Monday, August 16, 2021

 

@avargal unmaigal

சுதந்திர அமெரிக்க vs  சுதந்திர  இந்தியா சில ஒப்பீடுகள்



அமெரிக்காவில் படிப்பில் சுதந்திரம் யார் எந்த வயதிலும் என்ன சப்ஜெக்ட் எடுத்தும் படிக்கலாம். ஆனால் இந்தியாவில் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பதை ப்ளஸ் டூவில் நாம் எடுக்க குருப்பிலே முடிவு கட்டப்படுகிறது

அமெரிக்காவில் பெண்கள் யாருடைய கேலிக்கும் தவறான பார்வைக்கும் உட்படாமல் தனியாக வாழச் சுதந்திரம் உண்டு தவறான நோக்கத்தில் யாரும் அணுக மாட்டார்கள்

பெண்கள் தனியாக ரயில் பஸ் போன்றவற்றில் இடிமன்னர்களின் உபத்திரம் இன்றி பயணம் செல்லாம்..

ஆண்களின் வெறித்து நோக்கும் பார்வைகள் இன்றி சுதந்திரமாக உலாவலாம்

கெளரவ கொலைகள் பற்றி பயம் இல்லாமல் விரும்பியவரைக் காதலிக்கலாம் கல்யாணம் செய்யலாம் ஏன் எளிதாக விவாகரத்தும் செய்யலாம்


பெண்களிடம் அதிபர்கள் தவறாக நடந்தால் தைரியமாக வழக்கு தொடர்ந்து சுதந்திரமாக நடமாடலாம் உ.ம் New York/Governor
Andrew Cuomo க்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்கள் இரவில் கூட தனியாகச் செல்லாம் ஆனால் பிறந்த நாட்டில் அப்படி எல்லாம் செய்துவிட்டு உயிரோட இருக்க முடியாது

அமெரிக்காவில்  நாம்  விரும்பும் எதையும் சாப்பிட அல்லது குடிக்கச் சுதந்திரம். ஆனால் இந்தியாவில் - அதிகம் இல்லை. நீங்கள் மாட்டிறைச்சி தடை அல்லது மத விரதம் போன்றவற்றிற்கு உட்பட்டிருக்கலாம். குறிப்பிட்ட மத பண்டிகைகள் சமயத்தில் மாமிசம் விற்கத் தடை உண்டு அது போலக் காந்தி ஜெயந்தியின் போது மது விற்கத் தடை ஆனால் இங்கு அப்படி இல்லை

அமெரிக்காவில் பகிரங்கமாகக் காதலி/மனைவி மீது பாசத்தைக் காட்டும் சுதந்திரம் உண்டு ஆனால் இந்தியாவில் அதிகம் இல்லை.  ஏன் சமுகம் அதை ஆதரிப்பதில்லை

அமெரிக்கா - ஒரு தொழிலை அல்லது ஆர்வத்தைத் தேர்வு செய்யச் சுதந்திரம் உண்டு அதை குடும்பத்தினர் கட்டுப்படுத்துவதில்லை  ஆனால் இந்தியாவில்   உங்கள் குடும்பம் உங்கள் முடிவைப் பாதிக்கலாம். அவர்களின் ஆதிக்கம் உண்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ஒப்பீடுகள் நல்லாதான் இருக்கிறது.

    இருப்பினும் நமது கலாச்சாரத்தை நாம் மறந்து விட்டோம் ஆனால் அமெரிக்கர்கள் விரும்புகின்றனரே...

    ReplyDelete
    Replies

    1. இந்தியர்கள் இந்தியாவில் தமது கலாச்சாரத்தை ஒழுங்காக பின்பற்றுவதை விட அமெரிக்காவிற்கு வந்த இந்தியர் தமது கலாச்சாரத்தை விடாமல் பகடை பிடித்து வருகிறார்கள் இங்கு கோவில்கள் மிக அதிகம் அதுவே ஒரு சாட்சிதானே அதுமட்டுமல்ல இந்தியாவில் இந்தியாவின் சுதந்திர திக கொண்டாத்தைவிட அமெரிக்காவில் இந்தியர்கள் கொடியுடன் உணர்ச்சியுடன் கொண்டாடும் கொண்டாட்டங்களும் அதிகம்

      Delete
    2. இது நூறு சதவீதம் உண்மை எல்லா நாட்டிலுள்ள இந்தியர்களுமே...

      Delete
  2. கட்டுப்பாடற்ற சுதந்திரம் எப்பவுமே ஆபத்து!  சுவாரஸ்யமும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. கட்டுபாடற்ற சுதந்திரம் ஆபத்துதான் ஆனால் நான் மேற்கூறியவைகளுக்கு கட்டுப்பாடுகள் தேவையில்லை மேற்கூறியவைகளுக்கு கட்டுப்பாடு விதித்தால் அதுதான் நல்லது அல்ல ஸ்ரீராம்

      Delete
  3. சகிப்புத் தன்மை இங்கு அதிகம்...! ?

    ReplyDelete
    Replies
    1. உண்மை உங்கள் கருத்தோட முழுமையாக ஒத்துப் போகின்றேன் தனபாலன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.