Sunday, July 25, 2021


@avargal unmaigal

திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா என்ன?


தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இதுவரை சிறப்பாக நடந்து  வந்து கொண்டிருப்பதாகச்  செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் எனக்கென்னவோ திமுகவின் மோடி எதிர்ப்பு என்பது சும்மா அறிக்கைகளாகவே இருக்கிறது போலத் தெரிகிறது. திமுக தமிழ்கத்த்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் அந்தந்த அவைகளில் சிறப்பாகப் பேசினார்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். ஆனால் இப்போது நடை பெறும் கூட்டங்களில் அவர்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது


மாநிலங்களவை மற்றும் மக்களவைக்குத் தமிழகம் சார்பாக அதுவும் திமுக சார்பாகப் பலரை அனுப்பி இருந்தும் இப்படி  மனோஜ் ஜா, ராஜ்ய சபா என்ற உறுப்பினர்  போல ஒருவரும் பேசாதது வருத்தத்தைத்தான் தருகிறது இவரது  #கொரோனா பற்றிய உணர்ச்சிமிகு உரையைக் கேளுங்கள்.கட்சி சார்பு இல்லாத  ஒரு சராசரி இந்தியனின், மனக்குமுறலை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார் என்றே சொல்லாம்.. இவரது  பேச்சு மாநிலங்களவையை அதிரவைத்து அல்லாமல் வடநாட்டில் சமுக இணையதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே ஒரு அதிர்வையும் ஏற்படுத்தியது ..


அந்த பேச்சு இங்கே






Rashtriya Janata Dal (RJD) MP Professor Manoj Kumar Jha lashed out at the government in the Rajya Sabha. He said that the entire House should apologize to those whose dead bodies were floating in the Ganges.

ஒரு பீகாரிக்கு எழுந்த ஒரு உணர்வு தமிழருக்கு எழவில்லையே, எந்தவொரு தமிழக அரசியல்வாதியும் ஏன் இந்த மாதிரி பேச முடியவில்லை, மோடியின் ஒன்றிய அரசு மட்டுமல்ல ஒவ்வொரு மாநில அரசும் தோல்வியுற்றது, பல மாநிலங்களில் சரியான சுகாதார உள்கட்டமைப்பு இல்லை, பொருளாதார வளர்ச்சிக்கு பதில் பெட்ரோல் விலை  உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது.

 

ஸ்டாலின் அவர்களே எமர்ஜன்சி காலத்தில் கலைஞரின் மகனாகச் சிறை சென்றீர்கள். இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜன்சி ஆட்சி நடக்கிறது நீங்களும் தமிழக முதல்வராக இருக்கிறீர்கள், இந்த அறிவிக்கப்படாத எமர்ஜன்சியை  கலைஞரின் மகனாக இல்லாமல் தமிழக தலைவனாகத் துணிச்சலாக எதிர்கொள்வீர்களா அல்லது  எடப்பாடி & பன்னீர் செல்வம் 2.0 வாக மாறப் போகிறீர்களா?


மோடியின் தாடியை  வைத்து கலாய்க்கும் அண்ணாமலை


 





கொசுறு :

In Bhakt's diary,

Petrol at Rs,107? use a bicycle

Cooking oil at Rs 200? Use Crude oil

LPG at Rs900? Use a Ghaslet Stove

Don't blame Modiji for your Low Income .

You were told it would be Rs.2 per tweet right from the beginning!!



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.