இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடாத கட்சிகளுக்கு உதவுவதற்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது..
2.சமுக வலைத்தளங்களில் அழகான புகைப்படங்கள் போட பெண்களுக்கு உதவியாக ஊர் தோறும் அரசாங்க செலவில் போட்டோ ஸ்டுடியோ வைக்கப்படும்.....
3. வேலைக்கு போகும் பெண்களின் வீட்டு வாசலை தினமும் பெருக்கி தண்ணி தெளித்து கோலம் பட எங்கள் அரசு வசதிகள் செய்து தரும்.
4, பள்ளிக்கு செல்லும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி போடப்படும்
5, கார் இல்லாத வசதி குறைந்தவர்களுக்கு இலவச கார் கொடுக்கப்படும்
6..பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது ஆண் தங்களின் சமுக இணைய தளங்களின் ஐடியையும் பாஸ்வோர்ட்டையும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்..
7. காதலர் பூங்கா அமைக்கப்படும் அதில் கட்டில் வசதியோட பல மறைவிடங்கள் இருக்கும் உள்ளே செல்போன் மற்றும் கேமிரா அனுமதிகிடையாது காதலர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு நண்பர்களுக்கு அனுமதி இல்லை இதனால் பொள்ளாச்சி சம்பவம் போல நடக்க வாய்ய்பில்லை இதனை பெண்கள் நலம் கருதி செய்யப்படும்
8. இருவரும் வேலைக்கு போகும் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு தோசை மாவு இலவசம். அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பத்தினரின் பிள்ளைகள் பள்ளிக்கு போகும் போது அவர்களுக்கு காலை உணவு ஊட்டி பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கூட்டி வந்து விடுவதை அரசாங்கம் ஏற்று செயல்படுத்தும்
9.ஏழைகளுக்கு சூப்பர் ஸ்டார், தலை, தளபதி படங்களுக்கு மலிவு விலையில் டிக்கெட் வழங்கப்படும்.
10.ஏழை இந்துக்கள் திருப்பதி சென்று வர இலவச பஸ் வசதி செய்து தரப்படும் .
11. சமுக இணைய தளங்களில் சமுக நலப் பதிவுகளை போடும் போராளிகளுக்கு தமிழக அரசின் மிகப் உயரிய விருது வழங்கப்படும்
12. உங்களின் பிறந்த நாளுக்கு பட்டுபுடவை அன்பளிப்பாக வழங்கப்படும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கடைசி 12 வது இடிக்குதே... பட்டுப்புடவை யாருக்கு ?
ReplyDeleteகடைசி 12 எல்லோரும்புடவை கட்டிக்கொள்ள
ReplyDeleteஅந்த 8வது புள்ளிக்காகவே நங்கள் இந்தியாவில் வந்து குடியேறனும் போல இருக்கே
ReplyDelete