தமிழ்நாடு அரசு மாநிலப் பொருளாதாரத்தை முடுக்கி விட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது .தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜின் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் சங்கிளின் பின்பக்கத்தில் மிளகாயைச் சொருகிவிட்டது போலவும் இருக்கிறது.. அதனால் அவர்கள் இணைய தளங்களில் அலறிக் கொண்டு இருக்கின்றனர். தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக அடிமைகளிடம் சிக்கியது. அதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினர் தேர்வு தான் தமிழக அரசுக்குப் பாராட்டுகளைப் பெறவைத்துள்ளது. நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்தர் டஃப்லோ முதல் இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் பொருளாதார நிபுணர்கள்.
இவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கடன்சுமையைக் குறைத்து, அதன் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த பதிவில் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்!
ரகுராம் ராஜன்!
இவர் இந்திய பொருளாதாரத்தைக் கவனிக்கும் அனைவருக்கும் மிகவும் பரிட்சியமான முகம். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்த ரகுராம் ராஜன் ர (பிறப்பு: பிப்ரவரி 3, 1963) ஒரு இந்திய தமிழ் பொருளாதார நிபுணர் மற்றும் கேத்ரின் துசாக் மில்லர் சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிதித்துறை பேராசிரியர் . 2003 மற்றும் 2006 க்கு இடையில் அவர் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக இருந்தார் . செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2016 வரை அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 23 வது ஆளுநராக இருந்தார் ; 2015 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்த காலத்தில், சர்வதேச குடியேற்றங்களுக்கான வங்கியின் துணைத் தலைவரானார்.
பொருளாதார வளர்ச்சி, சரிவுகளைக் கணிக்கும் திறன் கொண்டவர். அதற்கு ஒரு உதாரணம், 2008-09 காலகட்டங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அதனை முன்கூட்டியே கணித்து அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், அவரின் முதன்மை பொருளாதார ஆலோசகர், பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்று பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றிருக்கிறார்.
அரவிந்த் சுப்பிரமணியன்
இவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான்.அரவிந்த் சுப்பிரமணியன் ஒரு இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், ரகுராம் ராஜனுக்குப் பின் 16 அக்டோபர் 2014 முதல் 20 ஜூன் 2018 வரை இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
உலக வங்கி முதல் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார். குறிப்பாக 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
2011 ஆம் ஆண்டில், வெளியுறவுக் கொள்கை இதழ் அவரை உலகின் சிறந்த 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக அறிவித்தது
இந்தியாவின் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்ட பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன். இதற்கடுத்து அமெரிக்காவுக்குச் சென்றவர் தற்போது நாடு திரும்பி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அவர் மார்ச் 18, 2021 அன்று ராஜினாமா செய்தார்
எஸ்.நாராயண்
டாக்டர் எஸ். நாராயண், ஐ.ஏ.எஸ் (ஓய்வு) மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில், மேம்பாட்டு நிர்வாகத்தில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக (1965 முதல் 2004 வரை) பணியாற்றியுள்ளார். கடைசியாக (2003-04), அவர் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்தார் மற்றும் பல அமைச்சுகளின் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு பொறுப்பாக இருந்தார். இந்த பணிக்கு முன்னர், அவர் 1997 முதல் இந்திய அரசில் நிதி மற்றும் பொருளாதார விவகார செயலாளராகவும், வருவாய், பெட்ரோலியம், தொழில்துறை மேம்பாடு மற்றும் நிலக்கரி துறைகளின் செயலாளராகவும் இருந்தார்.
2000 மற்றும் 2003 க்கு இடையில், அவர் அரசுக்கான மேக்ரோ-பொருளாதாரக் கொள்கை, சுங்கவரி மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகள், மூலதனச் சந்தைகளை நவீனமயமாக்குவதற்கான முன்முயற்சிகள் ஆகியவற்றிற்கான பொறுப்புகளுடன் நிதி அமைச்சகத்தில் இருந்தார். 2000 மற்றும் 2004 க்கு இடையில் தேசிய பட்ஜெட்டை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார்.
சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகம் மற்றும் எல்.எஸ்.இ உட்பட பல கல்வி நிறுவனங்களில் வருகை தரு பேராசிரியராக உள்ளார். நிதி சீர்திருத்தங்கள், பொதுக் கொள்கை, ஆளுகை, பொது நிதி, வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் டைம்ஸ் (சிங்கப்பூர்), எகனாமிக் டைம்ஸ் போன்ற நாளிதழ்களுக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகளை வழங்குகிறார். பல முக்கிய நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார்.
