Saturday, September 25, 2021

 

@avargal unmaigal

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு, வீணடிக்க உங்களுக்கு நேரம் இல்லை.


உங்களின் நேரம் மிகவும் மதிப்புமிக்கது, அந்த மதிப்பு மிக்க நேரத்தில் உங்களை விமர்சிப்பவருக்கும் உங்களின் கருத்திற்கு எதிர்மறை கருத்துக்கும் பதிலளித்து அவர்களை நம்ப வைக்க முயற்சிப்பது என்பது உங்களின் முயற்சிக்குத் தடையாக இருக்கும் கவனச் சிதறல்

எப்போதும்   எல்லோரும் உங்களை விரும்ப மாட்டார்கள்; எல்லோரும் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  உங்களை உங்கள் கருத்துக்களை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்து அவர்களுக்குப் புரியவைக்க நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு உங்களது  செயல்களை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.  அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் இருக்க விரும்பவில்லை அது பரவாயில்லை...

இந்த காலத்தில் விமர்சிப்பவர்கள் எல்லோரும் நீங்கள் தவறான கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள் அல்லது  முயற்சிகளை செய்கிறீர்கள் அதைச் சுட்டிக்காட்டி நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கு  நல்ல மனிதர்கள் அல்ல அப்படிப்பட்ட நல்லவர்கள் யாரும் இந்த காலக் கட்டங்களில் இல்லை ஒரு சிலரைத் தவிர .உங்களை விமர்சிப்பவர் எல்லோரும் நீங்கள் வெற்றி பெற விமர்சிப்பதில்லை நீங்கள் வெற்றி பெறுவதில் இருந்து உங்களை தடுக்கும் தடைக்கற்களாக இருக்க முயற்சிக்கிறார்கள்

அவர்களுக்கெல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்..

இப்படி நான் சொல்வதால் நாம் செய்தது சொல்வது எல்லாம் மிகச் சரி என்று நினைக்கக் கூடாது  நாம் செய்வதில் தவறுகள் இருக்கலாம் . அந்த தவறுகளால் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் அனுபவங்கள்தான் நம்மை உண்மையான வெற்றிக்கு அழைத்துச் செல்லுமே தவிர இன்றைய காலத்தில் இணையத்தில் விமர்சனம் செய்பவர்களின் செயல்களால் அல்ல

அதனால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாமல் நீங்கள் உங்களது முயற்சிகளில் ஈடுபடுங்கள் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனியுங்கள் நீங்கள் செய்ததை  செய்வதை மற்றும்செய்யப் போவதை கவனியுங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை  முழுதாக பாருங்கள். உங்கள் உடலையும் ஆன்மாவையும் எதிரி கையாள விடாதீர்கள்


ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன் இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களைவிட மேல்நிலையில் இருப்பவர்கள் மாதிரி தானும் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான தகுதிகளைப் பெற முயற்சிக்கும் அதே நேரத்தில் தனக்கு கீழே போட்டு மிதிக்கவும் சிலர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் அப்போதுதான் அவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக நினைக்கிறார்கள் இது கசக்கும் உண்மை ஆனால் நிதர்சன உண்மை

@avargal unmaigal

 



அன்புடன்
மதுரைத்தமிழன்



யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க


குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே


யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய பெத்தா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா
பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா

சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே


யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ


ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க


5 comments:

  1. இணையம் - படிப்பு போல...

    அனுபவம் - கற்றல் போல...

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    ReplyDelete
  2. என்றும் மனதில் பாடும் பாடல்... அருமை...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு மதுரைத்தமிழன்.

    துளசிதரன்

    ReplyDelete
  4. இந்த வாசகத்தைச் சமீபத்தில் எங்கேயோ வாசித்த நினைவு. எங்கே என்று டக்கென்று நினைவுக்கு வரவில்லை. உண்மையான வரிகள்.

    பதிவில் சொல்லப்பட்டக் கருத்துகளும் அருமை.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.