பார்க்காத இடத்தில்தான் இன்பங்கள் காணப்படுகின்றன
நாம் ஒருபோதும்
தேடாத அல்லது
பார்க்காத இடத்தில்தான்
இன்பங்கள் காணப்படுகின்றன.
(நான் சொன்னது இயற்கையை)
ரோட்டில் பார்த்த பெண்
அழகாக இருந்து
அதை நாம் பாராட்டினால்
மூதேவி அலையிது பார் என்றும்
அதைப் பெண்ணை
பேஸ்புக்கில் பார்த்து
அழகைப் பாராட்டினால்
யூ ஆர் ஸோ ஸ்வீட் என்றும் சொல்லுவார்கள்
இந்தப் பெண்கள்
மனிதர்கள் அசுத்தமானவர்கள்
நமது உடலில் இருக்கும்
ஓட்டைகளிலிருந்து
வெளியே வரும்
அத்தனையும் அசுத்தம் என்றால்
மனித உடலில் உள்ள
ஒரு ஓட்டையிலிருந்து
வெளிவந்த நாமும்'
அசுத்தமானவர்கள்தானே
டிக்கெட் எடுக்காமல்
வந்தவரைத் திருட்டு ரயில்ல வந்தவர் என்று
கேலி செய்பவர்கள்
ரயில்வே ஸ்டேசனில்
டீ விற்கும் போது பிளாட்பாரம் டிக்கெட்
தினம் எடுத்துத்தான் விற்று வந்தாரா
அல்லது லைஸ்ன்ஸ் எடுத்துத்தான்
ஸ்டேஷனில் டீக்கடை நடத்தி வந்தாரா
என்று சொல்லலாமே.
இன்றைய காலத்தில்
காதலால் இதயம் நொறுங்குவதைக்
கூடப் பெண்கள் தாங்கிக் கொள்வார்கள்
ஆனால்
கை தவறி ஐபோன் கீழே விழுந்து
அதில் கீறல் ஏற்பட்டால்
அதைத் தாங்கிக் கொள்ளப் பலருக்கும் சக்தி இல்லை
வெற்றிகரமாக
2021 இன் 5 மாதங்களை
நாம் வீணடித்துவிட்டோம்
ஆனால்
மிக மோசமான பகுதி எ
ன்னவென்றால்,
நாம் அதை அப்படி வீணடித்தது
என்பதே நமக்குத் தெரியாது.
ஹோட்டல்களின் டேபிளில்
உணவைத் தேடுபவன்
ருசிக்காகச் சாப்பிடுபவன்
ஆனால்
ஹோட்டலில் வெளியே இருக்கும்
குப்பைத் தொட்டிகளில்
உணவைத் தேடுபவன்
பசிக்காகத் தேடுபவன்
நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைக்
களையச் சிலவற்றை
நாம் நீக்கினாலே போதும்
அதில் உணவு,
சில பழக்கவழக்கம்,
சில உறவுகள்/நட்புகள்
அவ்வளவுதான்.
இதை நீங்கள்
செய்து பாருங்கள்
அதன் பின் உங்கள்
வாழ்வில் பல பிரச்சனைகள்
காணாமலே போய்விடும்
ஒவ்வொருவரின் வாழ்க்கையும்
ஒரு ரகசியப் பயணமாகத்தான் இருக்கிறது
அந்த ரகசியப் பயணத்தில்
நான் கொரோனாவை அனுபவித்து
மீண்டு என் பயணத்தைத்
தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
ஆனால் பலரோ மீளாமல்
அதையையே தங்களது இறுதி அனுபவமாக
அனுபவித்துத் தங்கள் வாழ்க்கையை
முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களைப் போலக் கொரோனா அனுபவத்தைப்
பெறப் பலர் முகக் கவசம் சரியாக அணியாமல்
இறுதிப் பயணத்திற்கு அவர்களை அறியாமலே
தயார் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்
கீழேயுள்ள வரிகள் எழுத்தாளர் ஜெயமோகன் மனைவி அருண்மொழி நங்கை அவர்களின் பதிவிலிருந்து சுட்டது
கவிஞர் எமிலி டிக்கின்சன் கவிதை ஒன்று ”என் கல்லறையில் அமர்ந்து நீங்கள் வாசிக்கும் கவிதையை நான் என் கிரானைட் உதடுகளால் சுவைப்பேன்”
அன்புடன்
மதுரைத்தமிழன்
பிறக்கின்ற போதே -
ReplyDeleteஇறக்கின்ற தேதி -
இருக்கின்றதென்பது -
மெய் தானே...
ஆசைகள் என்ன...
ஆணவம் என்ன...
உறவுகள் என்பதும் -
பொய் தானே...
உடம்பு என்பது -
உண்மையில் என்ன...?
கனவுகள் வாங்கும் பை தானே...
கனவு காணும் வாழ்க்கை யாவும் -
கலைந்து போகும் கோலங்கள்...
காலத்திற்கு ஏற்ப அருமையான பாடல் இது
Deleteஎன்னாச்சு ட்றுத்துக்கு கர்ர்ர்ர்ர்:))))..
ReplyDeleteசெல்போன் உடைஞ்சால் பெண்கள்தான் கவலைப்படுவினமோ?????
வாங்கம்மா வாங்க இப்பதான் அமெரிக்காவிற்கு வர வழி தெரிஞ்சதோ? ஆமாம் அவ்வளவு பிஸியா நீங்கள்?
Deleteபெண்களின் செல்போன் உடைந்தால் ஆண்களும் கவலைப்படுவார்கள் அவர்கள் கவலைப்படுவதற்கு காரணம் இன்னொரு செல்போன் வாங்கிதரனுமே என்றுதான் ஹீஹீ
உணவு பற்றி சொன்ன வரிகள், பிரச்சனைகளைக் களையச் சொன்ன வழிகள் செம..
ReplyDeleteகொரோனா என்ன சொல்ல? இப்போது லாக்டவுன் தளர்த்தல் பற்றி பேச்செழுகிறது என்ன ஆகுமோ?
மனிதன் அசுத்தமாகப் பிறக்கிறான் ஹம்ம்ம்ம் சொன்னாலும் சுத்தமாக்கிக் கொள்ளாமல் தன்னை அசுத்தம் தான் செய்துகொள்கிறான். அசுத்தம் சுத்தமாகலாம் ஆனால் சுத்தம் அசுத்தமானால்....
நம் மனதிற்குள் தான் இன்பம் இருக்கிறது ஆனால் நாம் அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
கீதா
உங்களின் கருத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீங்க பாராட்டுக்கள்
Delete