Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி கயவர்களுக்கு இப்படித்தான் தண்டனை தரவேண்டும்?


பொள்ளாச்சியில் நடை பெற்ற சம்பவம் மாதிரி இனிமேல் நடை பெற்றால் போலீஸிடம் செல்லாதீர்கள் இப்படி ஒரு தண்டனையை கொடுங்கள் அப்படி கொடுக்கும் போது ஒரு வீடியோ எடுத்து வெளியிடுங்கள்



=================================================
Disclaimer: பெண்கள், என் மீது மரியாதை வைத்திருப்பவர்கள், அம்பிகள், ரூல்ஸ் ராமானுஜங்கள் இதை கடந்துப் போங்கள். படித்தால் வருத்தப் படுவீர்கள்.

சம்பவம்
========

+1 படித்துக் கொண்டு இருந்த காலம். வெஸ்பானிஷ் டீமிலேயே நான் தான் ஜூனியர். கேப்டன் அருண். துணை கேப்டன் அக்தர். கொருக்குப் பேட்டை ரயில்வே ட்ராக் தாண்டி அந்த பக்கம் போனால் அப்போது ஐ.ஒ.சி நகரென்று ஒரு இடமிருந்தது. ரயில்வே ட்ராக்கிற்கு பக்கத்தில் ஐ.ஒ.சியின் ஏகப்பட்ட நிலம், அது தான் எங்களுடைய கிரிக்கெட் கிரவுண்டு. வாராவாரம் சனி/ஞாயிறு காலை ஐந்திலிருந்து மதியம் நான்கு வரை அங்கு தான் ஆட்டம் களைக் கட்டும். ஏதாவது ஒரு பெட் மேட்ச்சோ, பால் மேட்ச்சோ நடக்கும். ஜெயிப்போம், தோற்ப்போம் ஆனால் வாராவாரம் விளையாடுதல் கட்டாயம். திடீரென சேர்ந்தாற் போல மூன்று வாரங்கள் அருணும், அக்தரும் விளையாட வரவில்லை. கேட்டால் ‘சின்ன மேட்டரு, ஆந்திரா வரைக்கும் போயிருக்காங்க’ என்பது தான் பதிலாக இருந்தது.

நான்காவது வாரம் வழக்கம் போல வந்தார்கள். விளையாடினார்கள். ஆடி முடித்ததும் செட்டியார் கடையில் மோருக்கு ஒதுங்கினார்கள். ஒதுங்கிய போதே ஏரியா ரவுடிகள் நேராக வந்து அக்தரைப் பார்த்து வணக்கம் வைத்து விட்டு, ‘முடிச்சிட்டிங்க போல, டில்லி சொன்னாரு. எங்ககிட்ட வர வேண்டியது. நீங்க எடுத்துட்டீங்க. அடுத்த தபா ஒரு வார்த்தை சொல்லிடுங்க தம்பிங்களா’ என்று சொல்லி விட்டு நகர்ந்தார்கள்.

மெதுவாய் டெய்லர் கடைக்கு வந்த பிறகு அக்தர் தான் சொல்ல ஆரம்பித்தார். ஒரு சிறு முதலாளியின் மனைவியின் தங்கையை யாரோ ‘முடித்து விட்டு’ கழட்டி விட்டார்கள். வெளியில் சொல்ல பயந்த அந்த பெண், விஷம் குடித்து விட்டு, எப்படியோ காப்பாற்றி, காதும் காதும் வைத்தாற் போல வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். ஆனால் அந்த சிறு முதலாளியால் தாங்கவே முடியவில்லை. யார் மச்சினியை ‘முடித்தது’ என்று தேட ஆரம்பித்து கண்டு பிடித்தார். ஒரு ஆள் அல்ல, நண்பர்களாய் மூவர். விஷயம் ரகசியமாய் ‘சபைக்குள்’ வந்தது. சபை அருண், அக்தர் அவர்களோடு இன்னும் சில ஆட்களிடத்திலும் பொறுப்பைக் கொடுத்தது. மூவரையும் தனித்தனியாக 'தூக்கி' தடா தாண்டி ஆந்திரா எல்லையில் ஒரு இடத்திற்குள் கொண்டுப் போனார்கள்.

