கடந்த சில நாட்களாக வேலையில் மும்மரமாக இருந்ததால் இணையம் பக்கம் அதிகம் வரவில்லை இன்று லீவு என்பதால் கடந்த இரண்டு நாட்களாக என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால் பலர் #இளையராஜாவால்தான் தாங்கள் உயிர் வாழ்வதாகவும் மற்றும் பலர் #கலைஞரால்தால் தாங்கள் படித்து மேலை நாடுகளில் பெரும் பதவிகளில் இருக்க முடிகிறது என்பதாகப் பலர் எழுதிப் பதிந்து இருந்தார்கள். அதைப் படித்த பின்தான் புரிந்தது அவர்களின் #பெற்றோர்கள் #வீணாப் போனவர்கள் என்று.. # அதுமட்டுமல்ல இப்படி எழுதிப் பதிந்தவர்கள்தான் #அன்னையர்தினம் அன்றும் #தந்தையர்தினம் அன்றும் தங்களது தாய் & தந்தை படத்தைப் போட்டுப் பாராட்டி எழுதி லைக் வாங்கிக் கொண்டிருப்பார்கள் . ஹும்ம்ம் இவர்களின் மூளை வளர்ச்சி இவ்வளவுதான்
இவர்களைத்
தாய் பாலூட்டி வளர்த்ததில்லை.
தந்தை தோளில் சுமந்து
பள்ளிக்கு அழைத்துச் சென்றதில்லை.
மருத்துவர்கள் இவர்கள் உயிர் பிழைக்க உழைத்தது இல்லை..
ஆமாம் இவர்களை
வளர்த்ததும் படிக்க வைத்ததும்
ஏன் உயிர் வாழ வைப்பதும்
இளையராஜாவும் கலைஞரும்தான் போல இருக்கு
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆதங்கத்தில் பொதிந்துள்ள கோபம் நியாயமானதே..
ReplyDeleteதங்களுக்கு பிடித்தவர்கள் யாரையும் யாரும் பாராட்டலாம் கொண்டாடலாம்.. ஆனால் பெற்றோர்களைவிட இவர்கள் எந்தவிதத்திலும் ஒரு படி மேலே அல்ல ஒரு படி கிழேதான் என்பதுதுதான் என் ஆதங்கம்
Deleteதன்னை அவ்வாறு வெளிக் காட்டி கொள்வது...!
ReplyDelete
Deleteபெற்றோர்களை காட்டாமல் இப்படிக் காட்டிக் கொள்வதால் என்ன பெருமை