Saturday, March 23, 2019

IPL  வாந்தாச்சு பொள்ளாச்சி மறந்தாச்சு pollachi IPL

பொள்ளாச்சி பலாத்காரம்  நல்ல மனசுகள் பதறி போச்சு
செய்வதறியாமல் திகைச்சு போச்சு

முகநூல் போராளிகள் பொங்கி பொங்கல் வைச்சாச்சு
IPL லும் வாந்தாச்சு விளையாட்டு ஸ்டேடஸ் போட போயாச்சு


சமுக தலைவர்களும் நீதி கேட்டு சில நாட்கள் போராடியாச்சு
தேர்தலும் வந்தாச்சு பிரச்சனை மறந்து போச்சு
வோட்டு கேட்க போயாச்சு

கருவேலம் மரங்களை அழிக்க அரசு சட்டம் போட்டாச்சு
ஆனால் இந்த கயவர்களை மட்டும் பாதுகாக்க திட்டம் போட்டாச்சு

கயவர்களுக்கும் குளிர்விட்டு போயாச்சு அதனால மீண்டும்
அடுத்த ரவுண்டு விளையாட்டுக்கு தயாராச்சு


சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழகம் தான் முதலிடம்.
#எடப்பாடி

கயவர்களின் ஆட்சியில் கயவர்களை காப்பாற்றுவதுதானே  சட்டம். அதைத்தான் இந்த எடப்பாடி சொல்லுகிறார் போல




அன்புடன்
மதுரைத்தமிழன்
23 Mar 2019

13 comments:

  1. மக்களுக்கு மறதி ஜாஸ்தி நண்பரே ..

    ReplyDelete
    Replies
    1. மறதின்னு சொல்லுவதற்கு பதில் எதிலும் அக்கறையின்மை என்றும் சொல்லாம் பொறுப்புயின்மை என்றும் சொல்லாம்

      Delete
  2. நம்ம மக்களுக்கு கிரிக்கெட்ன்னா, சாப்பாடு, தண்ணி எல்லாம் மறந்து போகும்போது பொள்ளாச்சி சம்பவமா மறக்காது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வீட்டு பெண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் இப்படி மறக்க முடியுமா?

      Delete
  3. எடப்பாடி சரியாத்தான் சொல்லியிருக்காரு!!!

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு தெரிந்த சட்டம் ஒழுங்கை பற்றி சொல்லி இருக்கிறார்

      Delete
  4. அடுத்த ரவுண்டு விளையாட்டுக்கு அவங்க தயாரா? அடப் பாவிகளா.

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்காத வரை அவர்கள் எப்போதும் விளையாட்டுக்கு தயார்தான்

      Delete
    2. ஆமாம் நீங்க வலைத்தளத்திற்கு புதுசான ஆளா அல்லது பழைய ஆள் புதிய வலைத்தள பெயரில் வருகிறீர்களா? எப்படியிருந்தாலும் உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  5. ஒரு வேளை இது கவிதையா இருக்குமோ?!??!இவருக்கு அலர்ஜி ஆச்சே😏,ஆனா உண்மை ரொம்ப கசக்குது சகா 😣

    ReplyDelete
    Replies
    1. கழுதைக்கும் சங்கீதம் வராது அது போல இந்த மதுரைத்தமிழனுக்கும் கவிதை வராது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.