Tuesday, April 2, 2019

படித்ததில் பிடித்தது மட்டுமல்ல பயனுள்ளதுமான பதிவு




சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம்.

உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.

எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.

01. மந்தமாக வெளியாகுதல்.

உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.

02. இரத்தம் கசிதல்.

சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

03. நுரை போன்று வெளிபடுதல்.

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

04. பழுப்பு நிறத்தில்.

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?

இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?

திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?

மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.

வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.

DR.R.SENTHIL MS FRCS (ENG) MCH (UROLOGY)

பேஸ்புக்கில் ஷேர் செய்தவர் நண்பர் ஜோதிஜி


அதை  மறு ஷேர் செய்வது

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. அட்டகாசமான பதிவு மதுரை சகோ.

    மிக மிகப் பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு.

    எல்லோருக்குமே என்றாலும் ஆண்க்களுக்கு வரும் ப்ராஸ்டேட் பிரச்ச்னினை ய்ரித்ரா அடைப்புப் பிரச்சினை டயலெக்டேஷன் என்று வருவது போல் பெண்களுக்கும் உரித்ரா அடைப்புப் பிரச்சினியயும் வரும்...நிறைய சொல்லலாம்...

    தண்ணீர் தேவையான அளவு குடிக்க வேண்டும்...

    சூப்பர் பதிவு!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மீதான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉ தேம்ஸ் காரங்களுக்குக் காதில் விழுதானு தெரியலையே!!

      கீதா

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர் என்றால் ஊசிப் போன வடைதான் கிடைக்கும்

      Delete
  2. வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களும் யூரினரி இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்ளனும். குறிப்பாகப் பொது இடங்களில் வெஸ்டர்ன் டாய்லெட்.

    இது ஒரு அனுபவரக் கட்டுரையாக ஒருவர் எழுதியிருந்தார் இறந்து போன ஒரு பெண்மணியின் உறவினர் ஒருவர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தவர் இங்கு சென்னையில் ஒரு தியேட்டரில் வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகித்ததில் தொற்று (மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு நோயாளி அளித்த பதில்களில் இது முக்கியமாகக் கருத்தப்பட்டது) வந்த தொற்று கிட்னியைப் பாதித்திருக்கிறது. முதல் கட்ட மருந்தில் சரியாகவில்லை. பின்னர் கிட்னி பாதிக்கப்பட்டு இங்கு லீவில் வந்தவர் ஒரே மாதத்தில் இறந்து போனார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கு கூட பொது கழிப்பறைக்கு செல்லும் போது நிறைய பேப்பர எடுத்து துடைத்துவிட்டுதான் அதை உபயோகிப்போம் இந்தியாவீர்கு வரும் போது இங்கு இருந்தே பேப்பர் டவலை எடுத்து வருவோம் இப்படிபட்ட டாய்லெட்டுகளை உபயோகிக்கும் போது அதை பயன்படுத்துவோம் இதை கூட அவர் செய்யவில்லை என்பது ஆச்சிரியம் அளிக்கிறது

      Delete
  3. பதிவு அருமையானது மட்டுமல்ல, இன்றைய அவ‌சியத்தேவையும்கூட!

    பொதுவாய் சிறுநீரகப்பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும்போது அவ்வளவாக வெளியே தெரியாது என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மை தான்! ஆனால் பல்லாண்டுகளாக தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோய் இருப்பவர்களும் கவனமாக இருப்பது முக்கியம். அது நமக்கு அமையும் மருத்துவர்களின் அக்கறையான மனப்பான்மையைப்பொறுத்தும் இருக்கிற‌து. ஆறு மாதத்துக்கு ஒரு தடவையாவது சிறுநீர் பரிசோத‌னை செய்து கொள்வது அவசியம். சிறுநீரில் புரதம் வெளியேறுவது அதில் தெரியும். அதைத்தொடர்ந்து 24 மணி நேர சிறுநீர்ப்பரிசோதனை செய்தால் எந்த அளவிற்கு புரதம் வெளியேறுகிறது என்று தெரியும். இது ஆரம்பகால சிறுநீரக நோயின் வெளிப்பாடு. இது தொடரும்போது கிரியாட்டினைன், யூரியா மெதுவாக அதிகரிக்கத்தொடங்கும். மேலும் புரதம் வெளியேறுவது அதிகமாகாமலும் கிரியாட்டினைன், யூரியா அதிகமாகாமலும் பாதுகாத்துக்கொள்ள உணவுக்கட்டுப்பாடு மட்டும் தான் ஒரே வழி. உண்வுக்கட்டுப்பாடு இருந்தால் பல வருடங்கள் சிறுநீரகங்களை இதே நிலையில் வைத்திருக்க முடியும். கிரியாட்டினைன் அதிகமானால் அதைக்குறைக்க மருந்துகள் கிடையாது. மிக அதிகமாகும்போது டயாலிஸ் செய்வது மட்டும் தான் ஒரே வழி!

    ReplyDelete
    Replies
    1. உங்களது தெளிவான கருத்திற்கு மிகவும் நன்றி மனோ சாமிநாதன்

      Delete
  4. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு .

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை ஷேர் செய்த ஜோதிஜிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

      Delete
  5. 60 வயதுக்கு அருகே உள்ளவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது சிறுநீரகம் தொடர்பான அக்கறை. இங்கே பலரையும் பார்க்கின்றேன். குடியால் நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் கடந்த தடவை இந்தியா வந்திருந்த போது எனக்கு தெரிந்த பலர் டாயாலிஸ் செய்து கொண்டிருந்தார்கள் அதில் சில பேர் இவ்வுலகைவிட்டு போய்விட்டார்கள்

      Delete
  6. பதிவு பயனுள்ளது ஆனா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
    Replies
    1. பதிவு மற்றவர்களுக்காக படம் மட்டும் உங்களை போல உள்ளவர்களுக்காக

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.