Tuesday, March 12, 2019

பொள்ளாச்சியும் பொல்லாத ஆட்சியும்



பொள்ளாச்சி சம்பவம்தான் கடந்த இரு தினங்களாக பேசப்படும் பொருளாக இருக்கின்றது.....அதை பற்றிய செய்தியை படிக்கும் போது அதைபற்றி எழுதியவர்கள்  எல்லாம் மனம் பதைபதைக்கிறது என்றுதான் எழுதுகிறார்கள் ஆனால் எனக்கு மனம் எல்லாம் பதைபதைக்கவில்லை மனத்தில் ஒரு வகையான வெறிதான் வருகிறது.தப்பு பண்ணியவர்களை அப்படியே உயிரோடு கொளுத்தி விட வேண்டும் என்ற வெறிதான் அது..


இந்த சம்பவத்தை கேள்விபட்ட போது 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன் .இந்த 200 பேரில் ஒருவர்தான் தன் வீட்டில் சொல்லி அதன் பின் அந்த பெண்ணின் வீட்டார்கள் போலீஸில்  கம்பளெயெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்... எனக்கு அந்த பெண்ணையும் பெண் வீட்டாரையும் பாராட்டத்தான் தோன்றுகிறது காரணம் அவர்கள் துணிச்சலாக போலீஸில்  கம்பளெயெண்ட் கொடுத்தற்காக....

இந்த காலத்தில் இளம் வயதில் ஆணோ அல்லது பெண்ணோ காதல் வயப்படுவதில் ஆச்சிரியம் இல்லை ஆனால் அந்த காதலை பயன்படுத்தி தன்னை ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் பண்ணிய போது அதைவீட்டில் வந்து சொல்லிய பெண்ணின் துணிச்சல் மட்டுமில்லை அப்படி சொன்னால் சொன்ன பிள்ளையை கரித்து கொட்டாமல் அடுத்த நடவடிக்கையில் இறங்கிய அந்த பெண்ணின் குடும்பத்தாரை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை.... சொல்லப்போனால நாட்டில் பல விருதுகள் தருகிறார்களே அந்த விருதுகளில் ஒன்றை இந்த பெண்ணிற்கோ அல்லது அவரின் குடும்பத்தாற்க்கோ கொடுக்க வேண்டும்... இந்த குடும்பத்தார்கள் மட்டும் வாய் திறக்கவில்லையென்றால் இன்னும் பல வருடங்களுக்கு இந்தக் கொடுமை நீடித்திருக்கும் 200 பெண்களுக்கு பதில் ஆயிராமவது ஆகி இருக்கும்


இந்த குடும்பத்தாரின் பக்குவம் மற்ற  பாதித்த  பெண்ணிற்கும் அவர்களின் பெற்றோருக்கு வர வேண்டும் அதைவிட்டு விட்டு குடும்ப கௌரவம் மானம் மரியாதை என்று இன்னும் பழைய  உடைந்த  ரிக்கார்ட்டை போலவே இந்த காலத்திலும் பாடிக் கொண்டிருக்க கூடாது. உன்னுடைய நிர்வாண போட்டோவை போடுவேன் வீடியோவை வெளியிடுவேன் என்று சொல்லி மிரட்டினால் போட்டால் போட்டுக்கோ அதனால் என் வாழ்வு முடிந்துவிடாது என்று தைரியாமாக பேச வேண்டும் எப்படி நம் கை கால் முகம் வயிறு வெளியே தெரிகிறதோ அது போல நம் உடம்பில் உள்ள ம்றைக்கப்பட்ட பகுதி வெளியே தெரியப் போகிறது அவ்வளவுதானே அதனால் ஒன்றும் தலைமுழுகிவிடாது எப்படி ஆண்களின் பெயரில் இப்படி கொடிய மிருகங்கள்  இந்த சமுகத்தில் உலா வருகிறதோ அது போலவே நல்ல மனதுடைய ஆண்களும் இந்த சமுகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அவர்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல வாழ்வை கொடுப்பார்கள்
 


