Thursday, June 17, 2021

 

@avargalunmaigal

மோடி அரசு ஒன்றை மறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் முடிகிறது  Indian government and Twitter India

  


  

எப்படி சமுக இணைய தளங்களை தமக்குச் சாதகமாகப்  பயன்படுத்திப் பொய் செய்திகளை உண்மைகள் போலத் திரித்து மோடி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தாரோ அந்த சமுக இணையதளங்களே தமக்குக் குழி பறித்துவிடும் என்று கருதி அதற்குத்  தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்களை வெளியிட்டு தன் சொல்லுக்கு அடிபணிய வழி வகைகளைச் செய்கிறார் திருவாளர் மோடி


( இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு கட்சி ஐடி குழுமத்தை வைத்து நடத்தி உண்மை செய்திகள் என்று பொய் செய்திகளைச் சமுக வலைத்தளங்களில் பரவச்  செய்தது பாஜகதான் இதனை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள் அன்றி ஐடி குழுமத்தை நிறுவி செய்திகளைப் பதிந்த பாஜக இன்று சமுக வலைத்தளங்களில் நன்றாக எழுதக் கூடியவர்களை வளைத்துப் போட்டு தகவல்களைத் திரித்து உண்மை செய்திகள் போல வெளியிடச் செய்கிறது இதில் நம் வலைத்தள பதிவர்களும் அடங்குவார்கள். நீங்கள் நன்றாக  எழுதியவர்களின் வலைத்தளங்களைச்  சமீப காலங்களில் தொடர்ந்து வந்தால் இதன் உண்மைத் தன்மையை அறியலாம் இப்படிப் பட்ட வலைப்பதிவர்கள் சோரம்  போனவர்கள் தங்களின் எழுத்தை விற்கும் விபசாரிகள்தான் இவர்கள்)


அதன் ஒரு பகுதிதான் டிவிட்டர்' நிறுவனத்துக்கான சட்ட பாதுகாப்பு நீக்கம்


இணையப் பொழுதுபோக்கு தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்டம், கடந்த மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.  அதன்படி டிவிட்டர் செயல்படாததால் மூக வலைத்தளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, சட்ட பாதுகாப்பை நீக்கி, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த சட்டத்தின்படி அந்த தளத்தில் மூன்றாம் தரப்பினர் வெளியிடும் சர்ச்சை மற்றும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு, இனி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.'


அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தில் உள்ள கட்டுப்பாடு விதிகள் என்னவென்றால் இந்த விதிகளின்படி, பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக, இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.(அப்பத்தான் இந்த அதிகாரிகளை அவர்கள் குடும்பத்தார்களை மிரட்டி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் ) 'மத்திய அரசு ஆட்சேபனை தெரிவிக்கும் பதிவுகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் நீக்க வேண்டும். (உண்மையான செய்திகள் என்றாலும் அதனால் தமது அரசுக்குப் பெயர் கெடும் என்றால் அதை நீக்க உத்தரவு இட முடியும் உதாரணமாக கொரோனா சமயத்தில் கும்பமேளா திருவிழா ஆக்ஸிசன் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மரணங்கள்   கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட பிணங்கள் ), ஒரு குறிப்பிட்ட பதிவை முதலில் யார் வெளியிட்டது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்' என பல கட்டுப்பாடுகள் உள்ளன.(அப்பத்தான் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு போட முடியும் )பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்று, நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளன. ( பேஸ்புக்கும் கூகுலும் பிஸினஸ் நோக்கங்களோடு செயல்படுகின்றன .அவர்களுக்கு அவர்களின் வருமானம் முக்கியம் சமுக நலன் முக்கியமல்ல, அதனால் அவைகள் இந்திய அரசிற்குப் கட்டுப்பட்டுவிட்டன )ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும், சட்டத்துக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டது.இதையடுத்து, புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற, டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.

இது தொடர்பாக, இம்மாதம் 5ம் தேதி அந்த நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை. இதையடுத்து, டுவிட்டர் சமூக தளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்படுவதாக, மத்திய அரசு கூறியுள்ளது.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது, இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டும், இந்திய மக்களுக்கு உரிய வசதிகளைத் தெளிவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை டுவிட்டர் உறுதி செய்யவில்லை. புதிய சட்ட விதிகளை செயல்படுத்துவது குறித்து தெளிவான பதிலும் அளிக்கவில்லை.


