Sunday, September 5, 2021

 

@avargal unmaigal


கடந்த காலம்  அது நம்மைவிட்டுக் கடந்து போன காலம்


கடந்த காலம்  அது நம்மைவிட்டுக் கடந்து போன காலம் ஆனால் ஒரு சிலர் அதைவிட்டு விடாமல் தலையில் சுமந்து கொண்டே திரிகிறார்கள் அது அவர்களின் தலையைக் கரையான் அரிப்பது போல அரிக்கிறது


நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும்,நீங்கள் எவ்வளவு யோசித்தாலும், நீங்கள் எவ்வளவு அழுதாலும் பரவாயில்லை. ஆனால் நடந்ததை உங்களால் மாற்ற முடியாது


ஏனென்றால் கடந்த காலம் ஒரு காரணத்திற்காகக் கடந்த காலம். அது போய்விட்டது, இப்போது அது போய்விட்டது,எனவே அதைச் சரிசெய்வதற்கான வழிகளைப் பற்றிச் சிந்திக்க முயற்சிப்பதை நிறுத்துங்கள்.அது முடிந்தது, அது மாற்ற முடியாதது;  அதனால் மேலே செல்லுங்கள்.



உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற இந்த காலத்தில்  மகிழ்ச்சியாக இருங்கள். அதுமட்டுமல்ல இன்றைக்காக அல்ல நாளைக்காக வாழ்க.கடந்த காலத்தை எண்ணி முடங்கிக் கிடக்காமல் எழுந்திரு, வெளியேறு, வாழத் தொடங்கு,

கடந்த காலத்தைக்  கடந்து போக விட்டுவிட்டு, எதிர்காலத்திற்காக  நாம் காத்திருக்கும் வேளையில்  நிகழ்காலத்தில் முற்றிலும் ஈடுபட்டு மகிழ்ந்து  இருப்போமே


அவ்வளவுதான் இதைச் செய்தால் நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும் இனிமையாக இருக்கும்
 




அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கல்லூரி படிப்பிற்காக மகள் எங்களை விட்டு பிரிந்து இருப்பதால் மனம் முன்பு போல இல்லை.. ஏதையோ இழந்தது போல இருக்கிறது அதனால் முன்பு போல எழுத தோன்றவில்லை. அதனால்தான் பதிவுகள் முன்பு போல இப்போது வெளிவருவதில்லை.. சிக்கிரம் பழைய நிலைக்கு வந்த பின் பதிவுகள்  தொடரும் அது வரை நேரம் கிடைக்கும் போது அவ்வப் போது பதிவுகள் வெளியிடுகின்றேன்


15 comments:

  1. Replies
    1. முடிந்த போதெல்லாம் வருகின்றேன்

      Delete
  2. அருமையான தன்னம்பிக்கைப்பதிவு.

    ReplyDelete
    Replies


    1. மனதில் எழும் கருத்துகளை பதிகின்றேன் ஒருவேளை அது ஒரு சிலருக்கு தன்நம்பிக்கையை ஊட்டலாம்

      Delete
  3. எல்லாம் கடந்து போகும் தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. அடிபடும் போது வலிப்பது போலத்தான் இதுவும் அந்த வலி சில காலம்தானே அது போலத்தான் இந்த பிரிவும் நீங்கள் சொல்வது போல இதுவும் கடந்து போகும்

      Delete
  4. இங்கு நீங்கள் தொடர்ந்து எழுதுவதே ஒரு மனமாற்றமாக இருக்கும்.  தொடர்ந்து எழுதுங்கள் மதுரை..

    ReplyDelete
    Replies
    1. முடிந்த போதெல்லாம் எழுதுகின்றேன்

      Delete
  5. மகள் படிக்க பிரிந்து போனதே தாங்க முடியவில்லை, அப்பாவால். திருமணம் முடிந்து மகளை வேறு வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே!

    பாசம் மிகுந்த அப்பாவுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். உங்கள் மனைவியின் தந்தையும் இப்படித்தான் வருத்தப்படு இருப்பார்கள்.

