Sunday, September 26, 2021

 

@avargal unmaigal


மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய ஊடகங்கள் சொல்வது போல வரலாற்று சிறப்புமிக்கதா? உண்மையில் என்ன நடந்தது?

மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய ஊடகங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  உண்மையில் இங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

மோடி அமெரிக்காவில் இறங்கியபோது, ​​அவரை பைடென் நிர்வாகத்தின் சில கீழ்நிலை துணைச் செயலாளர்கள் தான்  வரவேற்றார்கள்


மோடி அமெரிக்க வைஸ் பிரசிடெண்ட் கமலாஹாரிஸ்சை சந்தித்தார், அவர் மோடியிடம் ஜனநாயக மதிப்புகள் மற்றும் நிறுவனங்களை உள்நாட்டில் பாதுகாக்கக் கற்றுக்கொடுத்தார்

 




வைஸ் பிரசிடெண்ட் கமலா ஹாரிஸ்சை   சந்தித்தது பற்றி மோடி உடனடியாக ட்வீட் செய்தார், ஆனால் வைஸ் பிரசிடெண்ட் கமலா அதைப் பற்றி ட்வீட் செய்யவில்லை. அதைக் கண்ட சங்கிகள் அவரது  டிவிட்டர் பக்கம் வெள்ளம்   போலச் சென்று மோடியுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்யும்படி கெஞ்சினர் அதன் பின் கமலா  ஒரு நாள் கழித்து  அந்த சந்திப்பு பற்றி டிவிட் செய்தார்



குவால்காம், அடோப் மற்றும் 3 பிற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை மோடி சந்தித்தார். அவரை சந்திக்க 5 தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே ஒத்துக் கொண்டனர். அந்த கூட்டத்தில் என்ன பலன் வந்தது என்று யாருக்கும் எதுவும்  தெரியாது. குவால்காம் மற்றும் அடோப் ஏற்கனவே இந்தியாவில் ஒரு பெரிய விநியோக மையத்தைக் கொண்டுள்ளன. அதற்கு மேல் அந்த நிறுவனங்கள் அங்கு என்ன செய்துவிட முடியும்.


அடுத்து, அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை  சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் செல்கிறார். மோடியை பைடனின் செயலர் ஒருவர் வீட்டு வாசலில் வரவேற்றார். பொதுவாக உலகத் தலைவர்கள் வெள்ளை மாளிகைக்குச் செல்லும்போது, ​​அமெரிக்க ஜனாதிபதி அவர்களை அவரது வீட்டு வாசலில் வரவேற்கச் செய்வார், மேலும் வாசலுக்குச் சென்று அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைச் சொல்லி அனுப்புவார்கள். அது இந்த முறை மோடிக்குக் கிடைக்கவில்லை.

   

 





 பின்னர் அவர்களுக்குள் நடந்த  சந்திப்பு பரஸ்பர சந்திப்பாக நடந்து முடிந்தது. அந்த சந்திப்பால் என்ன ஒரு நன்மையும் ஏற்படவில்லை

இதற்கிடையில், இந்திய ஊடகங்கள் மோடியின் வருகையை அமெரிக்க ஊடகங்கள் எவ்வாறு கவர் செய்தது  என்பதைப் பார்க்க முயன்றன ஆனால்  அமெரிக்க ஊடகங்கள் ஏதும் இந்த சந்திப்பைப்பற்றி கொஞ்சம் கூட கவர் செய்யவில்லை



பின்னர்  இந்திய ஊடகங்கள்  மோடியைப் பற்றி  அமெரிக்கக் குடிமக்களிடம் பேசி தகவல் சேகரிக்க  முயன்றனர் ஆனால் அமெரிக்கக் குடிமகனோ மோடியைப் பற்றி  அவர் இந்தியப் பிரதமர் என்பதைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும் மோடியின் வருகையால் அமெரிக்காவிற்கு நல்ல வியாபார வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று சொல்லி மேலும்  இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளது என்று சொல்லி இந்திய ஊடகங்களின் எதிர்பார்ப்பில் மண்ணை வாரிவிட்டது மாதிரி செய்து அசிங்கப்படுத்திவிட்டார்


 




இந்திய ஊடகங்கள் கொள்கைகள் பற்றியோ அல்லது மோடியின் அமெரிக்க வருகையினால் இந்தியாவுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்றோ விவாதிக்கவில்லை. மாறாக அவர்கள்  இந்தியாவிலிருந்து மேரிக்காவிற்கு புலம்பெயர்ந்தோருடன் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பேசு சொல்லி ,  அவர்களை நடனமாடச் செய்து , மோடி-மோடி என்று கத்தச் செய்து வீடியோ எடுத்துக் இந்தியாவில் ஒலிபரப்பினார்கள்  பின்னர் மோடி  தங்கி இருந்த  ஹோட்டலுக்கு சுற்றி வந்து  அவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி  மலம் கழிக்கிறார், அவரது மலம் போன்ற நிறங்கள் போன்றவற்றைக் கவர்  செய்தனர்., ஆனால் இதுபற்றி  இந்தியாவில்  சங்கிகளை தவிர வேறு யாரும் கவலைப்படுவதில்லை


 மோடியின் வருகையால் உறுதியான எதுவும் நடக்கவில்லை ஆனால் அது வெற்றிகரமாக இருப்பதாக  இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்தியா என்ன சாதித்தது . என்ன எதில் வெற்றி என்று அதைப் பட்டியலிடச் சொன்னால் அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்


அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் வாசிங்டன் மாநிலங்களில் அவருக்குத் தமிழகத்தில் சொல்வது போல GoBackModi என்று பேனர்கள் வைக்கப்பட்டன. அவருக்குப் பல இடங்களில் எதிர்ப்பையும் தெரிவித்தனர் இதை எல்லாம் இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டு இருக்கிறது

 

@avargal unmaigal


இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் மோடியும் அமெரிக்கப் பயணத்தை ஒரு பெரிய வெற்றி என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் மோடியின் வருகையுடன் ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஒரு எளிய "ஒரு" ட்வீட்டை கூட பகிரவில்லை.



இந்த அமெரிக்கப் பயணத்தின் தோல்வியை மறைக்க மோடியின் ஒரு தந்திரம்தான்  புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மோடியின் போட்டோஷூட்
  
@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது...

    ReplyDelete
  2. லூசுத்தனமா நடக்காரு.

    ReplyDelete
  3. மதுர ... Get your facts correct. அந்த படத்தை கொஞ்சம் கூர்ந்து கவனி. அது பார்லிமென்ட் ப்ளூ பிரிண்ட் இல்ல. சர்தார் படேல் சிலையோட பிரிண்ட் இல்லாட்டி தாய கட்டை போல இருக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.