திரு. மோடி உட்பட இந்தியாவில் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் மிகப்பெரிய தேச விரோதமாக இருக்க வேண்டும் ... இல்லையா?
பிரதமர்  மோடி உட்பட அனைத்து பாஜக மக்களும் ஏன் இன்னும் டிவிட்டரில் இருக்கிறார்கள்?
இந்திய அரசு கொண்டு வந்த புதிய மீடியா கொள்கைக்கு உட்பட்டு நடக்க டிவிட்டர் மறுத்து வருகிறது.. அதாவது இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட மறுத்து வருகிறது.
டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் இந்தியாவின் புதிய ஐடி சட்டங்களை மதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார் அதுமட்டுமல்ல கடந்த மாதம் 5 ஆம் தேதி டிவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அது தடை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுவித்தார்.  அதற்கும் டிவிட்டர் நிறுவனம் செவி சாய்க்கவில்லை. மோடி அரசும் அதைத் தடை செய்யவில்லை
மேலும் நேற்று டிவிட்டர்  நிறுவனத்தின் சட்டத்தை விட, இந்திய நாட்டின் சட்டங்களே உயர்வானது,’ என்று டிவிட்டர் நிர்வாகிகளை நாடாளுமன்ற நிலைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளது அதுமட்டுமல்ல
இப்படி இந்தியாவின் சட்டதிட்டங்களை மதிக்காத டிவிட்டரைப் பிரதமர் முதல்  அந்த கட்சியைச் சார்ந்த தலைவர்கள் அனைவரும்
டிவிட்டரை விட்டு வெளியேறுவதன் மூலம் எடுத்துக்காட்டாக வழிநடத்த வேண்டும்.
அப்படி இல்லாமல் இந்த தேச விரோத நிறுவனங்களைத் தொடர்பவர்கள் அவர்கள் தலைவராக இருந்தாலும் மிகப் பெரிய தேச விரோதியாகத்தானே இருக்க வேண்டும் ... இல்லையா?
Twitter followers in India, must be the biggest anti-national... Isn't it?
 சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிவிட்டர் பற்றி மார்ச் 21, 2016 அன்று கூறியது
  
அந்த நேரத்தில் பாஜகவுக்கு சமூக ஊடகங்கள் பயனளித்தன, ஆனால் இப்போது மக்கள் பாஜகவைப் புரிந்துகொள்கிறார்கள். நம் நாட்டு மக்கள் ஒன்று கூடி பாஜக ஐடி செல் மற்றும் போலி சுயவிவரங்களை பின்னுக்குத் தள்ளுகின்றனர்
பாஜகவினரே நீங்கள் தேச நலன் காப்பவர் என்றால் இன்றே டிவிட்டரில் இருந்து விலகி மக்களுக்கு எடுத்துக் காட்டாக இருங்கள் அப்படிச் செய்யாமல் வெட்கம் கெட்டவர்களாக டிவிட்டரிலிருந்து கொண்டே டிவிட்டரைப் பயன்படுத்தி சங்கிகள் போல #BanTwitterInIndia ஐ பிரபலப்படுத்தாதீர்கள் முட்டாள்களே
முட்டாள் சங்கிகளே நீங்கள் எப்போதுதான் வளருவீர்கள்?
அன்புடன்
மதுரைத்தமிழன்
Disclaimer : நான் ஒரு  சாதாரண இந்தியவம்சா வழியை சார்ந்த தமிழ் பேசும் அமெரிக்க குடிமகன்.  இங்கே வலைத்தளத்தில் நான் பதிவுகளை எழுதி வெளியிடுவதால்  நான் மேதை என்று அர்த்தமல்ல. நான்  எழுதுவது பெரும்பாலும் பொழுதுபோக்குகளுக்காகத்தான் அதில்தான்  கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான்  இங்கு நான்  எழுதும் பதிவுகள்  குறித்த எனது அறிவு இணையத்தில் கிடைக்கும் செய்திகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. நான் எதையும் தவறாகப் புரிந்துகொண்டால்   தயவுசெய்து என்னை மன்னியுங்கள், அல்லது வேண்டாம், நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. டாட் 


 
 
 
 Posts
Posts
 
 
திருந்(த்)துவது சிரமம்...
ReplyDelete