மோடியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் மனசாட்சி சொன்னப் பதில்கள்
மதுரைத்தமிழன் : மோடிஜி பி. எம் .கேர் மூலம் பெறப்பட்ட பணம் எவ்வளவு அதை என்ன செய்தீர்கள்?
மோடிஜி : நான் என்ன செய்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. தெரிந்த விஷயத்திற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.
மதுரைத்தமிழன் : நாட்டுமக்கள், நீங்கள் நல்லது செய்வீர்கள் என்று நம்பித்தானே உங்களைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள்?
மோடிஜி : ஆனால் நாட்டுமக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் தேர்தலில் நின்று ஜெயிக்கவில்லையே
மோடிஜி : நான் சொல்லுவதை எல்லாம் நீங்கள் நம்பிவிடுவீர்களா?
மதுரைத்தமிழன் :நீங்கள் டீ விற்றது உண்மைதானா?
மோடிஜி : நீங்கள் பார்க்கவில்லை வாங்கி குடிக்கவில்லை என்றால் அது உண்மைதான்.
மதுரைத்தமிழன் :நீங்கள் தலைவரானதற்கும் பிரதமர் ஆனதற்கும் நன்றி சொல்வதென்றால் யாருக்கு சொல்வீர்கள்?
மோடிஜி : ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கு மட்டும்தான்
மதுரைத்தமிழன் :அத்வானி உங்களின் குருவாக இருந்து வழி நடத்தியவர்தானே அவரை ஓரம்கட்டிவிட்டு நீங்கள் பிரதமர் ஆகிவிட்டது பற்றி?
மோடிஜி : கற்றுத் தரும் ஆசிரியர்கள் விஞ்ஞானிகளாகவோ டாக்டர்களாகவோ அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக ஆக முடியாது ,கற்றுக் கொள்பவன்தான் அப்படி ஆகமுடியும். அது போலத்தான் நானும் பிரதமர் ஆகி விட்டேன் அவர் இன்னும் குருவாகவே இருக்கிறார்.
மதுரைத்தமிழன் : இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன....ஆனால் சம்ஸ்கிருதத்திற்கு என்று எந்த மாநிலமும் ஒதுக்கப்படவில்லையே ஏன்?
மோடிஜி : அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இப்போது போல வலுவாக இல்லாததும் மேலும் நான் அப்போது சின்னப் பையனாக இருந்ததாலும்தான்..
மதுரைத்தமிழன் :அம்பானி. அதானி அவர்களின் நல்லதிற்காகவே நீங்கள் திட்டங்கள் தீட்டிச் செயல்படுவதாக சொல்கிறார்களே?
மோடிஜி : நீங்களே சொல்லிட்டீங்க அவர்களின் நல்லதிற்காக திட்டம் போடுகின்றேன் என்று, நண்பர்களின் நலத்திற்கு உதவுவது தப்பு இல்லையே?
மதுரைத்தமிழன் :மக்களின் நலத்திற்குத் நீங்கள் போட்ட திட்டங்களால் மக்கள் பலன் ஏதும் பெறவில்லையே?
மோடிஜி : நான் கீதையை படித்து அதைப் பின்பற்றுபவன் .அதனால் என் கடமையைச் செய்கின்றேன். அதாவது திட்டம் போடுவது அதன் பிறகு பலனை எதிர்ப்பார்ப்பதில்லை
மதுரைத்தமிழன் :கொரோனா ஆரம்பித்ததில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டனவே?
மோடிஜி : அதனால் என்ன நான் வெளிநாடு செல்லாததால் சேவீங் ஆகும் பணத்தை வைத்தே இந்திய மார்க்கெட்டில் முதலீடு செய்து இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியுமே
மதுரைத்தமிழன் :தமிழக மக்களுக்கு நீங்கள் நல்லது ஏதும் செயவ்தில்லையே ஏன்?
மோடிஜி : அவர்கள் எனக்கு என்ன நல்லது செய்துவீட்டார்கள் பதிலுக்கு அவர்களுக்கு நான் நல்லது செய்யவதற்கு
மதுரைத்தமிழன் :ஏன் தமிழக பாஜக தலைவர்களால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியவில்லை?
மோடிஜி : அவர்கள் எல்லோரும் துக்களக்கின் வாசகர்களாக இருக்கிறார்களே அதனால்தான்
மதுரைத்தமிழன் :சங்கிகளால் தமிழக சாணக்கியர் என்று சொல்லப்படும் குருமூர்த்தி பற்றி சில வரிகள்?
மோடிஜி : பூணல் அணிந்த ஒரு எடப்பாடி அவர்
மதுரைத்தமிழன் :ஸ்மிதிராணி பற்றி?
மோடிஜி : நான் படித்த கல்லூரியில் எனக்கு ஜுனியர் அவர்
மதுரைத்தமிழன் :ரஜினிப் பற்றி சில வரிகள்?
மோடிஜி : அவர் ஒரு சுயநலவாதி தேசதுரோகி தேசநலன் முக்கியம் என்று கருதி இருந்தால் அவர் கட்சி ஆரம்பித்து ஸ்டாலின் முதல்வர் ஆனதை தடுத்து இருக்கலாம்
மதுரைத்தமிழன் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சில வரிகள்?
மோடிஜி : என்னை எதிரி என்று சொல்லிக் கொண்டே நட்பு உறவு கொள்ள நினைக்கும் ஒரு மனிதர். கலைஞர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவர் என் கொள்கைகளைத்தான் எதிர்க்க்கிறார் என்னை அல்ல..
அன்புடன்
மதுரைத்தமிழன்
எல்லா கேள்விகளுமே ஸூப்பர் தமிழரே..... .
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Deleteநல்லா இருக்கு... ஆனால் இல்லாத ஒன்று பதில் சொல்லி உள்ளது...
ReplyDeleteமிகச் சரியாக சொன்னீர்கள் தனபாலன்
Deleteநல்ல கற்பனை. புன்னகைக்க வைக்கிறது.
ReplyDelete