Thursday, July 1, 2021

 

@avargalunmaigal

மருத்துவர் தினமும் மனநோயாளி பொது மக்கள் சொல்லும் வாழ்த்துக்களும்

இன்று இணையம் வந்தவுடன் கண்ணில் தென்பட்டது எல்லாம் மருத்துவர் தின பதிவுகள்தான் பலரும் பதிவு எழுதி மருத்துவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தனர்.. ஆனால் இவர்களில் ஒருவர் கூட நிச்சயம் அவர்களின் மருத்துவர்களை அழைத்து தொலைப்பேசியிலோ அல்லது நேரிலோ வாழ்த்துக்கள் சொல்லி இருக்கமாட்டார்கள் . இவர்களைப் பார்க்கும் போது தோன்றுவது எல்லாம் காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கச் செல்வது போலத் தூங்கி எழுந்ததும் சமுக இணையதளங்களில் ஏதாவது எழுதிப் பதிவிடுகிறவர்கள் மாதிரிதான் தோன்றுகிறார்கள் அதுமட்டுமல்ல பலருக்கு என்ன எழுதுவது என்பதே தெரியாமல் முழிக்கும் சமயத்தில் இப்படிப்பட்ட தினங்கள் வந்து அவர்களுக்கு எழுத கண்டெண்ட் கொடுக்கின்றன என்பதைத் தவிர ஒருவரும் மனமார்ந்து யாருக்கும் வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்பதுதான் உண்மை

மருத்துவர்கள் நம் உயிர் காக்கப் போராடுகிறார்கள்தான். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் இணையதளத்தில் ஏதோ எழுதிக் கிறுக்குவதன் மூலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். அடேய் இப்படி நீங்கள் எழுதுவது ஏதும் அவர்களை மகிழ்விக்காது என்பதையறியாத அறிவிலிகளா நீங்கள்.

ஏது அவர்களை மகிழ்விக்கும்.. அவர்களை நேரில் சந்தித்தோ அல்லது அழகான வாழ்த்து அட்டை அனுப்பி அதில் அவர்கள் உங்களுக்கு உதவியதை பற்றி ஒரு சில வரிகள் எழுதி அனுப்பி இருந்தால் அதைப் படிக்கும் அவர்களது மனம் நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளும். அல்லது அவர்களுக்கு நம்மால் முடிந்த பரிசுப் பொருட்களை அனுப்பினால் அது மிகச் சிறிதாக இருந்தாலும் அவர்களது மனம் மகிழும்


மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் இப்படி மோடி வாயால் வடை சுடுவது மாதிரி வாழ்த்துக்கள் சொல்லாமல் மருத்துவர்களுக்கா ஏதாவது சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் அரசாங்கம் அரசு ஹாஸ்பிடலில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு ஒருவேளையாவது இந்த தினத்தில்  நல்ல உணவை ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து வழங்கலாம் அல்லது அவர்களுக்குப் பயன்படும் மருத்து உபகரணங்களை கிப்டாக வழங்கலாம் அல்லது ஒரு நாள் ஊதியத்தை கிப்டாக தரலாம் இப்படி ஏதாவது செய்து  அவர்களை மகிழ்விக்கலாம்


பொது மக்களும் தங்களுக்கு உதவிய தனியார் மருத்துவ மனை மருத்துவர்களுக்கு மேலே சொன்ன மாதிரி ஏதாவது உதவலாம். இப்படிச் செய்து அவர்களை வாழ்த்துவதுதான் அவர்களை மகிழ்விக்குமே தவிர இணைய தளத்தில் மொக்கையான ஒரு பதிவு எழுதி வாழ்த்துவது என்பது தலையில் இருந்து உதிர்ந்து போன ரோமம் மாதிரிதான் யாருக்கும் பயன் இருக்காது

இன்று மருத்துவர் தினத்திற்கு வாழ்த்து சொல்லும் பயபுள்லைங்க யாரென்று பார்த்தால் அவர்கள்தான் மருத்துவர்களை அவர்களின் சொத்துக்களை ஏமாற்றிப் பறிப்பவர்கள் என்பது மாதிரி எழுதி பதிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இன்று மருத்துவர் தினம் என்பதால் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள இன்று எழுதிப் பதிந்து கொண்டிருக்கிறார்கள்

