாழ்த்துகின்றேன்

இவரது பிறந்தநாளை யார் கொண்டாடுகிறார்களோ இல்லையோ பெண்ணிய இயக்கங்கள் முன் வந்து கொண்டாடி இருக்க வேண்டும் சமுக இணையதளங்களில் களம் ஆடும் பெண்கள் இவரை கொண்டாடி இருக்க வேண்டும்..

ஆனால் இன்றைய பெண்கள் அப்படி யாரும் செய்யமால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது போன்ற சமுக இணையதளங்களில் வரும் ட்ரெண்டுகளில் பங்கேற்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..


நேர்மையாக  போராடி உயர்ந்த நிலைக்கு வரும் பெண்கள் எந்த கட்சியாக இருந்தால் என்ன சாதியாக  இருந்தால் என்ன இனமாக இருந்தால் என்ன மதமாக இருந்தால் என்ன அவர்களை பாராட்டி சிறப்படைய செய்வதுதானே பெண்களுக்கு பெருமை அப்படி பாராட்டுவதால்தானே மேலும் பல பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் அதை பார்க்கும் மற்ற பெண்களும் துணிச்சலாக நேர்மையாக போராடி வெற்றிகளை பறிப்பார்கள் ஆணுக்கு இணையாக  வருவார்கள்


பெண்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்து கொண்டுன் மொக்கை பதிவுகளை சமுக இணையதளங்களில் பதிந்து கொண்டு இருந்தால் மட்டும் சமுகம் மாறிவிடப் போவதில்லை.... ஜோதிமணி மாதிரி களம் இறங்கி போராட வேண்டும் அப்போதுதான் சிறிதளவாவது மாற்றங்கள் வரும்.

https://www.facebook.com/jothiiyc

https://twitter.com/jothims

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. வாழ்த்துக்கள் ஜோதிமணிக்கு.
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.