Sunday, March 17, 2019

@avargal unmaigal
சட்டத்தை நம் கையில் எடுத்து குற்றவாளியை தண்டிப்பது தவறா?


பொள்ளாச்சி நிகழ்வு பற்றி இப்படி ஒரு பதிவு எழுதி அதன் இறுதியில் இப்படி ஒரு பாரா எழுதி இருந்தேன் .

" பொள்ளாச்சியும் பொல்லாத ஆட்சியும் "மேற்படி பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வு போல என் பெண்ணிற்கு நிகழந்தால் மனம் பதைபதைத்து பதறிக் கொண்டு இருக்கமாட்டேன் பதறினால் காரியம் சிதறிப் போகும் அதனால் பெண்ணிற்கு தீங்கு இழைத்தவனை அது நடந்தது இந்தியாவாக இருந்தால் போலீஸுக்கு போகாமல் முடிந்தால் தனியாகவோ அல்லது  நம்ம்பிக்கைகுரிய நண்பர்களுடன் சேர்ந்து அந்த மிருகத்தை பிடித்து சித்திரவாதை பண்ணி சாக அடிப்பேன் சாக அடிக்க  முடியாவிட்டால் ஆசிட்டையாவது அவன் உடம்பு முழுக்க வீசுவேன் அது நிச்சயம்

அதை படித்துவிட்டு சட்டத்தை  நம் கையில் எடுப்பது தவ்று என்று ராஜ்ஸ்ரீ என்பவர் கருத்து இட்டார் அப்போது சட்டத்தை நம் கையில் எடுத்து குற்றவாளியை தண்டிப்பது தவறா? என்று என் மனம் கேட்க துவங்கியது

யோசித்து பார்க்கும் போது அது தவறுதான் என்று தோன்றினாலும் இப்போது இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது சட்டமே அது அதன் கையில் இல்லாமல் கயவர்களின் கையில் போய்விட்டதாகவே தோன்றுகிறது... இந்தியாவின் நீதி மன்றங்களில் அது  சூப்ரீம் கோர்ட்டாக இருந்தாலும் அங்கு கிடைக்கும் தீர்ப்பு ஆட்களுக்கு ஏற்ப மாறித்தான்  வருகிறது. இந்திய கோர்ட்டுக்களில் சாதாரணமக்களுக்கு ஒரு விதமாகவும்  வசதியானவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் ஆளும் மற்றும் எதிர் கட்சி தலைவர்களுக்கு ஒரு விதமாகவும்தான் இருக்கிறது


சட்டம் என்பது எல்லா குடிமக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் நாம் சட்டைத்தை நம் கையில் எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை தாராளமாக தரலாம் என்பதே என் கருத்து

டிஸ்கி : சட்டத்தை மோடி தன் வசதிகளுக்காக கையில் எடுத்து கொள்ளும் போது மக்களும் தங்களுக்காக தங்களின் பாதுகாப்பிற்காக எடுத்து கொள்வதில் எந்த தவறுமே இல்லை இல்லை இல்லை. டாட்



அன்புடன்
மதுரைத்தமிழன்


படிக்காதவர்கள் படிக்க :

4 comments:

  1. "சட்டத்தை நம் கையில் எடுப்பது நடைமுறையில் சரியாக இருக்காது" என்றே சொல்லியிருந்தேன். சட்டத்தை கையில் எடுத்து விட்டு சாதாரண மக்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டே அப்படிச்சொன்னேன்.

    உங்களுக்கு ஒரேயொரு பிள்ளை, நீங்கள் அப்படி செய்துவிட்டு சிக்கினால் உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகள் இருக்காது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோர் சிக்கினால் என்னாவது? அதுவும் இந்தியாவில் இன்னும் குடும்பத்தலைவனின் சம்பாத்தியத்தை நம்பியே அநேகமான குடும்பங்கள் இருக்கின்றன.

    மற்றும்படி உங்கள் கோபத்தையும் அக்கறையையும் நான் குறைவாக மதிப்பிடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முந்தைய பதிவில் கூறியதை நான் தவறு என்று சொல்லவில்லை நீங்கள் சொன்னது சரிதான் ஆனால் அதன் பின் யோசித்துபார்த போது சட்டம் உரியவர்கள் கையில் இல்லாத போது அதை நம்பி இருப்பது தவறு அதனால் நாம் கையில் எடுத்து கொள்ளவது தவறு இல்லை என்றுதான் சொல்ல வருகிறேன்.. எனக்கு ஒரு குழந்தை இருந்தாலும் பல குழந்தைகள் இருந்தாலும் அவர்களிடம் இண்டிபென்ட்டெண்டாக வாழவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பேன் இப்போது எனக்கு இருக்கும் ஒரு குழந்தையிடமும் அதைத்தான் சொல்லி வளர்க்கிறேன்.. என் உயிர் எப்பவும் போகலாம் அம்மாவின் உயிர் எப்பவும் போகலாம் உறவினர்கள் நண்பர்கள் உதவிக்கு வராமல் போகலாம் அப்படிப்பட்ட சமயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று யோசித்து செயல்படு என்று சொல்லி அதற்கு தகுந்த வழிமுறைகளையும் அவள் சிறுவயதில் இருந்தே வளர்க்கிறேன், காரணம்9/11 நிகழ்விற்கு அப்புறம் எதுவும் நடக்கலாம் எப்பவும் நடக்கலாம் எல்லாம் மாறலாம் என அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்

      Delete
  2. சட்டத்தை ஏன் கையில் எடுக்கக் கூடாதென்பது, சட்டம் நம் மீது பாயும் என்பதால், உங்க நன்மைக்காக நீங்க சட்டத்தைக் கையில் எடுக்காமல் இருக்கணூம். இல்லை, சட்டத்தின் மீது எனக்கும் நம்பிக்கை இல்லைனு ஏதாவது செஞ்ச்சிங்கன்னா, உங்களப் பிடிச்சு உள்ள போடுவாங்க. உங்கள சார்ந்துள்ளவங்க பாதிக்க்ப்படுவாங்க. சட்டை கையில் எடுக்காததுக் காரணம் நம் சுயநலமே. வேறேதும் இல்லை.

    உங்க தராசுப்படி பொள்ளாச்சிப் பொறூக்கிகளூக்கு தண்டனை கிடைக்கவில்லை. ஆனால் திருநாவுக்கரசு அம்மா லதாவுக்கு, மகன் படத்தைப் போட்டு மகன் கீழ்த்தரமான ஆள்ணு உலகமெல்லாம் பரப்பியது மிகப் பெரிய அவமானம், தண்டனை என்பார்கள். நம்ம ஊர் ரொம்அ முன்னேறீடுச்சுங்க. நீங்க அமெரிக்காவில் வாழ்றீங்க. உங்களால் நம்ம ஊரியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள அனுமானிக்க முடியவில்லை. அதனால் உங்களூக்கு இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு சொல்ல இயலவில்லை.

    உங்க பொண்ணூ ஸ்ரேஞ்சர் காரில் எல்லாம் ஏற மாட்டாள்ங்க. அவளூக்குத் தெரியும். அப்படியே எவனாவது அவள, ஆபாசப்படமெடுத்து மிரட்டினால், அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுவாள்> ஏனென்றால் அம்மா அப்பா அவள காப்பாத்துவாங்க, மன்னிச்சுடுவாங்கனு அவளூக்குத் தெரியும். இந்தியாவில் உள்ள இளம் பெண்களூக்கு இதெல்லாம் தெரியலை. அதுதான் பிரச்சினை.

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    பாராட்டுகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.