Saturday, August 28, 2021

 

@avargal unmaigal

வடிவேலின் புதிய திரைப்படபிரவேசம் அவருக்கு வெற்றியை தருமா?
 

வடிவேலு நடிப்பதற்குப் போடப்பட்டிருந்த ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.  அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிகச் சந்தோஷம். ஒரு நல்ல நடிகனை முடக்கி இருந்தது தமிழ் திரைத்துறை உலகம்... அவர் மீது தப்பு இருந்தாலும் அதை விரைவில் முடித்து வைத்து அவர் நடிக்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்... ஆனால் அதற்கு ஏன் இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை அது சிதம்பர ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது.. இது போல உள்ள பிரச்சனையில் பிரபல நடிகர்களான விஜய் அஜித் கமல் ரஜினி சூரியா தனுஷ் சிக்கி இருந்தால் அவர்களின் பிரச்சனை ஒரிருநாளில்  தமிழ் திரைத்துறை உலகம் தீர்த்து வைத்திருக்கும். ஏன் அவர்களே பெரிய தலைவர்களுக்கு பூங்கொத்தை எடுத்துப் போய் பிரச்சனைகளை சமாளித்து இருப்பார்கள் ஆனால் பல ஆண்டுகளாக பீல்ட்டில் அவுட்டா இருந்தாலும் வடிவேலு எங்கையும் யாரிடமும் கைகட்டி குனிஞ்சு நின்னு வீழ்ந்த தம் தொழிலை நிமிர்த்த முயற்சித்ததைப் பார்த்திருக்கீங்களா?இல்லைதானே.

வடிவேலு போன்றவர்களுக்கு இந்த நீண்ட பிரேக் வரும் காலத்தில் முன்பு போல அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பை அதிகம் கொடுக்கப்போவதில்லை . மீண்டும் வடிவேலு நடிக்க வந்தாலும் அவர் முன்னைப் போல வெற்றி பெறமாட்டார் என்றுதான் நினைக்கின்றேன் காரணம் மக்களிடம் அதீத எதிர்பார்ப்புக்கள் இருக்கும் போது அவர் நடிக்கப் போகும் படம் சரியவர அமையவில்லை என்றால் அவ்வளவுதான் முன்பு வடிவேல் நடிக்கும் போது எதிர்பார்ப்புக்கள் அதிகம் இல்லை  அதனால் அவரது வேடங்கள் முகபாவனைகள் நடிப்பு அதிக வெற்றியைக் கொடுத்தன.ஆனால் இந்த நீண்ட இடைவெளிக்கு அப்புறம்  இப்போது மக்களிடம் அதிகமாக இருக்கிறது.. இது அவருக்கு ஆபத்துதான்


முன்பு அவருக்கு இருந்த ஒல்லியான உடல் தேகமும் அதனோடு சேர்ந்த ஒட்டிய முகமும் மிகவும் பொருந்தி வந்ததது ஆனால் இப்போது அவரின் உடல் அமைப்பு மிகவும் மாறிவிட்டது ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கவுண்ட மணி பல ஆண்டுகளுக்குக் கழித்து ஒரு படத்தில் நடித்ததும் அந்த படம் மிகவும் வெற்றி பெறவில்லை காரணம் அவர் உடல் அமைப்பு மாறிப் போய்விட்டதும் குரல் முன்பு போல இல்லாததும் ஒரு காரணம்தானே

எல்லோருக்கும் உச்சம் ஒரு முறைதான் வரும் அந்த உச்சத்தை வடிவேலு அடைந்துவிட்டார் அவருக்கு இரங்கு முகம் ஆரம்பிக்க வேண்டிய நிலை வருவதற்கு முன்பே அவர் ஒரங்ககட்டப்பட்டு இப்போது அவர் மீண்டும் வரும் போது மீண்டும் உச்சம் அடைய வாய்ப்பே இல்லை மேலும் காலமும் மாரிக் கொண்டே வருகிறது எப்படி ஒரு காலத்தில் ரஜினிக்கு அரசியலில் உச்சம் இருந்தது அப்போது அவர் வந்து இருந்தால் அவர் அரசியலில் மிக உச்சம் அடைந்து இருப்பார் ஆனால் அவர் அதற்கு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் வரும் போது கால சூழ்நிலை மாறி அவர்  அரசியலில் கேலிக்குரியவர் ஆக்கப் பட்டு இருக்கிறார் அது போல இந்த நீண்ட கால இடைவெளி வடிவேலுக்கும் சருக்கல்களாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்


ஒருவேளை அவர் நடிக்கும் முதல் படத்தில் மோடியை அல்லது அவரது ஆட்சியை வைத்துக் கலாய்த்து நடித்தால் அந்த படம் மிக சக்ஸஸ் ஆகலாம் அது தமிழ் தெரிந்தவர்களிடையே மிகப்  பிரபலம் ஆகி வடிவேலு மீண்டும் பேசும் பொருளாக வலம் வரலாம் ஆனால் அதன் பின் ஒன்றிய அரசிடம் இருந்து அவருக்குத் தொந்தரவு வரலாம் அதை அவர் சமாளித்தால் மீண்டும் திரைத்துறையில் வலம் வரலாம்.

இதற்கு வடிவேலு மோடிவேலு வேஷம் போட வேண்டும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. வழக்கம் போல் இயல்பான பாத்திரத்தில் நடிக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அவர் இயல்பாக நடித்தாலும் காலச் சூழ்நிலை மாறியுள்ள நேரத்தில் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுகிறது எனக்கு

      Delete
  2. நிதர்சனம் தெரிந்தாலும், வடிவேலு வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவர் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன் ஆனால் மனதினுள்ள தௌ முடியுமா என்று கேள்வியும் எழுகிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.