Wednesday, September 8, 2021

 

@avargal unmaigal

எனக்கு எல்லாம் தெரியும்



 எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நினைக்கும் பல பெரியவர்களிடம் குழந்தைகள் கேட்கும் 'ஏன்' என்ற கேள்விதான் நமக்கு  எவ்வளவு  விஷயங்கள் தெரியும் தெரியாது என்பதை உணர்த்துகிறது.

எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் நன்றாகத் தெரிந்திருக்க முடியாது சில விஷயங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும் சில விஷயங்கள் தெரியாமலே இருக்கும் சில விஷயங்கள் தெரிந்த மாதிரிதான் இருக்கும் ஆனால் தெரிந்திருக்காது.. ஆனால் ஏன் என்ற கேள்வியை யாராவது எழுப்பும் போதுதான் நமக்கு அந்த விஷயம் பற்றி எந்தளவிற்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது என்பது நன்கு  புரியும்

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லைதானே

ஏன்?எதற்கு ?எப்படி  என்று கேள்வி கேட்கவேண்டும் என்று #சாக்ரடீஸ்   இளைஞர்களைத் தட்டி எழுப்பினார் !
 
எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார் #தந்தை #பெரியார் !

இதே சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூண்டுகிறார் #வள்ளுவர் !


எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எந்த பொருளானாலும்  யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல் அதன் உண்மைப்பொருள் அறிவதே மெய் அறிவாகும்.

மூடப் பழக்க வழக்கங்கள் மண் மூடிப்போனதும் மெய்ப்பொருள் காணும் பகுத்தறிவால்தான் !

சொன்னது யார் என்று பார்க்காது அதில் உள்ளது உண்மையா என்று கேட்கும் அறிவை  வளர்த்துக்கொள்ளுங்கள்


ஏன்? எப்படி ? என்ற கேள்விகளைச்  சிந்தனையாளர்கள் தலைவர்கள் விஞ்ஞானிகள்   கேட்டதால்தான் புரட்சிகள் வெடித்து உரிமைகள் கிடைத்தன !மனிதக் குலம்   வளர்ச்சி அடைந்தது அடைந்து கொண்டு இருக்கிறது மேலும் பல புதிய கண்டுபிடிப்புகள்   கண்டுபிடிக்கப்பட்டன படுகின்றன !


நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன்?எதற்கு ?எப்படி என்று கேட்டு அதற்கு நாம் சரியான விடை பெற்றால் வாழ்க்கை வெற்றிப் பாதையில் பயணிக்கும்


நிறையக் கேள்விகளைக் கேட்பது குறுகிய மனத்தை மிக விசாலமாக்குகிறது

ஏன் என்று கேள்வி மனதில் எழுந்த போது இந்த பழைய பாடல் மனதில் உதித்தது


ஏன் என்ற கேள்வி
இங்குக் கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை


பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதானாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதானாலே

உரிமைகளைப் பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதானாலே
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதானாலே

ஏன் என்ற கேள்வி
இங்குக் கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே

வருங்காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
ஏன் என்ற கேள்வி
இங்குக் கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்

நம் தோள் வலியால்
அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள்
நலம் பெறலாம்

முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதானாலே
கடமைகளைப் புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்குக் கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

https://youtu.be/2nB3SWCmXHQ




அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. சிறப்பான சிந்தனை. கேள்விகள் பிறக்கப் பிறக்க, தெளிவும் பிறக்கிறது.

    தொடரட்டும் சீரிய சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி வெங்க்ட்ஜி

      Delete
  2. தங்களிடமிருந்து வித்தியாசமான சிந்தனைப்பதிவு வாழ்த்துகள் தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  3. மதுரை நலமா?!! ரொம்ப நாள் கழித்து எட்டிப் பார்க்கிறேன்.

    நல்ல கருத்துள்ள பதிவு மதுரை. பாராட்டுகள்! வாசித்துக் கொண்டு வரும் போதே "ஏன் இந்தக் கேள்வி" பாடல் நினைவுக்கு வந்து கருத்தில் சொல்ல நினைத்தேன். கடைசியில் நீங்களே சொல்லியிருக்கீங்க! (அதானே நீங்க சொல்லாம இருப்பீங்களா என்ன!)

    கேள்விகள் பிறந்தால்தான் நல்ல சிந்தனைகள் விரிவடையும். தெளிவும் பிறக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி இங்கு அனைவரும் நலம் கீதாஜி

      Delete
  4. பாடலுடன் அருமையான கருத்துகள்...

    பத்து வருடங்களுக்கு முன் :

    https://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_30.html

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி தன்பாலன் உங்கள் பதிவு மிக அருமை

      Delete
  5. நல்ல கருத்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி ஸ்ரீராம்ஜி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.