வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்
இந்த நாட்டில் பட்டினி மரணம் இருக்கும்போது,
பசிக் காரணமாக மரணம் ஏற்படவில்லை
என்று அரசாங்கங்கம் கூறுகின்றது.
இப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
மக்கள் இறந்தனர், ஆனால் மாநிலங்களில் இருந்து
பெறப்பட்டத் தரவுகளில்
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
யாரும் இறக்கவில்லை என்று
ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இது உண்மைதான் !
மக்கள் இறந்தது
ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் அல்ல
அரசங்காத்தின் திறமையின்மையால்தான்
கவனக் குறைவால்தான்
புத்தியில்லாத தலைமையினால்தான்
அதோடு பொறுப்புணர்வு இல்லாத மக்களால்தான்
எதிர்க்கட்சிகள் செய்திகளைத் திரித்து மக்களைக் கெடுக்கின்றன.. அதனை அறிந்து அரசாங்கம் வெளியிட்டச் செய்தி விளக்கங்கள்
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. உண்மையான தேசபக்தி குடிமகனாக இருந்தால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று நம்புவது நமது கடமையாகும்.
மக்கள் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையையும் கோவிட் பெயரில் எடுக்கப்பட்ட படங்களின் புதிய விளக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
1. பலூன்களை வானில் பறக்க விட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்ப வரிசையில் நிற்பவர்கள்
2. தீபாவளி பண்டிகை ட்ரெய்ல் கொண்டாட்டங்களுக்காக பட்டாசு வெடிக்கப்பட்டு சரி பார்க்கும் நிகழ்வு
3, மூவர்ண தூண் அருகே வெகுஜன ஹோலிகா தஹானுக்கான ஏற்பாடுகள்
4 .காதலர் நாளில் காதல் வெளிப்பாடு
5. நைஜீரிய மருத்துவமனை ஆக்ஸிஜன் இல்லாததை அறிவித்தது
அன்புடன்
மதுரைத்தமிழன்
பொய்களே அவர்களின் முதல் மூலதனம்...
ReplyDelete