Sunday, July 18, 2021

 


பெரியவர்கள் சொல்லும் அட்வைஸை கேட்காதீங்க 

சாதாரணமா கணவன் மனைவியிடம் சின்ன சின்ன சண்டைகள் மனஸ்தாபங்கள் வருவது இயல்பு.. அதுதான் வாழ்க்கை.. ஆனால் சில சமயங்களில் பெரியவர்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிட்டு அட்வைஸ் பண்ணுவார்கள் அந்த அட்வைஸை பாலோ பண்ணினால் வாழ்க்கையில் பெரிய குழப்பமே வந்துடும்

உதாரணமாக ஒரு நடந்த சம்பவத்தைச் சொல்லுகிறேன். அதன் பின் நீங்களே ஒரு முடிவிற்கு வாங்க... நான் பொதுவாகவே மனைவியின் சமையலைக் குற்றம் குறை கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டு இருப்பேன். இதை  என் வீட்டிற்கு வந்த பெரியவர் ஒருவர் கவனித்து  அவருடன் நேற்று மாலைப் பொழுதில் நான் வெளியே செல்லும் போது எனக்கு இப்படி அட்வைஸ் பண்ணினார்.

தம்பி நீங்க எப்ப பார்த்தாலும் மனைவியின் சமையலைக் குறை சொல்லிக்கிட்டே இருக்கிறீங்க இனிமேல் அப்படிச் செய்வதற்குப் பதிலாக நன்றாகப் பாராட்டுங்கள். சுவை அருமையாக இருக்கிறது .இதைச் செய்த உன்னைக் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது அல்லது தங்க வளையல் வாங்கிப் போடவேண்டும் என்று சொல்லுங்க .அதன் பின் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றமும் சந்தோசமும் வரும் என்று சொன்னார்.

நானும் பெரியவர் சொன்னால் பெருமாளே சொன்ன மாதிரி என்று சரி என்று சொல்லி வீட்டிற்கு வந்தேன்.

வீட்டில் என் மனைவி இரவு உணவை மேஜையில் எடுத்து வைத்து எனக்கு பரிமாறிக் கொண்டே அவளும் சாப்பிட ஆரம்பித்தார். எனக்கு உடனே அந்த பெரியவர் சொன்ன அட்வைஸ்கள் மனதில் எழுந்ததால் அதைப் பயன்படுத்திப் பார்ப்போம் என்று கருதிச் சமையலைப் பாராட்டி அதை மிகச் சுவையாகப் பண்ணியதற்குத் தங்க வளையல் தான் பண்ணிப் போடனும் அது மட்டுமல்ல இந்த உணவைச் சமைத்த உனக்கு முத்தங்களை அள்ளி தரவேண்டும் என்றுதான் சொன்னேன்.

அதன் பின் நடந்தது என்னவென்று தெரியவில்லை என்னைத் திட்டிக் கொண்டு என்னை தரதரவென்று இழுத்து வீட்டிற்கு வெளியே போட்டு விட்டு மிகக் கோபத்துடன் கதவை அடைத்துச் சென்றுவிட்டார்

அந்த நேரம் பார்த்து பக்கத்துவீட்டுப் பெண் என்ன தோழரே வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டவாறே  இன்று நான் உங்களுக்காகச் சமைத்துக் கொடுத்து அனுப்பியதை சாப்பிட்டீர்களா பிடித்து இருந்ததா என்று கேட்டார்

அப்போதுதான் நடந்த சம்பவத்திற்கான காரணம் புரிந்தது. இதனால் வரை மனைவியின் சமையலைக் குறை கூறிக் கொண்டு இருந்த நான் இன்று பக்கத்துவீட்டுக்காரியின் சமையல் என்பது தெரியாமல் புகழ்ந்து இருக்கின்றேன் என்பது

இதற்குத்தான் சொல்லுவது பெரியவங்க சொல்லுகிற அட்வைஸை கேட்கக் கூடாது என்பது. நான் சொலவது சரிதானே மக்கா


பாரதமாதாவின் கண்களைக் குருடாக்கியதைக் கொண்டாடும் இந்துத்துவ தாலிபான்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. இதுமாதிரியும் சிக்கல் உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. சிக்கல் எந்த வழியிலும் வரும் ஆனால் வந்தற்கு அப்புறம் அதை சமாளித்து வாழ்வதில்தான் வாழ்க்கையே இருக்கிறது

      Delete
  2. ஹா.ஹா... இது பெரும் சிக்கல் தான் மதுரைத் தமிழரே! கவனம் தேவை!

    ReplyDelete
  3. மனைவியிடம் சமையலைப் பற்றி புகழும் முன் யார் செய்தது என்று தெளிவுபடுத்திய பின்பே புகழ வேண்டும் என்கிற ஒரு சமூக விழிப்புணர்வுப் பதிவு 😊😊😊

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.