நல்ல சாப்பாடு. லோக்கல் சாராயம் என மேலே கீறல் கூட விழாமல் ஒரு வாரம் உபசரித்தார்கள். எந்த கேள்வியும் கேட்கவே இல்லை. அந்த மூவரணி எவ்வளவோ கெஞ்சியும் அடிக்கவே இல்லை. அந்த ஒருவாரத்தில் அடுத்த அறையில் கரும்பு ஜூஸ் குடித்து தூக்கி எறியப்படும் சக்கைகளை சேகரித்தார்கள். அடுத்த வாரத்திலிருந்து ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தது. மூவரையும் நிர்வாணப் படுத்தி வெல்லப் பாகை உடல் முழுக்க பூசி, கரும்பு சக்கைகளை அவர்கள் இருக்கும் அறையில் பரப்ப ஆரம்பித்தார்கள். சக்கை, வெல்லப் பாகிற்கு எறும்புகள் வர ஆரம்பித்தன. நிர்வாண உடலில் வெல்லப் பாகு கரையும் போதெல்லாம், சாராயம் ஊற்றிக் கொடுத்து மீண்டும் தடவ ஆரம்பித்தார்கள். போதாத குறைக்கு, சக்கைகளுக்குள் எலிகளும், பெருச்சாளிகளும் நுழைய ஆரம்பித்தன. சிறுநீர் கழித்தால் போதை இறங்கி விடும் என்பதால், ஆணுறுப்பில் ரப்பர் பேண்ட் போடப் பட்டது. கட்டெறும்புகள், எலிகள், பெருச்சாளிகள், தெளியும் போதெல்லாம் சாராயம் என இரண்டாவது வாரம் போனது. அடுத்த வாரம் சாராயம் நிறுத்தப் பட்டது. வலியாலும், புண்ணாலும் கொன்னுடுங்க, கொன்னுடுங்க என்கிற அலறல் கேட்க ஆரம்பித்தது. மூன்றாவது வாரத்தில் ஒவ்வொரு ஆளாய் சுயநினைவினை இழக்க ஆரம்பித்தார்கள். மூன்றாவது வார முடிவில் மூவருக்கும் உயிர் போனது. வேலை முடிந்தது. நடுவில் ஒரே ஒரு நாள் அந்த சிறு முதலாளி வந்து பாதி உயிர் மட்டுமே இருந்த நிலையில், ஆசை தீரும் வரை “தே பசங்களா” என்று ஆரம்பித்து விளாசி தள்ளினார். சம்பவம் இவ்வாறாக முடிந்தது.
அக்தர் பின்னாளில் ஒரு அய்ட்டகாரனாய் மாறி, ஒரு அடல்ட்ரி சிக்கலில் மாட்டி 2000களின் ஆரம்பத்தில் ஹைதராபாத் பக்கம் ஒதுங்கியதாய் கேள்வி.

பெண்களின் மீது கை வைத்தால் நார்த் மெட்ராஸில் சத்தமேப் போடாமல் இது தான் நடக்கும். ஏன் தான் கை வைத்தோம் என்கிற அலறல் சத்தம், கை வைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு ஜாடை மாடையாக கதையாக சொல்லப் படும். ஹாஷ்டாக் ஆர்ப்பரிப்புகள், ஜஸ்டிஸ் ஃபார், மேல கை வைக்கிறான் சார், மாரை தடவறான் சார் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல்கள். ஹாசினியோ, அஸிபாவோ நான் எதையுமே எழுதுவதில்லை.

என்னளவில், தனிப்பட்ட முறையில் காவிகள் இந்த விஷயத்தில் முழுமூச்சாய் இறங்கி குற்றம் சாட்டப்பட்ட அத்தனைப் பேரையும் நீதிமன்றத்திலிருந்தும், ஜெயிலிருந்தும் விடுவிக்க வேண்டும். அவர்கள் வெளியே உலாவ வேண்டும். மற்றவற்றை நார்த் மெட்ராஸ்காரர்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்வோம். சட்டத்தால் தீர்க்க முடியாததை, வெற்று கரும்புச் சக்கைகள் தீர்க்கும்.

