Monday, August 9, 2021

 பழனிவேல் தியாகராஜனின் வெள்ளை அறிக்கையும் எடப்பாடியின் நக்கல் பேச்சும்


@avargalunmaigal

@avargalunmaigal

@avargalunmaigal

@avargalunmaigal

@avargalunmaigal

@avargalunmaigal




தமிழக அரசின் வருமானம் கடந்த ஆண்டுகளில் குறைந்து இருக்கிறதாம். ஆனால் ஆட்சி செய்த எங்களின்  வருமானம் உயர்ந்து  அல்லவா இருக்கிறது இதைத்தான் நாங்கள் வெற்றிநடை போட்டதுன்னு சொன்னோமய்யா


யோவ் மிக்ஸர்  நாம் இவ்வளவு கடனையும்  வாங்கி  அனுபவிச்சுவிட்டு  நைசா  எஸ்கேப் ஆயிட்டோம். பாவம் ஸ்டாலின் இது தெரியாமல் கிஷோருக்கு 350 கோடி கொடுத்து ஜெயிச்சிட்டு வந்து இருக்கிறாரு ஹீஹீ

பழனிவேல்தியாகராஜனின் வெள்ளை அறிக்கைக்கு நாம் இப்படிக்கா பதில் அறிக்கை விடுவோம்.. நாங்கள் தமிழகம் முன்னேற முதலீடுகளை பெற்றதை திமுகவினர் காழ்புணர்ச்சியில் அதை கடன் என்று சொல்லுகிறார்கள். முதலீடுக்கும் கடனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் எல்லாம் நிதி அமைச்சராக இருந்தால்  எப்படி?

யோவ் மிக்ஸர் ஸ்டாலின் ஆட்சியை பிடித்த மாதிரி ராகுலும் ஆட்சியை பிடித்து வெள்ளை அறிக்கைவிட்டாதான் நம்ம டாடி மோடி செய்த வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில்தான் ஒடும் நாம் ஒவ்வொரு தலைக்கும் 2.5 லட்சம் கடன் தான் வைச்சிட்டு போனோம் ஆனால் நம்ம டாடி ஒரு தலைக்கு மினிமம் ஒரு கோடி வைச்சிருப்பாரு அதுமட்டுமல்ல செத்த தலைக்கும் சேர்த்தும் கடன் வாங்கி இருப்பாரு. நம்ம டாடிதான் கில்லாடி ஆச்சே

யோவ் மிக்ஸர் நாம் தமிழகம் முன்னேற வாங்கினால் அது கடனாம் அதை போல மோடி இந்தியா முன்னேற வாங்கினா அது முதலீடாம்.


யோவ் மிக்ஸர்  பழனிவேல்ராஜன் கணக்கு பார்த்து சொன்னப்பதான் தெரியுது நாம் இவ்வளவு கடன் வாங்கி இருக்கிறோம்


யோவ் மிக்ஸர் நாம நல்லவங்க என்பதால்தானே இவ்வளவு கடன் நம்மை நம்பி தந்திருக்காங்க...பாவம் ஸ்டாலினுக்கு யாரு கடன் தரப் போறாங்க

யோவ் மிக்ஸர் நாம் கடன் வாங்கி ஜாலியா ஆட்சி செய்தோம். மக்கள் எடப்பாடி மிக திறமையாக ஆட்சி செய்தாக சொன்னாங்க, இப்ப பாரேன் ஸ்டாலின் கஷ்டப்பட்டு நாம வாங்கிய கடனை அடைக்க  போறார் ,ஆனால் அதை மோசமான ஆட்சின்னு சொல்லுவாங்க.. நாம அம்மா கொடநாட்டுல 5 வருஷம் அமைதியா இருந்த மாதிரி  இருந்தால் அடுத்த ஆட்சி நம்ம ஆட்சிதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.