இப்படிதான் ஆசிரியர் தினம் அன்று ஆசிரியர்களுக்கு மனம் உருகி பதிவு எழுதி வாழ்த்து சொல்லுபவர்கள்தான் இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து கொண்டு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் மீது பொறாமை கொண்டு அந்நியனாக  மாறி அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக் கட் செய்யவேண்டும் என்று சத்தம் எழுப்புகிறார்கள் இப்படித்தான் செவிலியர் தினம் இராணுவிரர்கள் தினம் இப்படி பலவற்றைச் சொல்லிக் கொள்ளலாம் இந்த தினங்கள் எல்லாம் பதிவு எழுதி வெளியிடும் தினங்களாக மாறித்தான் இருக்கின்றனவே தவிர உண்மையிலே அவர்களின் தொழிலை மதித்து வாழ்த்து சொல்லும் தினங்களாக எனக்குத் தெரியவில்லை



இனிமேலாவது சொல்வதற்குத் தகுந்த மாதிரி  செயல் மூலம் வாழ்ந்து காட்ட முயலுங்கள் அப்படி இல்லையென்றால் நீங்கள் பேசுவது எழுதுவது எல்லாம் பைத்தியக்கார ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிய நோயாளிகள் பேசுவது போலத்தான். அவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு சிறிதுமில்லை. அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் அப்படிப்பட்ட சிகிச்சை எடுக்காமல் நோயாளிகளாகத் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் அவ்வளவுதான். டாட்


அன்புடன்
மதுரைத்தமிழன்


01 Jul 2021

14 comments:

  1. Replies
    1. நன்றிம்மா .மனதில் தோன்றியதை எழுதி இருக்கின்றேன்

      Delete
  2. ஐயா தங்கள் வாக்கினைச் சிரமேற்கொண்டு எனது மருத்துவ நண்பரை அழைத்து வாழ்த்துச் சொல்லி விட்டேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியை படித்து அதன்படி நடந்து கொண்டதை அறிந்து ஆச்சிரியம்... மைண்ட் வாய்ஸ் இவர் மனைவிகிட்ட அடிவாங்க வைக்கிற மாதிரி ஒரு பதிவு எழுதி போடனும் சீக்கிரம்

      Delete
  3. ஆவ் !!! இப்படி ஒரு நாள் வந்து போனதே தெரியாம ஹாஸ்பிடலில் வேலையும் செஞ்சுட்டு வந்திருக்கிறேன் இன்னிக்கு .தெரிஞ்சிருந்தா எல்லா டாக்டர்ஸுக்கும் விஷ்  சொல்லிருப்பேன் .

    ReplyDelete
    Replies

    1. அடி ஆத்தாடி அதிசயம் அல்லவா நடந்து இருக்கிறது கடும் உழைப்பிலும் நம் பக்கம் எட்டி பார்த்து கருத்து சொல்லி இருக்கிறீங்க. வாவ்

      Delete
  4. எப்படி இருக்கீங்க ட்ரூத் நீங்க உங்க வீட்டில் எல்லாரும்  அப்புறம் உங்க நண்பிகள் ............. நண்பர்கள் எல்லாரும் நலம்தானே .

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவரும் நலம் அங்கு அனைவரும் நலமாக இருப்பீர்கள் என் நினைக்கின்றேன் அதீஸ் பேலஸ் ஒனருக்கு வயதாகிவிட்டதால் இப்ப எல்லாம் யூடியூப் அப்டேட் பண்ணுவதில்லை போல இருக்கே? பெண் இந்த வருடம் வேற காலேஜ் வேற மாநிலம் போவது என்று முடிவு செய்து இருக்கிறாள் அதுதான் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது நண்பி ஹாஸ்பிடலில் தன்னை மறந்து உழைக்கிறார் நண்பர்கள் அப்படி எல்லாம்

      Delete
  5. உண்மையைச் சொன்னீர்கள். அதுவும் பேஸ்புக்கில் வரும் பதிவுகள் இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. அதை படித்த பின் மனதில் எழுந்ததுதான் இந்த பதிவே

      Delete
  6. நன்று. பலருக்கும் முகநூலில் இப்படி பதிவுகள் போட கண்டெண்ட் கிடைக்கிறது. அதைத் தவிர பெரிதாக ஒன்றும் பலனில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் எனக் கொண்டாட்டங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது எல்லாம் பேஸ்புக்கில் இந்த மாதிரி தினங்களுக்கும் ட்ரெண்டுகளை க்ரியேட் பண்ணி அதற்காக எழுதுவதுமாகத்தான் இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.