Thursday, July 15, 2021

 

@avargal unmaigal

ஊரை புரிஞ்சுக்கோ உலகம் தெரிஞ்சுக்கோ

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலர் உண்மையிலே நம்மை நேசிக்கமாட்டார்கள். ஏன் அவர்கள் உங்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. ஆனாலும் அவர்கள் உங்களுடன் இணைந்திருக்க விரும்புவார்கள். காரணம் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து பெனிஃபிட்டை மட்டும் விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் உங்களை டச்சில் வைத்திருக்க அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரிப்பது போல விசாரித்து நம்மிடையே தொடர்பை இழக்காமல் வைத்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் போது அல்லது விரும்பும் போது உங்களிடம் இருந்து அவர்கள் பெற வேண்டியதைச் சாகசமாகக் கரந்து கொள்வார்கள்.. இதுதான் உண்மை நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இனிமேலாவது கூர்ந்து கவனித்துப் பாருங்கள் ,நான் சொல்வதில் உள்ள உண்மைகள் உங்களுக்குப் புரியும்


எல்லோரும் நமது நண்பர்கள் இல்லை, அவர்கள் நம்முடனே இருந்து பேசி சிரித்து மகிழ்வதால் அவர்கள் நம்மவர்கள் அல்ல. அவர்கள் நம் பின்னே இருப்பதால் நம்மைத் தாங்குவார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். முதுகில் குத்தவும் அவர்கள் நம் பின்னாலே இருப்பார்கள். மக்கள் நன்றாகவே நடிக்கிறார்கள் இந்தக் காலத்தில். சூழ்நிலைகள்தான் போலி நபர்களை நமக்கு அம்பலபடுத்துகின்றன. அதனால்தான் நாம் நமது உண்மையான நட்பு வட்டத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் எப்போதும் ஈடுபடவேண்டும். இன்றைய கால கட்டத்தில் நல்ல பதவியில் அல்லது பிஸ்னஸ்மேன்களாக இருப்பவர்கள் சமுக இணைய தளங்களில் இயங்கும் போது மிகக் கவனமாக இருங்கள். உங்களின் எல்லா செயல்களையும் ஆதரிப்பவர்கள் எல்லோரையும் நம்பிவிடாதீர்கள். பலர் உங்களிடம் இருந்து பலனை அறுவடை செய்யவே இப்படிச் செய்கிறார்கள் நேரம் வரும் போது உங்களைக் கவிழ்த்துவிடக் கூடிய பொறாமை பிடித்தவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.. எனவே கவனமாக இருங்கள்



சாகசத்தைக் கையாளுபவர்களுக்கு எல்லைகளே இல்லை . அவர்கள் விரும்புவதைப் பின்தொடர்வதில் அவர்கள் அயராது இருக்கிறார்கள், வழியில் யாருக்கு வலிக்கிறது என்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் விரும்பியதை அடைந்த சந்தோஷத்தில் இருக்கும் போது நாம் அவர்களிடம் இழந்த வலியின் வேதனையில் இருப்போம். வலி வேதனைகள் நமக்கு வராமல் இருக்க நமக்கும் மற்றவர்களைக் கையாளும் திறமை இந்த காலத்தில் இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் நாம் வலியில் அழுது கொண்டுதான் இருக்க வேண்டும்


கொசுறு :ஒருவர் நம்மிடம் சொல்லும் பொய் அவர் நம்மிடம் சொன்ன பல உண்மைகளைக் கேள்விக்குரியதாக்கிவிடும்


தாங்கள் சொல்லும் பொய்களை உண்மைகள் என்று கருதி வாதிடுபவர்களிடம்(சங்கிகளிடம்) வாதம் செய்யாமல் இருப்பதே நல்லது


அன்புடன்
மதுரைத்தமிழன்


8 comments:

  1. உண்மை... அறிந்து கொண்ட பின் ஒதுங்கிக் கொள்வதே நல்லது...

    ReplyDelete
    Replies
    1. அறிந்த பின் விலகுவதை விட அறிந்த பின் சிறந்த நட்புக் கொள்வதுதான் சிறப்பு

      Delete
  2. நிதர்சனமான உண்மைகள் தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. உலகத்தை புரிந்து வாழ்பவர்களுக்கு இந்த உண்மைகள் எளிதில் புரியும்

      Delete
  3. உண்மை.
    நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
    Replies
    1. அப்பாவிகள் அறிந்து கொள்ள இந்த பதிவு உதவலாம் என்ற நோக்கில் பதிந்து இருக்கின்றேன்

      Delete
  4. மற்றவர்கள் நம்மிடம் எப்படி  கொள்கிறார்கள் என்று பார்க்கவேண்டியதுதான்.  அதே சமயம் நாமும் மற்றவர்களிடம் அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கவேண்டும்.  நம் மனசாட்சிக்கு நாம் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

    ReplyDelete
    Replies
    1. யாரை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டால் நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதே இல்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.