நான் இப்போ மாறிட்டேனே
முன்பு நான், அதாவது கடந்த 10 வருடமாக ரொம்ப இனிப்பான மனிதனாக இருந்து வந்தேன் ஆனால் கடந்த 6 மாதங்களாக குறைந்த இனிப்புள்ள மனிதனாக மாறி இருக்கிறேன்.. அதுதாங்க முன்பு டையபடிக் பேஷண்டாக இருந்தேன் ஆனால் இப்போது ப்ரீ டையபடிக் நிலைக்கு வந்து விட்டேன். கடந்து மூன்று மாதங்களுக்கு முன்பு சுகர் டெஸ்ட் பண்ணி பார்த்த போது சுகர் A1 6.4 ஆக குறைந்தது.. அதனால் டாக்டரிடம் சொல்லி மாத்திரிகளை பாதியாக குறைத்தேன்.. அதன் பின் கடந்த வாரம் செக்கப் பண்ணிய போது 6.2வீற்கு குறைந்துவிட்டது.

எந்த வித டயட்டும் கிடையாது முக்கியமாக பேலியோ போன்ற டயட் எல்லாம் கிடையாது. பிடித்த உணவை ரசித்து கொஞ்சமாக சாப்பிடுகிறேன்.
காலையில் 7.30 மணிக்கு 3 இட்லி அல்லது 2 தோசை அல்லது ஒரு தோசை 1 ஆம்லேட்
8.30 க்கு வேலைக்கு காரில் போகும் போது சிறிய அளவு மாசாலக் கடலை(கேரளாவில் இருந்து வருவது )
அதன் பின் மதியம் 2 மணியளவில் தமிழனின் தேசிய உணவான சாதம் & கறி (சின்ன லஞ்ச் பாக்ஸ்)
மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் சில குக்கீஸ்
இரவு 8 .30 மணியளவில் சாதம் கறி குழம்பு சாப்பாடு அல்லது 2 சாப்பாத்தி அல்லது தோசை இட்லி
சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு ஸ்வீட் லட்டு அல்லது மைசூர் பாகு அல்லது ஏதாவது ஒரு இந்தியன் ஸ்வீட் இதுதானுங்க என் டயட்
தண்ணி குடிப்பது என்பது மாத்திரை சாப்பிடும் சமயத்தில் மட்டுமே மற்ற சமயங்களில் காப்பியும் கையுமாகத்தான் இருப்பேன்
முக்கியமாக வேலை இடத்தில் தினசரி வாக் செய்வது 5 ல் இருந்து 6 மைல் இதுதானுங்க என் சுகரை குறைத்து இருப்பதாக நானும் என் டாக்டரும் கருதுகிறோம்
இப்ப சொல்லுங்க நான் மாறிவிட்டேனா இல்லையா
மாற்றம் இதில் மட்டுமில்லை நான் அடிக்கும் சரக்கிலும் வந்துவிட்டது
முன்பு எல்லாம் பகார்டி ரம்மில் கோக் ஊற்றி லெமன் சிலைஸ் மற்றும் ஜஸ் கட்டி போட்டு குடிப்பது வழக்கம் அதுதான் எனக்கு பிடித்த டிரிங்காக இருந்தது... ஆனால் இப்போ வோட்கா எனக்கு பிடித்த ட்ரீங்காக மாறிவிட்டது. இப்போது வோட்காவில் டானிக் வாட்டர் சிறிது லெமன் ஜூஸ் ஒன் பிஞ் சால்ட் ப்ரெஸ் புதினா இலை ஜஸ் கட்டி போட்டு கலந்து குடிப்பது வழக்கமாகி விட்டது

வோட்கா டானிக் காக்டெயில் செய்முறை
60 ml வோட்கா
150 ml டானிக் வாட்டர்
சில லெமன் துண்டுகள்
ஐஸ் கட்டி தேவையான அளவு
ஒன்றிரெண்டு புதினா இலை
இதை எல்லாம் பெரிய க்ளாஸில் போட்டு மேலும் சில துளி லெமன் ஜூஸ்வுட்டு அதை மிக்ஸ் செய்து குடிக்கவும்.. வாவ் என்று உங்களால் சொல்லாமல் இருக்க முடியாது
அன்புடன்
மதுரைத்தமிழன்
அடடே இனிமேல் நானும் குடிக்க மாட்டேன் அப்படியே சாப்பிடுவேன் வோட்கா டானிக்கை....
