Sunday, June 27, 2021

 



இந்திய & வெளிநாட்டு பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்  

பள்ளி மதிப்பெண் :

அம்மா நான்  கணக்கில் 95% மதிப்பெண் எடுத்து இருக்கின்றேன்

வெளிநாட்டு பெற்றோர் வாவ் 95% என்றால்  நீ A க்ரேடு வாங்கி இருக்கிறாய் வெரிகுட்

இந்திய பெற்றோர் :95%  தானா வாங்கி இருக்கிறாய் 100 % வாங்குவதற்கு என்ன குறைச்சல் இப்ப பக்கத்துவீட்டுக்காரி முகத்தில் நான் எப்படி முழிக்க முடியும்



நண்பர்களை சந்திக்கச் செல்லும் போது :

அம்மா, நான்  நண்பர்களைப்  போய்  பார்த்து பேசிட்டு வரேன்.

வெளிநாட்டு பெற்றோர்: ஒகே. டிரிங்கஸ் அதிகமாக குடிச்சிடம  பத்திரமா வா

இந்திய பெற்றோர்:  எங்கே போற யாரைப் பார்க்கப் போற ஏன் பார்க்கப் போற யார் கூடப்  போகப் போற. இப்படி டெய்லி வெளியே போய்த்தான் ஆகவேண்டுமா? இதை வீடென்று நினைத்தாயா இல்லை ஹோட்டலுன்னு நினைத்தாயா? எங்கள் கூட சேர்ந்து பேசி மகிழ உனக்கு நேரம் இல்லை. நாங்கள் செத்த பிறகுதான்  எங்க அருமை உனக்குத் தெரியும்
.

உடம்பு சரியில்லாத போது :

அம்மா  உடம்பு திடீரென்று காய்ச்சல் மாதிரி இருக்குமா
.

வெளிநாட்டு பெற்றோர்: இந்த மருந்தைச் சாப்பிடு சரியாகிடும்.

இந்திய பெற்றோர்: எப்போ பாரு அந்த போனையே நோண்டிக்கிட்டிருந்தா இப்படி தான் ஆகும். காசாயம் குடித்தால் எல்லாம் சரியாகிடும்.


எதிர்கால வாழ்க்கைக்கு :


அம்மா நான் பிலிம் இன்ஸ்டிடீயூட்டில் சேர்ந்து பிலிம் டைரக்ஷன் கற்றுக் கொள்ளப் போகின்றேன்

 வெளிநாட்டு பெற்றோர் : வாவ் குட் நல்ல யோசனை உனக்கு திறமை இருக்கிறது நீ சாதிப்பே

இந்திய பெற்றோர் அதெல்லாம் நமக்கு சரிப்படாது உங்கப்பா எஞ்சினியர் அதனால நீ எஞ்சீனியராகத்தா வரனும்


குழந்தைகளை மோட்டிவேஷன் செய்யும்  முறை

வெளிநாட்டு பெற்றோர்: உன்னால் கண்டிப்பா முடியும். நல்லா முயற்சி செய். ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளு


இந்திய பெற்றோர் : பக்கத்து வீட்டுப் பையனை பாரு சென்டம் வாங்கியிருக்கிறான். நீயும் தான் இருக்கியே.



விரும்பிய ஆண தோழனிடம் பேசும் போது.


வெளிநாட்டு பெற்றோர்: நீ பேசிட்டு இரும்மா  நாங்கள்  ஷாப்பிங்க போய்விட்டு வந்துடுறோம்.

இந்திய பெற்றோர்: உனக்கு பாடத்தில் ஏதாவது சந்தேகமென்றால் "அண்ணனிடம் கூச்சப்படாமல்"  கேட்டு தெரிஞ்சிக்கமா(சோலி முடிஞ்சிது)


காதலைப் பற்றிச் சொல்லும் போது.


வெளிநாட்டு பெற்றோர்: உனக்கு பிடித்திருந்தால் சரி.


இந்திய பெற்றோர்: ஐயோ! நம்ம குடும்ப மானம் , மரியாதை  எல்லாம் போச்சு. இப்படி ஏதாவது பண்ணினே நாங்கள் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துடுவோம்

அம்மா எனக்கு அந்த பையனை பிடித்திருக்கிறது அவனைக் கல்யாணம் பண்ணிக்கலாம் என நினைக்கின்றேன்

வெளிநாட்டு பெற்றோர் உனக்கு பிடித்திருந்தால் சரி

இந்திய பெற்றோர்  உனக்கு மட்டும் பிடித்திருந்தால் போதுமா எங்களுக்கு எல்லாம் பிடிக்கவேண்டும் அப்பத்தான் சம்மதிக்க முடியும்


சுயதொழிலில் இறங்க முயற்சிக்கும் போது


நான் சொந்தமா தொழில் தொடங்க போகிறேன்.


வெளிநாட்டு பெற்றோர்: நாங்கள் உனக்கு சப்போர்ட் பண்றோம்.


இந்திய பெற்றோர்: அதெல்லாம்  உனக்கு சரிபட்டு வராது . போயி ஏதாவது கம்பெனியில வேலைக்குச் சேர வழியை பாரு. மாசம் மாசம் சுளையா பணத்தை வாங்கி பேங்குள போடு

செய்த தவறுக்கு தண்டனை .


வெளிநாட்டு பெற்றோர்: இந்த மாசம் உனக்கு பாக்கெட் மணி கிடையாது.

இந்திய பெற்றோர்: இன்றைக்கு தொடப்பகட்டை பிஞ்சி போக போகிறது.


பெற்றோருக்கு   கிப்ட்

வெளிநாட்டு பெற்றோர்: வாவ் வெரி நைஸ் தேங்க்யூ சோமச்


இந்திய பெற்றோர் இப்ப எதற்கு கிப்ட் .எவ்வளவு பணம் செலவழித்த... ஏன் இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணுற, பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் எதிர்காலத்துக்கு உதவுமே


கோரோனா கால அறிவுரைகள்


வெளிநாட்டு பெற்றோர்: சானிடைச்சர்  மற்க்காமல் எடுத்துகோ பேஸ் மாஸ்க்  மறக்காமல் போட்டுக்கிட்டு  போ.

இந்திய பெற்றோர்: கபசுர குடி நீர் மறக்காமல்  குடிச்சிட்டு வெளியே போ.


வெளிநாடு வெர்ஷன்: கேம் ஓவர்.


இந்தியா வெர்ஷன்: சோலி முடிஞ்சிது.


அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. ரசித்தேன்! சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி

      Delete
  2. ரசித்தேன்; சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி

      Delete
  3. பல பலமும், சில பலவீனங்களும்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி

      Delete
  4. எல்லாமே சரியாதான் இருக்கு. ரசித்தேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி மகேஷ்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.