வாழ்க்கையில் நம்மை காயப்படுத்தும் மற்றும் நமக்கு வலியை ஏற்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள்,
ஆனால் நாம் மன்னிக்கவும் மறக்கவும் மற்றும் வெறுப்புணர்வு கொள்ளாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள் உள்ளன,
ஆனால் நாம் நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவைகள் மூலம் வளர வேண்டும்.
வாழ்க்கையில் வருத்தங்கள் இருக்கதான் செய்யும். நாம் அதனோடு வாழக் கற்றுகொள்ள வேண்டும்,
ஆனால் கற்றுக் கொண்ட பின் கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழகாலத்திற்கு அதை மறந்து வந்துவிட வேண்டும், அதை நம்மால் மறக்க முடியுமே தவிர மாற்ற முடியாது என்பதை உணர கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் சிலரை நிரந்தரமாக என்றென்றும் இழந்துவிடுவோம், அவர்களை திரும்ப பெற முடியாது
ஆனால் நாம் அதை மறந்து விட்டுவிட்டு முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும் தடைகள் இருக்கும்,
ஆனால் நாம் இந்த சவால்களை சமாளிக்க மற்றும் வலுவாக வளர கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் விரும்புவதிலிருந்து நம்மைத் தடுக்கும் அச்சங்கள் உள்ளன,
ஆனால் உள்ளிருந்து தைரியமாக அதை எதிர்த்துப் போராட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுள் நம் கைகளை அவரது கைகளில் வைத்திருக்கிறார். நம் எதிர்காலத்திற்கான திறவுகோலை அவர் வைத்திருக்கிறார்.
நமது ள் கதி அவருக்கு மட்டுமே தெரியும்.
அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், எல்லாவற்றையும் அறிவார்.
வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் உண்மையில் ஒரு காரணத்திற்காக நடக்கும்: "கடவுள்தான் அதற்கு காரணம்"
ஏ. எம் .புளோரஸ் ஆங்கிலத்தில் எழுதியவற்றின் தமிழ் ஆக்கம்
இன்று நான் படித்தில் இது பிடித்ததினால் அதை தமிழாக்கம் செய்து தந்து இருக்கின்றேன். நிச்சயம் இது உங்களுக்கும் பிடிக்கும் என கருதுகின்றேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பிடிச்சுது... எனக்கும் பிடிச்சுது...!
ReplyDeleteஎனக்கு பிடித்தது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி
Deleteஅருமை...
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி
Deleteசிறப்பான பகிர்வு. மொழியாக்கம் செய்து பகிர்ந்து கொண்டது நன்று.
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி
Deleteஆஹா ட்றுத் எப்போ ட்ருத்தானந்தா ஆனார்:)). இது நாட்டுக்கு நல்லதில்லையே:)).
ReplyDeleteஉண்மைதான்.. மகிழ்வோடு மட்டுமல்ல வலிகளோடும் வாழக் கற்றுக்கொள்ளோணும்:).. இப்போ கொரோனாவோடு வாழக் கற்றுக் கொண்டதைப்போல ஹா ஹா ஹா..
ஆஹா அதிசயம் அல்லவா நடக்குது நான் என்னவோ நீங்க டிரெம்பு கூட சேர்ந்து சந்திர மண்டலத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா சென்றுவிட்டதாக நினைச்சு இருந்தேன் நல்லா இருக்கேளா உங்க தோழி எப்படி இருக்காக?
Deleteஎன்னாது ஜந்திரமண்டலத்திலயோ?:)) நான் ஊரியூப் மண்டலத்தில் எல்லோ இருக்கிறேன்ன்:)).. டோழி எப்பூடி இருக்கிறா என ருத்தூஊஊஉ விசாரிச்சார் என்றேன்ன்:)) தான் டெம்ம்ம்ப பிசி எனச் சொல்லச் சொன்னாங்க:)) ஹா ஹா ஹா
Delete.. :>) :-) :)..
ReplyDeleteஒண்ணுமில்லை கொஞ்சம் உங்கட எமோஜிஸ் உடன் வெளாடினேன்:))
வயசு ஆயிடுச்சினா குழந்தை மாதிரி மாறி விளையாடுவது இயற்கைதானே
Deleteவய்சு ஆயிடுச்சா?:)) உங்களைப்பார்த்தா வயசானவர்போல தெரியேல்லையே ட்றுத்:))) :p :>)
Delete(h)
ReplyDelete