இங்கு நான் சொல்வது ஏதோ பதிவு போடுவதற்காக சொல்லம் அறிவுரை அல்ல.. எனக்கும்  ஒரு மகள் இருக்கிறாள் அவள் இந்த  வருடம் 11 ஆம் வகூபு படிக்கிறாள் அவளுக்கு 5 ஆம் வகுப்பிலே ஹெல்த கிளாஸ் என்ற பெயரில் ஆண் பெண்களுக்கு உள்ள வேறுபாடு மற்றும் செகஸ் பற்றிய கல்வியை பள்ளியிலே கற்று தருகிறார்கள் அவள் 9வது வகுப்புக்கு ஹை ஸ்கூலுக்கு போய் வரும் போது அவளுக்கு நான் சொல்லி கொடுத்தது இதுதான் அவளிடம் இந்த  வயதில் செக்ஸ் வைத்து கொள்வது சரி தப்பு என்று எல்லாம் சொல்லி விளக்கவில்லை ஆனால் இளம் வயதில் தவறுகள் நிகழ வாய்ப்புக்கள் உண்டு... ஆனால் எந்த நேரத்திலு அப்படி ஒரு தவறு நேர்ந்தால் அதை வைத்து யாரவது  ப்ளாக் மெயில் பண்ணினால் பயந்து போய் இருக்காதே என்ன நடந்தாலும் என்னிடம் சொல்லு நான் அதை பார்த்து கொள்கிறேன் என்றுதான் சொல்லி வளர்த்து இருக்கிறேன்


மேலும் வாழ்க்கையில் யாரையும் சார்ந்து இருக்காதே சுயமாக நிற்க கற்றுக் கொள் என்றும் சொல்லி வளர்த்து வருகிறேன் இன்ரு இருக்கும் நண்பர்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம் அது நீ விரும்பிய பையனோ அல்லது  கல்யாணம் பண்ணிய பின் கூட இருக்கும் கணவன் விட்டுக் கூட போகலாம் அதனால் யாரையும் சார்ந்து இருக்காமல் சுயமாக வாழ கற்றுக் கொள் என்றும் சொல்லி வருகிறேன்

அது போலவே சாவை பற்றியும் சொல்லி வளர்த்து இருக்கிறேன் இன்று இருக்கும் நான் நாளை இல்லாமல் இருக்காலாம் அப்படி ஒரு நிலை வரும் என்றால் அதற்காக கண் கல்ங்கி நிற்க கூடாது சிறிது நேரம் வேண்டுமென்றால் அழுது கொள் அதன் பின் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று ப்ராக்டிக்கலாக சிந்தித்து செயல்படு என்றும் சொல்லி வளர்த்து வருகிறேன்.

அது போல வீட்டில் தீ பிடித்தாலோ அல்லது தீடீர் வெள்ளம் ஏற்பட்டாலோ அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி அடிக்கடி ஞாபபடுத்தி வருகிறேன்...

இப்படித்தான் நான் பெண்னை வளர்க்க வேண்டும் என நினைக்கிறேன் அதன்படியே வளர்த்தும் வருகிறேன்... அது போல தனக்கு எது நேர்ந்தாலும் அப்பா என்றும் துணை நிற்பார் உயிரையும் கொடுப்பார் என்று அவளுக்கு நன்றாக புரிந்து இருக்கிறது





அன்புடன்
மதுரைத்தமிழன்



டிஸ்கி : இந்த நிகழ்வை ஆளும் கட்சியில் உள்ளவர்கள் செய்து இருந்தாலோ அல்லது மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் செய்து இருந்தாலும் அதை கட்சி ரீதியாக பார்க்காமல் தவரு செய்த மிருகங்களுக்கு கடும் தண்டனை பெற்று தரவேண்டும்

14 comments:

  1. இப்பதிவுக்கு எமது சல்யூட் நண்பரே

    ReplyDelete
  2. தைரியமும் நேர்மையும் சொல்லி பெண்ணை வளர்த்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மனோ சாமிநாதன்

      Delete
  3. மதுரை இச்சம்பவத்தை இப்போதுதான் வாசித்தேன்...வாசித்துவிட்டு வரும் போது உங்கள் பதிவு.

    நானும் வேதன படுவது ஒரு புறம் என்றாலும் அதை விட நீங்கள் சொன்ன விஷயத்தையே நானும் ஆதரிக்கிறேன். அப்பெண் தைரியமாகக் கம்ப்ளெயின்ட் கொடுத்ததும் அவள் பெற்றோர் அவளுக்கு ஆதரவாக இருப்பதும் மிக நல்ல விஷயம். இப்படி எல்லா பெற்றோரும் இருந்தால் நல்லது அதாவது பாதிக்கப்பட்ட பெண்கள் என்றில்லை, பெண்களுக்கு தைரியமும், தனித்து வாழக் கற்றுக் கொடுப்பதும் மிக மிக முக்கியம். உங்களுக்கும் பாராட்டுகள் மதுரை...உங்கள் பெண்ணை அப்படி வளர்த்ததற்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கர்நாடக பாடகி கீதா