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. சட்ட திருத்தத்தின்படி, அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும்.அதன்படி, டுவிட்டர் நிறுவனத்துக்கான சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுகிறது. அந்த சமூக வலைதளத்தில் மூன்றாம் நபர் வெளியிடும் பதிவுகளுக்கு, இனி அந்த நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அரசு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எந்தவொரு பாசிச அரசாங்கமும் அரசியல் ஆதாயங்களுக்காக  எதிர்ப்பின் குரலை மூடுவதற்கு இப்படிச் சட்டங்களை உருவாக்கினால் கூடியச் சிக்கிரம் அந்த அரசாங்கம் தூக்கி ஏறியப்படும் இதைத்தான் வரலாறு நமக்குச் சொல்லி செல்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்த அனுமதிக்கும் மனித விழுமியங்களை குறிக்கும் எவரும் அதைப் பின்பற்ற மாட்டார்கள்.உலகம் என்பது மனித உரிமைகளின் பக்கம் நிற்குமே தவிர , மதவெறி பக்கம் அல்ல


ட்விட்டர் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியல்கள் இதோ , வட கொரியா,  சீனா, ஈரான்,துர்க்மெனிஸ்தான்,  நைஜீரியா  மேலும் இந்த பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பும் எவரும் இந்தியாவை இந்த நாடுகளின் நிலைக்குக் குறைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு பெரிய கேட்டை  செய்கிறார்கள் என சொல்லாம், அப்படி செய்தால் பேச்சு சுதந்திரம்  என்பது அமெரிக்காவின் எல்லைகளுக்குள் மட்டும் என்று கட்டுப்படுத்தப்படும் அப்படி நடந்துவிடக்கூடாது என்பதுதான் தேசத்தை நேசிக்கும் அனைவரின் எண்ணமாகும்.


அப்படி இல்லை என்றால்  நீங்கள் பாஜக ஐடிக் குழுவை அல்லது சமுக இணையதளத்தை  சேர்ந்தவர் என்றால், நீங்கள் போலிச் செய்திகளைப் பரப்பலாம், அதைப் பற்றி பெருமையாகப் பேசலாம், உங்களின் தவறுகளுக்கு தண்டனைகள் இல்லை , நீங்கள் நன்றாகவும் இருக்கலாம் . ஆனால் அப்படி இல்லாமல் வேறு எவரும் பகிரும் செய்திகளை நீங்கள் ஷேர் செய்தால் நீங்கள் தண்டிக்கப்படலாம். இப்போது முடிவு செய்யுங்கள் நீங்களும் சங்கியாக ரெடி என்றால் இந்தச் சட்டங்களை ஆதரிக்கலாம்


இனிமேல் ​​எந்தவொரு சங்கியும் எதையும்  அதாவது கொலை அல்லது வகுப்புவாத கலவரத்திற்கான அழைப்பு என்று - ட்விட்டரில் பதிவிட்டால் - , பொறுப்பு அந்த சங்கி குண்டன் மீது அல்ல, ட்விட்டரின் மீதுதான். இப்படி ஒரு நல்ல காரியத்தை உண்மையில், ஆளும் கட்சி தனது ஐ.டி குழுமத்தின்  விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது .இப்படி செயல்படுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டடுள்ள் பொருளாதார சிரழிவு கொரனாவை சரியாக கையாளமல் பல உயிர்களை பலி வாங்கியது இது போன்ற செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முயல்கிறது, ஆனால் என்னவோ கொண்டையை மறைக்க முடியாமல் இருக்கிறது


டிஸ்கி. எந்த ஒரு நிறுவனமும் அது செயல்படும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் அதில் தவரேதும் இல்லை ஆனால் அந்த நாட்டின் சட்ட திட்டம் எல்லோருக்கும் நியாமாக இருக்க வேண்டுமே தவிர ஆளும் வர்க்கத்திற்கு அடிபணியஸ் செய்யும் சட்டமாக இருக்க கூடாது என்பதுதான் முக்கியம்.. அப்படி அணிபணியாமல்தான் டிவிட்டர் இந்நேரம் வரை இருக்கின்றது


பல முறை மோடி அரசு  எதையாவது மறைக்க வேறு  ஏதாவது புதிய  முயற்சியை  செய்கிறார்கள், ஆனால் இறுதியில் எல்லாம் இப்படித்தான் முடிகிறது 
 
 
சங்கிகள் ட்விட்டரைப் பயன்படுத்தி #BanTwitterInIndia ஐ பிரபலப்படுத்துகிறார்கள்.

சங்கிகள் எப்போதுதான் வளருவார்கள்?



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. உண்மை ஒருநாளும் பொய்யாகாது...

    அதே நேரம் :-

    அறம் தரும் தண்டனை யாரும் அறிய முடியாது...

    ReplyDelete
  2. உங்களின் பதிவின் வீடியோ அருமை. தன் வினை தன்னைச்சுடும். முதலில் சுமூக வலைத்தளங்களை நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போது மற்றவர்கள் பயன்படுத்தும்போது தவிக்கின்றார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.