புலிட்சர் பரிசு பெற்ற ராய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் ஆஃப்கானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். ஆனால் அவரது துயர மரணம் இந்தியாவில் இந்துத்துவ தாலிபான்களால் கொண்டாடப்படுகிறது..
கொல்லப்பட்டவர் பாகிஸ்தானி அல்ல இந்தியர். அவர் எந்த மதத்தை, கட்சியை , மாநிலத்தைச் சார்ந்தவராக இருக்கட்டும். அவர் புலிட்சர் பரிசு வென்றவர், ஒரு பத்திரிகையாளர் தனது காலத்தின் யதார்த்தத்தைத் தனது சக்திவாய்ந்த லென்ஸ் மூலம் விவரித்தார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தாலிபான்களின் தாக்குதலில் இறந்தது ஒரு இந்தியக் குடிமகன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் இருந்து ஒரு இரங்கல் வார்த்தை இல்லை.
இரங்கல் வார்தைகளைவிடுங்கள் சுட்ட கொன்ற தாலிபான்கள் மீது ஒரு கண்டனம் கூட இல்லை
ஏன்
டேனிஷ் சித்திக் ஒரு போட்டோகிரபர். அவரின் புகைப்படங்கள் சங்ககிகளால் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டு வெளியிடும் படங்கள் அல்ல. உண்மையை, நடந்த சம்பவங்களை நம் கண் முன்னே கொண்டு வருபவை, அவர் புகைப்படங்கள் மூலம் தன் சொந்த கருத்தைச் சொல்லவில்லை. நடக்கும் உண்மைகளை எடுத்துக் காட்டினாரே தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. மறைக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியமுள்ளவற்றை அவருடைய படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தியிருக்கின்றன
அந்த புகைப்படங்கள் பிரச்சனைகளைச் சொல்லுகின்றன என்றால் அந்த பிரச்சனைகளை எப்படித் தீர்க்க வேண்டும் என்று சிந்திப்பது செயல்படுவதுதான் அரசின் செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர அந்த புகைப்படக்காரர் ஒரு பிரச்சனை என்று பார்க்கக் கூடாது..
டேனிஷ் சித்திக்கின் தனி கேமரா ஒரு அரசு மற்றும் அதனைச் சார்ந்த மீடியாக்க்கள் மறைக்க விரும்புவதைக் உலகத்திற்குக் காட்டியது.
அவரது இந்தியப் புகைப்படங்கள் கொரோனா தொற்றுநோய் பற்றிய மோடியின் பொய்களை அம்பலப்படுத்தின அதைத் தன்னை உலக அளவில் அம்மணபடுத்தியாக மோடி கருதினார். அப்படிக் கருதக் காரணம் அவர் யாரும் படிக்காத கல்லூரியில் படித்து பட்டம் பெற்றதுதான்
கோவிட்டின் முதல் அலைகளின் போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் பல பயங்கரமான படங்களை நாம் பார்த்தோம். அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுத்து வெளியிட்டவர்கள் யாரையும் தேசத்தை அவமானப்படுத்தியதாக அந்த நாட்டுத் தலைவர்கள் முதல் தேச உணர்வு கொண்டவர்கள் யாரும் நினைக்கவில்லை. அந்த புகைப்படக்காரர்களை அங்குத் தேசத் துரோகிகள் என்று அழைக்கவில்லை. ஆனால் நம் நாட்டில் மட்டும் புலிட்சர் வென்ற இந்தியப் பத்திரிகையாளரின் கொடூரமான மரணத்தை நம் மக்கள் அல்ல தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் கொண்டாடுகிறார்கள்
ஒரு நல்ல மனிதனின் கொலை குறித்து இனிப்புகளைக் கொண்டாடுவது மற்றும் விநியோகிப்பது ஜனவரி 30, 1948 முதல் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதானே.. இந்த தேசபக்தர்களின் ஆட்சி நடை பெறும் போது நல்ல மனிதர்களின் மரணம் கொண்டாமாகத்தான் இருக்குமே தவிரத் துயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஃபோட்டோ ஜெர்னலிஸ்ட் # டானிஷ் சித்திக்கு #இந்திய அரசு #BJP, #sanghis மற்றும் #andhbhkats தவிர, இந்திய மக்களில் இருந்து உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இரங்கல் செய்தியைப் பகிர்கிறார்கள் .ஏன் சுட்டுக் கொன்ற தாலிபான்கள் கூட தவறுதலாக நடந்துவிட்டது என்று மன்னிப்பு கோருகிறார்கள்
பாரதமாதாவின் கண்கள் தற்காலிகமாக டேனிஷ் சித்திகின் மறைவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.. ஆனால் டேனிஷ் சித்திகின் மறைவு நாட்டில் பல டேனிஷ் சித்திக்குகளை தோற்று வித்திருக்கிறது அவர்களால் பாரதமாதாவின் பாதித்த கண்கள் திறக்கும் அது இந்திய அரசை மேலும் சுட்டு எரிக்கும்.. அந்த நாளுக்கு தூரம் அதிகமில்லை
சாவு எல்லோருக்கும் வரும் உண்மையை எடுத்துரைத்தவனின் சாவை மகிழ்ந்து கொண்டும் கூட்டங்களுக்குப் பொய்யை மட்டுமே பேசும் ஒரு தலைவன் இருக்கிறான். அவனுக்கும் ஒரு நாள் சாவு வரத்தானே செய்யும்... அப்போது உலகமே கொண்டாடத்தானே செய்யும் அதையும் பார்க்கத்தானே போகிறோம்
அது வரை காத்து இருப்போம் ஜெய்ஹிந்த்... பாரத மாதாஹி ஜே
புலிட்சர் பரிசு பெற்ற ராய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் அல்லது இங்கே க்ளிக் செய்யவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இங்குள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள பயங்கரவாதிகள் செய்யும் கொலை மற்றும் கொலைகளைக் கொண்டாடுகிறார்கள்!
அவர்கள் அனைவருக்கும் , நோக்கம், குறிக்கோள், கனவு மற்றும் ஆசை கொலை மற்றும் அப்பாவிகளைக் கொல்வது மற்றும் கொண்டாடுவது!இதற்குத் துணையாக அவர்கள் மதங்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்
கொசுறு : டிவிட்டர் பதிவு எழுதியவர் "இராஜசேகர்
இந்தியாவில் ஒருவர் சாவை நரேந்திர மோடி பக்தர்கள் குழுவாக சிரிச்சுகிட்டே சாபம் விடுகிறார்கள் என்றால் இறந்தவர் இந்திய மண்ணில் வாழும் மக்களுக்காக ஏதோ ஒரு நற்செயலை தன் வாழ்நாள் முழுக்க செய்துவிட்டு மடிந்தார் என பொருள்.
மோடியால் "மனிதம்" இந்திய மண்ணில் படுகொலை செய்யப்பட்டுவிட்டது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம். மிகவும் வேதனைக்குரியது.
ReplyDeleteஉண்மைதான்
Deleteவேதனையான நிகழ்வு... கொசுறும் அப்பட்டமான உண்மை...
ReplyDeleteநமக்கு வேதனை அரசிற்கு அப்படியல்ல
Delete