கல்வி கடன் தேடும் மாணவர்களுக்கான வலைத்தளம்
வித்யா லட்சுமி கல்வி கடன் தேடும் மாணவர்களுக்கான முதல் போர்டல் ஆகும். நிதி சேவைத் துறை (நிதி அமைச்சகம்), உயர்கல்வித் துறை (கல்வி அமைச்சகம்) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலை என்.எஸ்.டி.எல் இ-கவர்னன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் உருவாக்கி பராமரித்து வருகிறது. கல்வி கடன் விண்ணப்பங்களை மாணவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் போர்ட்டலை அணுகுவதன் மூலம் பார்வையிடலாம், விண்ணப்பிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்.
பட்டப்படிப்பு & ஆராய்ச்சி மாணவர்கள் அவசியம் தெரிந்த கொள்ள வேண்டிய  சிறந்த கல்வி தேடல் பொறிகள் 
அனைத்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களும் எந்தவொரு நிதிக் கட்டுப்பாடும் இன்றி அவர்கள் விரும்பும் உயர் கல்வியைத் தொடர உதவும் நோக்கில், உதவித்தொகை மற்றும் கல்வி கடன் திட்டங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் ஒரு முழு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான மாணவர் நிதி உதவி ஆணையத்தை அமைக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஸ்ரீ அருண் ஜெட்லியால ஆரம்பித்து வைக்கப்பட்ட   பிரதான் மந்திரி வித்யா லட்சுமி காரியக்ரம். நிதி பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் உயர் கல்வியைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது . 
https://www.vidyalakshmi.co.in/Students/index
முயற்சித்து பாருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

 
 
 
 Posts
Posts
 
 
தேவைப்படுவோர்க்கு பகிர்கிறேன்... நன்றி...
ReplyDelete
ReplyDeleteநன்றி தனபாலன்
யாருக்காச்சும் வேணும்னா பகிர்கிறென் மதுரை. குறித்து வைத்துக் கொண்டேன்.
ReplyDeleteகீதா