ஆமாம் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கடைப்பிடிப்பதற்கும், தமிழருடன் பரிச்சயத்தைப் பேணுவதோடு, அவர்களின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிவையும் கொண்டிருக்க வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து, தமிழ்ச் சமூகங்கள் மற்றும் தமிழ் படிப்புகளில் ஆர்வமுள்ள மற்றவர்களின் உணர்வை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசின் முதலமைச்சர் கலைஞர் , பிப்ரவரி 1999 இல் ஒரு சர்வதேச கருத்தரங்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் ஒரு தமிழ் மெய் நிகர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் (#Tamil_Virtual_University) அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
டி.வி.யுவின் செயல்பாடுகள் இயக்குநர்கள் குழுவால் வழிநடத்தப்படுகின்றன மற்றும் முழு நேர இயக்குநரால் நிர்வகிக்கப்படுகின்றன. இப்போது, அதன் பெயர் தமிழ் மெய் நிகர் அகாடமி #Tamil_Virtual_Academyஎன மாற்றப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டைப் பெருக்குதலும் இணையவழி அளிப்பதுமாகும்.
பார்க்காத இடங்களில்தான் இன்பங்கள்  காணப்படுகின்றன
இதில்தான் இந்த மெய் நிகர் வகுப்பு அறை விரிவுரைகளை ஆங்கிலத்தில் பேராசிரியர் டி.பி சித்தலிங்கையா தமிழர்களுக்கும் தமிழ் தெரியாத மற்றவர்களுக்கும் வழங்குகிறார். இந்த சொற்பொழிவுகள் தமிழ் கற்றலை எளிதாக்கும் வகையில் தரப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புகள் எழுத்துக்கள், இலக்கணம் மற்றும் தொடரியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த திட்டம் கற்றல் தமிழ் என வழங்கப்படுகிறது.
இதற்கான லிங்க் learn tamil through english free   
 
இந்த பேராசிரியர் எழுதிய புத்தகத்திற்கான பிடி எஃப் லிங்க் A B C Of TAMIL
மற்றும் சில பயனுள்ள லிங்க்ஸ் 
COMMON SPOKEN TAMILMADE EASY  
ஒன்றிய அரசு ஹிந்தியை  ஹிந்தி பேசாத பல மாநிலங்களில் உள்ள மக்களுக்கு கற்றுக் கொடுக்க பல வகைகளில் முயல்கின்றது. ஹிந்தியை கற்றுக் கொள்வதால் கிடைக்கும் பலன் வடமாநிலங்களுக்குச் செல்லும் போது அங்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டால் கூட வராதவர்களுடன் நாம் ஹிந்தியில் பேசலாம். அதுமட்டுமல்ல நம் பாரதப் பிரதமர் என்னென்ன பொய்களை மணிக்கணக்கில் பேசுகிறார் என்பதை நமக்கு நேரம் கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்ல வட நாட்டு மக்களின் முட்டாள்தனங்களை அறிந்து கொள்ளலாம்.. ஆனால் அதற்கெல்லாம் வா நமக்கு நேரம் இருக்கு?
நமக்கு கிடைக்கும் நேரங்களைப் பயனுள்ள வகையில் கழிக்க நாம் நம் தாய்மொழியை நன்கு கற்று  மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம் குறிப்பாகத் தமிழ் தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களின் பெருமையை அவர்களையும் கற்றுனர செய்யலாம்.
அதை நாம் செய்யத் தொடங்குவோமா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொசுறு :  இந்த  Tamil Virtual University (Tamil Virtual Academy) தொடங்க மூலக் காரணகார்த்தா தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்தான் ஆனால் இது பற்றிய எந்த ஒரு தகவலும் அந்த இணைய தளத்தில் இல்லாதது மிக ஆச்சிரியம் அளிக்கிறது.

 
 
 
 Posts
Posts
 
 
மகிழ்சியான நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றிகள் , காரணகர்த்தாவின் பெயர் எங்கும் காணப்படவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.
ReplyDeleteஆமாம் காரணகர்த்தாவின் பெயரை காணாதது வருத்ததைதான் தருகிறது... இதற்கு காரணம் முன்னாள் தமிழ்துறை அமைச்சர் மா.பா. பாண்டியனாக கூட இருக்கலாம்
Deleteஅந்த பல்கலைக்கழகத்தில் பலவற்றை வாசித்துள்ளேன்... கடந்த நாலைந்து வருடங்களாக, முன்பு படித்த பக்கங்கள் இல்லை... புக் மார்க் செய்து வைத்திருந்த பக்கங்களும் திறப்பதில்லை...
ReplyDeleteஅடிமை ஆட்சி தொடர்ந்து இருந்தால் முற்றிலும் அவை காணாமல் போயிருக்கும்...
(அரசியல் தவிர்த்து) இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ் தப்பித்தது... எவ்வித சூழ்ச்சியிலும் மாட்டாமல், தமிழ்நாடும் தப்பிக்க வேண்டும்...
உண்மைதான் தன்பாலன்.. இந்த பல்கலைகழக்த்தை பாராட்டி நீங்கள் வலை உலக திருவிழா நடத்திய சமயத்தில் பதிவு இட்டு இருந்தேன் அப்போது நான் பார்த்த பல பக்கங்களும் இப்போது இல்லைதான்.. அடிமை ஆட்சி தொடரந்து இருந்தால் அங்கு கண்டிப்பாக விஷ விதைகள் மெதுவாக விதைக்கப்பட்டு இருக்கலாம்... அதற்கு துணை போவர்தானே முன்னாள் தமிழ்துறை வளர்ச்சி அமைச்சர்
Deleteதமிழ் சொல்லிக்கொடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று யாருக்காவது சொல்லிக்கொடுத்துப் பார்த்தால் தான் தெரியும் . நான் சொல்லிக்கொடுத்து ஒரு காமெடி ஆயிடுச்சு
ReplyDelete