உனக்கு நாகரீகமே கிடையாது, நாகரீக சமூகத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்று பேசுபவர்கள் Unfriend செய்து விட்டு கிளம்புங்கள். பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், அப்பாவிகள், சாமான்யர்கள் மீது செலுத்தப்படும் எந்த வன்முறையும் நாகரீகம் கிடையாது எனும் போது, அதற்கான தண்டனையில் மட்டும் நாகரீகம் பார்க்க முடியாது. Period.

வாழவே முடியாதவர்கள் செய்துக் கொள்வது தற்கொலை;
வாழ தகுதியற்றவர்களுக்கு சமூகம் தரும் நன்கொடை ‘சம்பவம்’

நான் ஒரு நார்த் மெட்ராஸ்காரன்.

PS: மரண தண்டனை கூடாது, சட்டத்தினை கையிலெடுக்கக் கூடாது, அரசே ஆனாலும் மரண தண்டனை தருவது மனிதாபிமானமற்ற செயல் என்பது மாதிரியான ‘அறம் செய விரும்பு, ஆறுவது சினம்’ வகுப்பெடுப்பவர்கள் ஒரமாய் போய் விளையாடுங்கள்.
 ==============================================
Shalini

I request all of you to STOP SHARING the Pollachi Horror video.

கலவியல் வக்கர நோய்க்காக சிகிச்சைக்கு வந்த ஒருவர் அழுதுக்கொண்டே சொன்னார்,”அதை பார்த்து எனக்கு ஆசை வருது, நானும் அப்படி பண்ணீடுவேனோனு பயமா இருக்கு”
கலவியல் வக்கரம் பெரும்பாலும் பார்த்து பழகி கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதே ஆபத்து.

ஏற்கனவே அந்த தகவமைப்பு இருக்கும் ஆண்கள் இதையெல்லாம் பார்த்து இன்னும் சீரழிய வாய்ப்புள்ளது. அதனால் இது ஒரு Public Health Precaution: STOP SHARING THE VIDEO



பொள்ளாச்சி சம்பவத்திற்கு அப்புறம் மனநல மருத்துவர் ஷாலினி இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

மிகச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...ஆனால் அது போலவே கீழே Narain  பதிந்த பதிவை அப்படியே ஒரு குறும்படமாக எடுத்து வெளியிட்டால் அதை பார்ப்பவர்கள் தப்பு செய்தால் இப்படி ஒரு தண்டனை கிடைக்குமே என்று உணர்வார்களே அப்படி உணர ஆரம்பித்தாலே பலாத்காரம் பிளாக்மெயில் போன்றவைகள் குறைய வாய்ப்ப்பு இருக்குமே # என்ன நான் சொல்வது சரிதானா என்று சற்றி யோசித்து பாருங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


நன்றி : Shalini & Narain

6 comments:

  1. எந்தக் குற்றம் செய்தாலும் தப்பிக்க முடியும் என்கிற நிலை இருந்தால் குற்றங்கள் எப்படிக் குறையும்? தண்டனையின் தீவிரம்தான் குற்றங்கள் குறைய உதவும். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்ஜி நீங்கள் சொல்வது மிக சரி அதுமட்டுமல்ல கொடுக்கும் தண்டனைகள் வருங்காலத்தில் யாரும் அந்த தப்பை பண்ணாதிருக்கும் அளவிற்கு கொடுக்க வேண்டும் அப்போதுதான் தவறுகள் குறைய வாய்ப்புண்டு

      Delete
  2. எப்படியெல்லாம் மனம்வெதும்புகிறது

    ReplyDelete
  3. நம்மூரில் சட்டம் வலுவாக இல்லை என்பதே இப்படியானக் குற்றங்களுக்குக் காரணம். அரபு நாடுகளைப் போல இம்மாதிரியான குற்றங்களுக்குத் தண்டனை இருந்தால்...அங்கு போல இங்கும் சட்டம் வலுவாக இருந்தால் இது போன்ற குற்றங்கள் நடக்குமா?

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  4. Idk, what kind of psychiatrist Shalini is. If her patient is afraid that he will tempted by watching such a video, he is ALREADY SICK. Normal people can not watch it or will not watch it! They will not get tempted to watch any such animal behavior. Shalini only sees sick people and so, she does not seem to understand normal people!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.