      Delete
  4. எங்கு பார்த்தாலும் இந்த செய்திதான். வாசித்தும் பார்த்தும் மனம் கொதித்தது. எனக்கும் உடனேயே சுட்டு போட்டிருக்கனும் அவங்களை என்ற அளவு கோபம். திரும்ப திரும்ப அந்த பெண்ணின் குரல் கேட்டுக்கொண்டே இருந்திச்சு. பாதிக்கப்பட்ட பெண்ணும் துணிச்சலா சொல்லியிருக்காவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் பலிக்கடாவாகியிருப்பாங்க. இத்தருணத்தில் குடும்பத்தினர் சப்போர்ட் மிக அவசியம்.
    இங்கு பெண்பிள்ளைகளை மட்டும்மில்லை ஆண்பிள்ளைகளுக்கும் சில விடயங்கள் சொல்லிகொடுக்கதான் வேண்டியிருக்கு. உங்கள் மகளுக்கு சொல்லி வளர்ப்பது வரவேற்கப்படவேண்டியதொன்று. இங்கு வளரும் பெண்பிள்ளைகளுக்கு நீங்க சொன்ன அறிவுரைகள் கண்டிப்பாக தேவையானது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரீயசகி

      Delete
  5. இவ்வளவு காலம் நீங்கள் எழுதியதில் மிக சிறந்த பதிவு இது.

    உங்களை போல ஒரு தகப்பன் கிடைத்தால் பெண் குழந்தைகள் மட்டுமல்ல எந்த குழந்தையும் உலகை வெல்லலாம். உங்கள் மகள் பாக்கியசாலி. ஆனால் இப்படி பெற்றோர் கிடப்பது நம் தமிழ் சமுதாயத்தில் அரிதாகவே இருக்கிறது.

    கடைசி பந்தியை ஒரு ஆதங்கத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் சட்டத்தை நாம் கையில் எடுப்பது நடைமுறையில் சரியாக இருக்காது. அதனால் அந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு இந்த பதிவை சமூகவலைத்தளங்களில் பகிருங்கள். இந்த அருமையான விழிப்புணர்வு பலரை சென்றடையட்டும். ஏதோ ஒருவர் மனம் மாறினாலே அது வெற்றி தானே?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ்ஸ்ரீ

      Delete
  6. அருமையான பதிவு ப்ரண்ட் .இன்னொன்றும் சொல்லணும் ஒரு பெற்றோர் எப்படி அந்த பாதிக்கப்பட்ட வையாமல் இன்னும் அவளை அமுக்கி வைக்காம தைரியமாக காவல்நிலையத்துக்கு சென்று எது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறாங்களோ அதேபோல இந்த மாதிரி சூழலில் பாதிக்கப்பட்டோருக்கு அனைவரும் துணை நிற்கணும் நானா காணொளிலாம் பார்க்கவில்லை .பார்க்கும் தைரியமுமில்லை .இந்த பெண்களும் பொதுவெளியில் அற்பத்தனமா சிம்பதிக்காக எல்லாத்தையும் உளறிக்கொட்டி பொதுவெளியில் என் உரிமை மண்ணாங்கட்டி என்று feminism ---------- --------- என்று பேசுறதை விட்டு இன்பாக்ஸ் சாட்டிங் போன்றவற்றை தெரியாதோருடன் தவிர்ப்பது நல்லது .பொண்டாட்டி பிள்ளைக்கு காலைவணக்கம் சொல்லாதெல்லாம் இன்பாக்சில் வந்து சல்யூட் வைக்கும் அந்த சல்யூட் தான் பின்னாளில் ஆப்பும் வைக்கும் அதுகூட புரிஞ்சிக்காத முட்டாள் பெண்களே இங்கே அதிகம் .
    ஆனாலும் பெண்களின் அறியாமையை இயலாமையை யூஸ் பண்ற ஜென்மங்களை என்ன சொல்வது :(

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சமையல்கலை வித்தகி ஏஞ்சல்

      Delete
  7. மகளை அருமையாக நல்ல தேவையான விஷயங்களை சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிங்க .நானும் மகளுக்கு இதைத்தான் சொல்லிகொடுத்திருக்கேன் .தப்பு நாமாய் செய்யணும்னு இல்லை எந் சூழல் எதிர்பாராம கூட நாம் விக்டிம் ஆகி ஆக்கப்பட்டு இருப்போம் அதுக்காக தலை குனிந்து வெட்கப்பட்டு போக வேண்டிய அவசியமில்லை எதையும் சமாளிக்கும் திறன் வேண்டும் பெண்களுக்கு .தப்பு செஞ்ச பொறுக்கிதான் கவலைப்படணும் கூனிக்குருகனும் .உங்களை போல எல்லா தகப்பன்களும் இருக்கணும்

    ReplyDelete
  8. அருமையான பதிவு - ஒரு தந்தையின் பொறுப்புடனும் - கோபத்துடனும் வெளிப்படுகிறது வார்த்தைகள் - ர-ராஜன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.