ReplyDeleteஇப்போது கூறப் போவதை, பலமுறை எனது வலைத்தளத்தில் விரிவாக எழுத வேண்டும் என்று நினைப்பேன்... ஆனால் முடிவதில்லை... எழுதி வைத்த blogger draft-லிருந்து சில வரிகள்...
ReplyDeleteசர்க்கரை நோய் - முதலில் அது நோய் அல்ல... சர்க்கரை குறைபாடு...!
காலை மாலை இருவேளையும் நடைப்பயிற்சி... மருத்துவர் கூற்றுப்படி மூன்று வேலையும் சாப்பிடுவது, மருந்து எடுத்துக் கொள்வது, சரியான உழைப்பு, உறக்கம், etc,etc.etc.....
ஆனாலும் இத்தனையும் செய்து, நாம் நினைத்தபடி "சர்க்கரை அளவு" இல்லை... ஏன்...?
காரணம் நம் மனம்... அதை இலகுவாக வைத்துக் கொண்டால் போதும்...
எதிர்ப்பார்ப்பு, வருத்தம், துயரம், சோகம், அவமானம், தோல்வி, கோபம் என பலவற்றையும் மனதிலிருந்து ஒதுக்குங்கள்... அனைத்தும் சுபம்...
அவ்வாறு முடியவில்லை என்றால், உடல் + மனம் சார்ந்து பல துன்பங்கள் பெருகும்... ஏனென்றால், சர்க்கரை குறைபாடு நோய்களின் தாய்...!
டிடி நான் சொல்ல நினைச்ச வந்ததை சொல்லிட்டீங்க குறிப்பா இது நோயல்ல என்பதை...
Deleteமனம் அமைதி! சந்தோஷம்..
கீதா
கடைசி வரி யெஸ் அதே...இது நோயல்ல ஆனால் குறைபாடு இருந்தால் பல னோய்களுக்கு வழி வகுக்கும்...
Deleteஅப்புறம் இன்னொன்னு பலரும் இதை நினைத்துப் பயப்படுகிறார்கள். பயம் தேவையே இல்லை. நம் உடலை நாம் சரியாக அப்செர்வ் செய்து வந்தாலே தெரிஞ்சுடும்..
மதுரை உங்கள் பதிவு பார்த்து சந்தோஷம். உங்கள் சர்க்கரை அளவு குறைந்தது என்று!
சரி சரி அதுக்காக ஸ்வீட் எடு கொண்டாடு என்று கொண்டாடிடாதீங்க!! ஹா ஹா ஹா
கீதா
தனபாலன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி நான் எதற்கும் கவலைப்படுவதில்லை வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் அதற்காக கவலைப்பட்டு உடம்பை கெடுத்து கொள்வதில்லை எல்லாவற்றையும் காலையிலும் இரவிலும் கடவுள் மீது தூக்கி போட்டுவிடுவேன் நாம் சுமப்பதற்கு பதில் அவர் சுமக்கட்டுமே என்று
Delete
Deleteகீதா சேச்சி தினமும் இரவு சாப்பாடு ஒரு ஸ்வீட்டோடதான் முடியும் அதனால் தனியாக் இன்னொரு ஸ்வீட் எடுப்பதில்லை
5ல் இருந்து 6 மைல் வாக் - சரி, சரி நீங்கள் வேலைக்கு போவதே நடப்பதற்கு தான் என்று சொல்லுங்கள்
ReplyDeleteநடப்பதே எனது வேலையாகி போனது அதனால்தான் இப்படி
Deleteநம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் அதிக சக்தியை எரித்தல் என்று இருந்தாலே பாதி தீர்வு...
