Saturday, July 3, 2021

 

@avargal unmaigal

மனைவி அமைவதெல்லாம்

நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு சற்று தாமதமாக வந்து கொண்டு இருந்தேன்.. நல்ல பசி. அதனால் விட்டிலிருந்து வொர்க் பரம் ஹோம் வேலை செய்து கொண்டு இருக்கும் மனைவியிடம்.. பசிக்கிறது சாப்பிட ஏதாவது தயார் செய்து வைம்ம்மா என்று போனில் கூப்பீட்டு சொன்னேன் . என்னவளும் சரி என்று சொன்னாள்.


நான் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு சமையலறைக்குப் போய் பார்த்தால் ஒன்றுமே இல்லை.. ன்னம்மா சாப்பிட என்னம்மா இருக்கிறது என்று கேட்டேன்.. அவள் பிரிஜ்ஜை திறந்து பாருங்கள். அதில் சாப்பிடத் தேவையானது இருக்கிறது என்றாள்.


நானும் திறந்து பார்த்தேன் ஒன்றுமே இல்லை உடனே மனைவியிடம் என்னம்மா ஒன்றுமே இல்லையே என்றேன்.. அவள் வாட்சப்பில் யாருடனோ பேசிக் கொண்டே ப்ரிஜில் சாலட் இருக்கிறது என்றாள்.


நானும் தேடித் தேடி பார்த்துவிட்டு என்னம்மா ஒன்றுமே இல்லையே என்றேன்.

அவள் உடனே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு மாரடிப்பதே என் வேலையாய் போச்சு ஒரு விபரமும் சொல்லிதரமால உங்களை வளர்த்த அந்த மகராசியை சொல்லவேண்டும் என்றாவார் சமையலறைக்கு வந்தார்.

நான் ப்ரிஜ்ஜை திறந்து நல்லா பாரு இங்கே சாலட் ஒன்றுமே இல்லையே என்று காண்பித்தேன்... உடனே அவள் நல்லா கண்ணைத் திறந்து பாருங்கள் இங்க கேரட் இருக்கா வெள்ளரிக்காய் இருக்கா முட்டை கோஸ் இருக்கா ஆணியன் இருக்கா? இதை எல்லாம் எடுத்து வெட்டி சாப்பிடவேண்டும் அதுதான் சாலட்

இது கூட தெரியாமல் உங்கம்மா உங்களை வளர்த்து என்தலையில் கட்டி வைத்திருக்கிறார்கள் பாருங்க என்றவாறே தன் வாட்சப் செய்திகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

இப்ப சொல்லுங்கள் இப்படி எல்லாம் மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரமா? சாபமா


மதுரைத்தமிழனின் பேஸ்புக் கிறுக்கல்கள்


 

பெண்கள் விட்டை விட்டு வெளியே செல்லும் போது நன்றாக மேக்கப் போட்டு, அழகான சேலை உடுத்திச் செல்வதினால்தான் ஆண்கள் அவர்களைப் பார்த்து ரசிக்கிறார்கள் அதுதான் உண்மை.  நல்லா கவனியுங்கள் வீட்டில் உள்ள பெண்களை ஆண்கள் ,அது மனைவியே ஆனாலும் ஏறெடுத்து கூடப் பார்க்க மாட்டார்கள் # என்ன நான் சொல்லுகிறது சரிதானே?



நமக்குப் பிடித்த உணவைக் கேட்டால்  கொண்டு வந்து தருவது மனைவி அல்ல ஹோட்டலில் உள்ள சர்வர்தான். ஆனால் அதற்காக அவர் கையில் தங்க வளையல் வாங்கி மாட்டிவிட முடியாது.. ஹீஹீ



என்னதான் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்தினாலும் கூட அது சில மணித்துளிகள் மட்டுமே நீடிக்கும். உண்மையில் மாற்றம் நமக்குள் இருந்தே வர வேண்டும். திடீரென்று நமக்குள் எழும் ஊக்கம் கூட மறைந்து போகும். அதனால் நாம் தான் நம்மை நகர்த்திச் செல்ல வேண்டும்.


எல்லோருக்கும் உதவி செய்யும் வாய்ப்பும் வசதியும் நமக்கு  இல்லாமல் இருக்கலாம் ஆனால் நம்மால் ஒருவரும் துன்பம் அடையக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கவேண்டும்




#காதல், #பணம், #போதை, #செக்ஸ் இவையெல்லாம் மிகைப்படுத்திப் பேசப்படும் விஷயங்கள், எல்லாத்தூக்கும் முழு நிறைவு நிலை (saturation point )இருக்கிறது அதன் பிறகு அவைகள் சலிப்பை ஏற்படுத்தும்.அந்த சலிப்பைப் போக்க அல்லது வராமல் இருக்க மாற்றத்தைத் தேடி அலைவதுதான் வாழ்க்கை.


ஒருத்தர் என்னிடம் பேசும் போது யாரும் உங்களைப் புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி அமைதியாக இருங்கள் என்று சொன்னார் அதைக் கேட்ட நமது வாய்தான் சும்மா இருக்காதே உடனே அவரிடம் நீங்கச் சொன்ன இரண்டையும் யாரும் பண்ணவில்லையென்றால் அவர்களிடம் வம்பு இழுக்கலாமா என்று கேட்டேன். மனுசன் எழுந்து போய்விட்டார்

பெண்களை நமது பக்கம் இழுக்க மதுரைத்தமிழனின் பிக் அப் லைன் ஒன்று

"உன் குழந்தையை என் குழந்தையாக வைத்துப் பார்த்துக் கொள்கின்றேன் "என்று சொல்லியே பல பெண்களை இங்கே பிக்கப் பண்ணலாம் ஹீஹீ

அன்புடன்

மதுரைத்தமிழன்

7 comments:

  1. "பூரி கட்டை" பறக்கவில்லை எனும் போது மகிழ்ச்சியே...

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை உரிமையாளர் தனது தங்கையோடு இன்று வெளியே சென்று இருக்கிறார் . மைத்துனியால் கிடைத்த லாபம் பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பித்ததுதான்

      Delete
  2. அறிவுரைகள் நல்லாத்தான் இருக்கிறது தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. அறிவுரை சொல்வது எளிதுதானே

      Delete
  3. வீட்டில் அரிசி முதல், மளிகைப்பொருட்கள்  வரை இருக்கும்போது முழுச் சமையலே தயாராய் இருக்கிறதென்றுதானே அர்த்தம்?  அப்புறம் எதற்கு சிம்பிளாய் சாலட்?!!

    ReplyDelete
    Replies
    1. முழுச் சமையலே ரெடியா இருந்தாலும் கணவன் மீதுள்ள அக்கறையால் அவங்க டயட் சாப்பாடி ரெடி பண்ணி வைச்சிருக்காங்க

      Delete
  4. அனைத்தும் ரசித்தேன்.

    பூரிக்கட்டை பறக்க ஏதுவாக நீங்களே சில வேலைகளைச் செய்து விடுகிறீர்கள். அடி வாங்க உங்களுக்கே ஆசை வந்துவிடுகிறது போல!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.