Wednesday, July 14, 2021

  

avargal unmaigal

மனிதர்கள் இப்படித்தான்.

நம்மை  முதன் முதலாகச்  சந்திக்கும் ஒருவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் அதாவது  வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அதன் மூலம் உங்களுக்கு என்ன மாதிரியான மரியாதை வழங்கும் அளவை அவர்கள் கணக்கிடப்பதற்காகவேதானே தவிர உங்களுக்கு உதவி செய்வதற்கு அல்ல


அது போலவேதான் சமுக இணைய தளங்களிலும்  உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு இல்லை உங்களின் தகுதிக்குதான் மதிப்பு நீங்கள் உயர்ந்த பதவியிலிருந்து அல்லது அந்தஸ்திலிருந்து கொண்டு மாற்றுக் கருத்துக்களைக் கடுமையான  சொற்களால் இட்டாலும் மாற்றுக் கருத்து இருக்கத்தான் செய்யும் அதற்காக நட்பில் விரிசல் கூடாது என்று சொல்பவர்கள்தான் தன்னைவிட அந்தஸ்தில் குறைந்தவன் அல்லது மிகச் சாதாரண வேலையில் இருப்பவன் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னால் ச்சே இவன் மோசமான ஆள் நாகரீகமற்ற ஆள் என்று முத்திரை குத்தி நம்மை விலக்கி விடுவார்கள்.


நான் ஒருபோதும்  மற்றவர்கள் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளை நம்புவதில்லை .. அவர்களின் சில செயல்களைப் பார்க்கும் போது  அவர்களுடன்  நட்புடன் சேர்ந்து இருப்பதா அல்லது விலகிப் போவதா என முடிவு  செய்து விடுகின்றேன்


நம்மைக் கவர்ந்த பலர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் போது நமக்கு அவர்கள் கவர்ச்சியற்றவர்களாகிவிடுகின்றனர்



பசித்த வயிறும் , காலியான பர்ஸும்  உடைந்த இதயமும் நமக்கு கற்றுத் தரும் பாடத்தை எந்த கல்லூரியும் நமக்குக் கற்றுத்தருவதில்லை.


மோடி மீது பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாகப் பல சங்கிகள் நடிக்கிறார்களே தவிர உண்மையில் நம்புவதில்லை.


நம்மைக் கவர்ந்த பலர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் போது நமக்கு அவர்கள் கவர்ச்சியற்றவர்களாகிவிடுகின்றனர்''
@avarhal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. அரசியலுக்கு அப்பாற்பட்டும் அற்புதமான உண்மை.

    ReplyDelete
  2. கில்லர்ஜி சொல்வதுபோல அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயம் உண்மை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.