Saturday, March 9, 2019

@avargal unmaigal
கேப்டனின் முடிவுதான் இறுதி முடிவு?




என்னங்க நம்ம வீட்டுல யாரு கேப்டன்

அதிலே என்ன சந்தேகம் நீதானம்மா நம்வீட்டு கேப்டன்

அப்ப கூட்டணி பற்றி நான் எடுக்கும் முடிவு

கேப்டன் எடுக்கும் முடிவும்மா


அவ்வளவுதானுங்க விஷயம்

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கீடாம். 

திமுக  வேட்டியை உருவி விட்டு கேப்டனை அவமானபடுத்திவிட்டதால் அதனுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டேன்

அடப்பாவிங்களா நான் தூங்கும் போது என் வேட்டியை உருவிட்டாங்களா திருட்டு பசங்க


அதில்லைங்க நம்ம மானத்தை வாங்கிட்டைதைத்தான் நான் அப்படி சொன்னேன்.

திமுக உருவிவிட்டதால் அதிமுககூட கூட்டணி வைச்சிகிலாம் என்று முடிவு பண்ணிட்டேன்

ஏன் இவங்க உருவிவிட்ட வேட்டியை அவங்க வாங்கி கொடுத்துட்டாங்களா?


இல்லைங்க அவங்கதான் எனக்கு பட்டு சேலையும் வைர நெக்லஸும் நிறைய வாங்கி தரதா  வாக்குறுதி அளிச்சிருக்காங்க







நிருபர்: துரைமுருகன் வீட்டுக்கு முன்னாடி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்களே?

மதுரைத்தமிழன் :துரை முருகன் அவிழ்த்துவிட்ட வேட்டியை கேட்டு அண்ணி அனுப்பிய ஆளுங்களாக இருப்பாங்க



அதிமுக கூட்டணியில் பிரமலதா விஜயகாந்திற்கு இடம் கொடுத்த எடப்பாடி சேலம் மாவட்டதிற்கு பிரச்சாராம் போகும் மேடையில் பிரமலாதாவிற்கு இடம் கொடுப்பாரா இல்லை ரோகினிக்குதான் இடம் கொடுப்பாரா?



அன்புடன்
மதுரைத்தமிழன்
09 Mar 2019

6 comments:

  1. மானங்கெட்ட கூட்டங்கள்.

    ReplyDelete
  2. என்ன மதுரை உங்க வீட்டுக் கேப்டனைப் பத்தி எழுதறீங்கனு பார்த்தா... அதுவும் முதல் மூன்று வரிகள் அப்படித்தான் தோனிச்சு...ஆஹா நம்ம மதுரை ரொம்ப நாளைக்கப்புறம் நகைச்சுவைப் பதிவு போட்டுருக்கார்னு பார்த்தா....ஏமாந்து போனேன்..ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சாரிப்பா நகைச்சுவையாய் எழுத நினைத்தால் அரசியலே வந்து விழுகிறது... சரி உங்களுக்காக அடுத்த பதிவு அரசியல் இல்லாத பதிவு, ஆனால் நோ நகைச்சுவை

      Delete
  3. இவங்க அரசியல் பார்த்து .....

    ReplyDelete
  4. கேப்டனுடைய உடல்நிலையை வீடியோவில் பார்த்தாலே தெரியுது அவர் முடிவு எடுக்கக் கூடிய கண்டிஷனில் இருக்கிறாரா என்று!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.