Monday, April 8, 2019

@avargalUnmaigal
இந்திய தேர்தலும் அமெரிக்காவின் நெட்ஃப்லிக்சில் வெளி வந்த காமெடி ஷோவும் Indian Elections | Patriot Act with Hasan Minhaj | Netflix


இந்தியாவில் வரப் போகும் தேர்தல் பற்றி பலரும் பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவில் உள்ள இந்திய குழந்தைகளும்  அவர்களது அமெரிக்க தோழிகளும்அதை பற்றி பேசி கிண்டல் அடித்து கொண்டு இருக்கின்றனர் என்பது வியப்பு அளிப்பதாக எனக்கு உள்ளது. என் வீட்டிற்கு வந்த என் குழந்தையின் தோழிகள் எல்லோரும் ஹை ஸ்கூல் செல்லுபவர்கள் அவர்கள் பேசி சிரித்து கொண்டிருந்த போது இந்திய அரசியலலை பேசுவதை கேட்ட நான் அவர்களை கூப்பிட்டு என்ன பேசுகிறார்கள் என்று கேட்ட போது இந்த வீடியோவை போட்டு காண்பித்தது மட்டுமல்ல மேலும் பல விஷயங்களையும் சொல்லி மகிழ்ந்தார்கள் அவர்கள் கிண்டல் அடித்த வீடியோ பற்றிய பதிவுதான் இது


அமெரிக்க  Hasan Minhaj சிறந்த ஸ்டண்ட்ப் காமெடியன்... இவர் நெட்பிலிக்ஸில் Patriot Act என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த ஷோவில் சில வாரங்களுக்கு முன் இந்திய எலக்ஷன் பற்றிய ஷோ  ஒன்றை நடத்தினர்.. இது மிகவும் ரிஸ்கான ஷோதான் காரணம் நெட்ஃபிக்ஸ் - ஒரு கட்சியை சார்ந்தாக இல்லை.  அதனால் ஷோவை நடுநிலையோடு கம்பி மேல் பேலன்ஸ் செய்யும் மனிதர் போல மிக சர்வ ஜாக்கிரைதையாக இதை செய்ய வேண்டி இருந்தது இல்லையென்றால் அதற்கு எதிர்ப்பு வந்து வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்து இந்த ஷோவை வெற்றி கரமாக நடத்தியது என்றே சொல்லாம், இருந்த போதிலும் மோடியின் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்பிலிக்ஸை புறக்கணிக்க தொடங்க வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்

Hasan Minhaj  தனது காமெடியை தொடங்குவதற்கு முன்பு இது ஒரு ஆபத்தான பணி என்பதை அமெரிக்காவில் வசிக்கும் அங்கிள் ஆண்டிகள் எச்சரிகை செய்வது போல சொல்லிவிட்டு தன்  காமெடியை தொடங்குகிறார்....அந்த அங்கிள் மற்றும் ஆண்டிகள்  உனக்கு என்ன மனநிலை பிறழ்ந்து விட்டதா? நீ என்ன முட்டாளா? லட்சக்கணக்கான இந்திய மக்களை நீ கோபத்துக்கு உள்ளாக்கி பகைத்து கொள்ளப் போகிறாயா எனறு கேட்கிறார்கள்

அவர்கள் அப்படி சொன்ன போதும் தான் எலக்ஷன் பற்றி காமடி செய்யப் போவதாக சொல்லுகிறார் உடனே அவர்கள் பதிலுக்கு   நீ நரேந்திர மோடியைப் பற்றி பேச முடியாது. நீ பிரியங்கா காந்தி பற்றி பேச முடியாது. அவர்கள் நிச்சயம் உன்னைக் கொல்லப் போகிறார்கள். வேண்டுமானால் நீ கிரிக்கெட்டைப் பற்றி பேசு அல்லது  ஸ்னீக்கர்கள் பற்றி பேச என்று சொல்லுகிறார்கள்

ஆனால் அவர் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை தனது காமெடியால் அமெரிக்க பார்வையாளர்களுக்கு அதிலும் இந்திய வம்சா வழியினருக்கு விவரிக்கிறார்

The 33-year-old US-born comedian normally aims at very American subjects, ranging from politics to hip-hop. He got a big boost when he devoted an entire episode of his show Patriot Act with Hasan Minhaj to Saudi Arabia that annoyed the sheikhdom. But he has touched on his ethnic background too, with jokes on the usual community tropes such as over-achieving kids.


This is the first time he has targeted Indian politics. It’s a risky venture, as he admits, and during the show, he does his utmost to appear balanced in terms of not leaning towards one leader or the other. Thus, while his central message is that India is changing, for the worst, he has to bring in the corruption of Congress.

His team reached out to both parties but got no response from the BJP. The always-willing Shashi Tharoor was happy to sit in for the Congress and offer some bromides in his clipped accent, which dilutes the impact of what he wants to say.

The balancing act over, Minhaj seems relieved and reverts to Modi. He compares Modi and Trump, both of whom appeal to their own bases with messages hailing their respective countries – ‘India First’, says one, ‘America First’, says the other – attack the press and so on, though one pulls during handshakes and the other embraces other world leaders (‘one’s a tugger, the other’s a hugger.’)


https://www.youtube.com/watch?v=qqZ_SH9N3Xo


On the latest episode of Patriot Act, Hasan analyzes the current state of politics in India and what it means to him as an Indian-American, with a focus on the country’s upcoming elections. With around 900 million voters, India has the largest and one of the most complex democracies in the world. Hasan discusses how recent conflicts with Pakistan, widespread economic issues under current Prime Minister Narendra Modi, a resurgence of Hindu nationalism, and corruption scandals amongst major political parties in the country will play a role in determining the future, and the identity, of India. Watch Patriot Act with Hasan Minhaj on Netflix: https://www.netflix.com/title/80239931 #Netflix #PatriotAct #HasanMinhaj Subscribe: https://bit.ly/2OHQXpO About Patriot Act with Hasan Minhaj: New episodes, new topics, every Sunday - returning to Netflix on February 10th, 2019. Hasan Minhaj brings an incisive and nuanced perspective to global news, politics, and culture in his unique comedy series. Subscribe to the Patriot Act channel now to stay up to date with episode clips and original content from Hasan and the Patriot Act team.



அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :இந்தியர்களிடம் கொடுக்கப்பட்ட வோட்டுரிமையும் மொபைல் போனும்  குரங்கு கையிலே கொடுக்கப்பட்ட விளையாட்டு பொருள் போலத்தான் இருக்கிறது

2 comments:

  1. கொசுறு ஸூப்பர் உண்மை தமிழரே...

    ReplyDelete
  2. நம்மூர் அரசியல் அமெரிக்க வரைக்கும் சந்தி சிரிக்குதுன்னு சொல்லுங்க...
    கொடுக்கப்பட்ட வோட்டுரிமைன்னு சொல்லக்கூடாது. விற்கப்பட்ட ஓட்டுரிமைன்னு சொல்லணும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.