Sunday, August 29, 2021

 

@avargal @unmaigal

மதன் ரவிச்சந்திரனை பின்புறம் இருந்து இயக்குவது  எஸ்.குருமூர்த்தியாக  இருக்குமோ?


மதன் ரவிச்சந்திரனை பின்புறம் இருந்து இயக்குவது யாராக இருக்கும் என்ற பார்த்தால் அவர் நிச்சயம்  தமிழக சாணக்கியன் என்று சொல்லும் குருமூர்த்தியாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். இந்த சாணக்கியர் ரஜினியைத்  தமிழக அரசியலுக்கு இழுத்து வர முயற்சி செய்து தோல்வியைத் தழுவினார் இவருக்குத் தமிழ பாஜக தலைவர் பதவியின் மீது நீண்ட நாள் ஒரு கண் ஆனால் என்னவோ யார் யாருக்கோ அந்த பதவி கிடைத்தாலும் தனக்கு அந்த பதவி கிடைக்கவில்லை என்பது அவரின் மிகப் பெரிய ஆதங்கம். ஏன் தலித்தைச் சார்ந்த முருகன் அந்த பதவியில் அமர்ந்து விட்டார் அதன் பின் நேற்று முளைத்த காளானாக இருந்த அண்ணாமலையும் அந்த பதவிக்கு வந்து விட்டார் ஆனால் நீண்டகால ஆர் எஸ். எஸ். காரராக இருக்கும் தனக்கு அந்த பதவி கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் ஒடி இருக்க வேண்டும். அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து தூக்கிவிட்டால் அந்த பதவி  தன்  இனத்தைச் சார்ந்த ராகவனுக்குப் போக வாய்ப்பு உண்டு என்று  உணர்ந்து இருக்க வேண்டும் இதை எல்லாம் தவிர்க்கத்தான் ராகவன் அண்ணாமலை போன்றவர்களை மதன் மூலம் சிக்க வைத்திருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

#குருமூர்த்தி செய்வதை செஞ்சுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார் போல

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. Replies
    1. நானும் அப்படி இருக்கலாம் எனத்தான் நினைக்கின்றேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.