இவரது துறை சார்ந்த அறிவும், அனுபவமும், ஆலோசனையும் தமிழ்நாடு அரசுக்கு பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்தர் டஃப்லோ
பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல, இந்தியாவின் மருமகளும்கூட. ஆம், அவரின் கணவர் அபிஜித் பானர்ஜி கல்கத்தாவைச் சேர்ந்தவர்.
தற்போது அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ஆய்வுகளை நடத்தி, 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து வென்றுள்ளார். ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது மட்டுமில்லாமல், 2013ல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஜின் ட்ரீஸ்
ஜின் ட்ரீஸ் -ன் சொந்த நாடு பெல்ஜியம் ஆக இருந்தாலும் இந்தியாவின் பிரபல திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த ஒரு பொருளாதார நிபுணர் இவர்.
பொருளாதார நிபுணர் என்பதைத் தாண்டி இவர் ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட. இவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்து, இந்தியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மோடி அரசு ஒன்றை மறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் முடிகிறது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அனைவருக்கும் எல்லா துறையிலும் அந்தந்த துறையைப் பற்றி நுண்ணறிவு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும் விலக்கல்ல. அதனால்தான் அவர் மக்களுக்கு உண்மையாகச் சிறப்பாக நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைத்ததால் பிரச்சினையை என்வென்பதை தெளிவாக புரிந்து கொண்டால் அதே அது பாதிக் ஆற்றை கடந்ததற்கு சமமாகும் என்பதால் அதை தீர்க்க முதல்படியாக பிரச்சினைகளை தெரிந்து கொள்ளப் பொருத்தமான ஐந்து நிபுணர்களை நியமித்து இருக்கிறார்.
இந்த முயற்சி நிச்சயம் பயனளிக்கும் ஆனால் அது எந்த அளவிற்குப் பயன் அளிக்கும் என்பது இப்போது யாருக்குமே தெரியாது. ஆனாலும் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கி வைத்த ஸ்டாலினை நிச்சயம் பாராட்ட வேண்டும். நல்ல கவனியுங்க டிமானிடசேனை அறிமுகப்படுத்திய உலகின் சிறந்த பொருளாதார நிபுணர் மோடி போல அல்ல ஸ்டாலின். ஸ்டாலின் கோமியம் குடிக்காததால் அறிவு இருக்கிறது அதனால் தன்னால் என்ன செய்ய இயலும் என்பதை உணர்ந்து இந்த ஐவர் குழுவை நிர்ணயித்து இருக்கிறார்
கொரோனா சமயத்தில் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமயத்திலும் அதுவும் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் எப்படி இப்படி யோசித்து இப்படிப் புகழ் பெற்ற நிபுணர்களிடம் பேசி அவர்களை ஒருங்கிணைந்து செயல்படச் சம்மதம் பெறச் செய்ததே சாதனை
நமக்கும் ஒரு பிரதமர் இருக்கிறாரே அவர் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க ஆலோசனை செய்வார் என்றால் அதைவிட்டுவிட்டு யோகா செய்தால் நல்லது என்று ஏதோ கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
உயர்மட்ட பொருளாதார அறிவுசார் குழு.......................................................
ReplyDeleteபெருமைக்காக இவர்களை பணியமர்த்துவதில் பயன் என்ன?
கோடிகளில் முதலீடு செய்து பதவிக்கு வந்தவர்கள் அதற்குத்தக்கவாறு சம்பாதிக்க வகை செய்யும் திட்டங்களை இவர்களால் தீட்டித்தர இயலுமா?
இவர்கள் வழங்கும் ஆலோசனைகளை செயல்படுத்த ஒன்றிய அரசு அனுமதிக்குமா?
ஒன்றிய அரசின் ஒத்துழையாமையை கேள்விகேட்கும் அளவிற்கு குறைந்தபட்ச நேர்மை இவர்களிடம் உள்ளதா???
கேள்விகள் ஆயிரம், பதினாயிரம்....................???????????
கேள்வி கேட்டு கொண்டே இருங்கள் ஆனால் இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டியவரிடம் கேட்காமல் இருங்க
Deleteஇனி அனைவரின் செயலாக்கம் பார்க்க வேண்டும்...
ReplyDeleteபுதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்.
Deleteஉங்கள் நம்பிக்கையும் ஆர்வமும் வியக்க வைக்கிறது.
ReplyDelete