Monday, September 27, 2021

 உலகத்திலே மகா புத்திசாலி மோடிஜிதான்
 

@avargal unmaigal



உலகத்தில் எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் உள்ள முக்கிய கட்டிடங்களின் ப்ளு ப்ரிண்ட் மிகப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அதை முக்கியமானவர்கள் மட்டுமே பார்க்க முடியும். காரணம் அது தவறானவர்களின் கைகளுக்குக் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மிக உதவியாக இருக்கும். அதைத் தடுப்பதற்காக அந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள் அரசு கட்டிடங்கள் பைனான்ஸ் நிறுவனங்களின் கட்டிடங்கள் இப்படி பலவற்றின் கட்டிடங்கள் மிகப் பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்படும் அதன் காரணமாக அந்த கட்டிடங்களின் வரைபடங்கள் மிகப் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும்.

நிலமை இப்படி இருக்க இந்தியாவில் உள்ள புத்திசாலிகள் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவரில் ஒருவர் இந்தியாவின் புதிய பார்லிம்ட் கட்டிடத்தில்  வரைபடம் மிகத் தெளிவாக இருக்குமாறு போட்டோ ஜூட் பண்ணி அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த ப்ளு பிரிண்ட் படத்தைப் பார்க்கும் தீவிரவாதிகளுக்குக் கையில் உள்ள வாழைப்பழத்தின் தோலை உரித்துக் கொடுப்பதுபோலத்தான் இந்த செயலும் இருக்கிறது.. தீவிரவாதிகள் சங்கிகள் போல முட்டாள்கள் அல்ல அவர்கள் மிகவும் படித்தவர்களாகவே இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த ப்ளு ப்ரிண்டே போது எதிர்காலத்தில் சதித் திட்டங்கள் தீட்டுவதற்கு.. புள்ளியே இல்லாத போதுக் கூட கோலம் போடும் தீவிரவாதிகளுக்குப் புள்ளி வைத்துக் கொடுத்தது போல இருக்கிறது இப்படி ப்ளு பிரிண்ட் வரைபடத்தை வெளியிட்டு இருப்பது. இது கூட புரியாத மகா புத்திசாலியாகவே  இந்தியப் பிரதமர் இருக்கிறார்.

இதற்கு மேல சொல்ல என்ன இருக்கிறது


@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

27 Sep 2021

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.