    இப்போது கால நிலை மகளை பார்த்து பேச முடியும் அதை நினைத்து ஆறுதல் அடையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதைத்தான் நான் என் மனைவிக்கும் எங்களது குடும்ப நண்பர்களுக்கும் சொன்னேன்

      Delete
  6. சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

    மகள் படிப்பதற்காக பிரிந்து இருப்பது - நல்லது தான். அவர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறார் என்பதால் இது நல்ல விஷயம். பிரிவு வருத்தம் தான் என்றாலும் கில்லர்ஜி சொல்வது போல “இதுவும் கடந்து போகும்!”

    முடிந்த போது எழுதுங்கள்.

    ReplyDelete
  7. பாராட்டுக்கும் ஆறுதல் வார்த்தைக்கும் நன்றி

    ReplyDelete
  8. வாவ்! நல்ல விஷயம் மதுரை. இப்பத்தானே வலைப்பக்கம் வருகிறேன் எனவே இது விட்டுப் போச்சு பார்க்க. இடையில் வாசித்தாலும்....மகள் படிக்கத்தானே சென்றிருக்கிறார் அதுவும் அவர் தன் வாழ்க்கையில் தன் காலில் நிற்க. உங்களைப் பெருமப்படுத்த! பிரிதல் வேதனைதான் என்றாலும் சந்தோஷமான பிரிதல் வேதனை. அங்கேயேதானே? போய்ப் பார்க்க முடியும்தானே? பார்க்கிறேன் அந்தப் பதிவை. அதுவும் இப்ப டெக்னாலஜி வளர்ந்திருக்கிறதே. உங்கள் மகள் உங்களுக்குக் கண்டிப்பாகப் பெருமை சேர்ப்பார் பாருங்கள்! ஈன்ற பொழுதின் பெருதுவக்கும் தன் மகனை எனும் குறளை அப்படியே உங்கள் மகளுக்குப் பொருத்திக்கோங்க! உங்கள் மகளுக்கு அன்பும் வாழ்த்துகளும்!

    என் மகனை எப்போது பார்ப்பேன் என்று எனக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது மதுரை. ஆனால் நாங்கள் தானே அவனை ஊக்குவித்து அனுப்பினோம் இப்போது வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லைதானே.

    அவன் இன்னும் ஒரு வருஷம் இங்கு வரவும் இயலாது.

    கீதா

    ReplyDelete
  9. வாவ்! நல்ல விஷயம் மதுரை. இப்பத்தானே வலைப்பக்கம் வருகிறேன் எனவே இது விட்டுப் போச்சு பார்க்க. இடையில் வாசித்தாலும்....மகள் படிக்கத்தானே சென்றிருக்கிறார் அதுவும் அவர் தன் வாழ்க்கையில் தன் காலில் நிற்க. உங்களைப் பெருமப்படுத்த! பிரிதல் வேதனைதான் என்றாலும் சந்தோஷமான பிரிதல் வேதனை. அங்கேயேதானே? போய்ப் பார்க்க முடியும்தானே? பார்க்கிறேன் அந்தப் பதிவை. அதுவும் இப்ப டெக்னாலஜி வளர்ந்திருக்கிறதே. உங்கள் மகள் உங்களுக்குக் கண்டிப்பாகப் பெருமை சேர்ப்பார் பாருங்கள்! ஈன்ற பொழுதின் பெருதுவக்கும் தன் மகனை எனும் குறளை அப்படியே உங்கள் மகளுக்குப் பொருத்திக்கோங்க! உங்கள் மகளுக்கு அன்பும் வாழ்த்துகளும்!

    என் மகனை எப்போது பார்ப்பேன் என்று எனக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது மதுரை. ஆனால் நாங்கள் தானே அவனை ஊக்குவித்து அனுப்பினோம் இப்போது வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லைதானே.

    அவன் இன்னும் ஒரு வருஷம் இங்கு வரவும் இயலாது.

    கமென்ட் வருதோ தெரியவில்லை மதுரை

    கீதா

    ReplyDelete
  10. மதுரை, மனம் சரியாகிவிடும். புரிந்துகொள்ள முடிகிறது. என் மகனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிறது. பதிவுகள் எழுதுங்கள்! மனம் லகுவாகும்.

    மகளுக்கு வாழ்த்துகள் சொல்லுங்க.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.