ReplyDeleteசூப்பர் மதுரை...என் சுகர் ஆவெரேஜ் எப்பவும் 5.5- 6க்குள் தான். அதுவும் சர்ஜரியின் போது 5 தான் இருந்தது. நீ ஸ்வீட்டா பார்த்தா அப்படித் தெரியலியே என்று கேட்டனர். ஆமாம் நான் ஸ்வீட்டேதான் அதுல என்ன சந்தேகம் நு கேட்டேன் ஹா ஹா ஹா ஹா...
இப்பவரை அதேதான். கருஞ்சீரகம் தண்ணீர் குடிக்கிறேன். க்ரீன் டீ குடிக்கிறேன். வாக்கிங்க 5 கிமீ + அப்புறம் கடைக்குச் செல்வது வீட்டில் வேலை செய்வது என்று. எல்லாமே ந்டைதான் இங்கு. இல்லைனா. பேருந்துப் பயணம் தான்..அதுக்கு பஸ்டாப்புக்கு நடக்கணுமே..அப்புறம் டயட்..அதுக்காக ஓவரா கட்டுப்பாடு என்றில்லை. பழங்களைத் தவிர்ப்பது இல்லை.
கீதா
நடப்புது நல்லது அதற்காக அப்படியே நடந்து அமெரிக்காவீற்கு வர முயற்சிக்க வேண்டாம் பறந்து வந்து இங்கு நடங்கள்
Deleteநல்ல விஷயம். தொடர்ந்து நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteநானாக இதற்கு முயற்சி செய்யவில்லை அதுபாட்டுக்கு தன்னால் நடக்குது அவ்வளவுதான் வெங்க்ட்ஜி
Deleteதலைப்புப் பார்த்ததும் ஆஆஆஆஆஆ ட்றுத் திருந்திட்டாராமே இனி மோடி அங்கிளைத் திட்டப்போவதில்லையாக்கும் சூரியன் நாளைக்கு மேற்கில் எல்லோ உதிக்கப் போகுது என ஓடி வந்தேன்... சே...சே... ஏப்ரல் ஃபூல்:))
ReplyDeleteமோடியை நான் மறந்து ஒரு பதிவு போட்டாலும் மோடியைப் பற்றி எழுதுங்கோ என்று மறைமுகமாக தூண்டி விடுவது போல இருக்கே... அதாவது மதுரைத்தமிழா எங்களால் இப்படி மோடியை திட்ட முடியாது நீங்களாவது இப்படி மோடியை திட்டி எழுதினால் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது சரி சரி புரிஞ்சிடுச்சு
Deleteமதுபானம் அருந்துவதைக்குறித்து ஒருபோதும் எழுதாதீர்கள். எல்லாரும் உங்களைப்போன்ற தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். உங்களுடைய உடல் நிலையைக் குறித்தும் மன உறுதியைக்குறித்தும் உங்களுக்கு ஒரு அசாத்திய கட்டுப்பாடு இருக்கலாம். பலர் அவ்வாறு இல்லை. எனவே மது அருந்துதலைக்குறித்து எதுவும் எழுதாமல் இருப்பதே நலம். வேறு ஒரு வழக்கத்தைக்குறித்து பைபிள் இவ்வாறு சொல்லுகிறது (அது மது அருந்துதலுக்கும் பொருந்தும்):
ReplyDelete புசிப்பதினால் (குடிப்பதினால்) நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் (குடியாதிருப்பதினால்) நமக்கு ஒரு குறைவுமில்லை.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை .......(மது அருந்த) ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி .......... புசிப்பதற்கு (மது அருந்த) துணிவுகொள்ளுமல்லவா?
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? ..............
இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
உங்கள் பதிவுகளின் ரசிகன் என்கின்ற உரிமையில் இதை எழுதுகிறேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன்.