Saturday, April 6, 2019

தேர்தலுக்கு சில வாரங்களே உள்ளன அதற்கு முன் கொஞ்சம் யோசிப்போம்


திமுக தலைவர்களின் பேச்சு எப்போதும் இந்து மத பழக்கவழக்கங்களுக்கு எதிராக இருந்தாலும் அவர்களின் செயல்கள் இந்து மதத்திற்கு ஆதரவாகவே இருக்கும் ஆனால் அது எப்போதும் வெளிப்படையாக இருக்காது..அதுதான் உண்மை... ஆனால் மோடி அரசின் பேச்சுக்கள் எல்லாம் இந்து மதத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களின் செயல்கள்யாவையும் இந்துமதக்காரர்களை ஒருமைப்படுத்தி ஒற்றுமையாக வாழவிடாமல் மதத்திற்குக்ளேயே சாதி துவேஷத்தை ஊதி பெரிதாக்கி பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் . மோதி அரசு செய்தது எல்லாம் இந்துக்கள் இந்துத்துவா ஆட்கள் என்று இரண்டு பிரிவாக பிரித்தது மட்டுமல்ல இந்தியர்களிடையே மத துவேஷத்தை விதைததுதான்


இது பற்றிய பதிவு ஒன்றை பேஸ்புக்கில் பார்க்க நேரிட்டது அதை இங்கு மறு பதிவு செய்கிறேன்

கொஞ்சம் யோசிப்போம்

திமுக என்றாவது அழகர் அற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை

திமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.

திமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா?
இல்லை.

திமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை தடுத்திருக்கிறதா?
இல்லை.

இந்துக்கள் கொண்டாடும் இது மாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது.

தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.

இந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில் யோசிக்க வேண்டும்.

திமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வு என்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது.

அப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் போகவில்லை?

ஏன் என்றால் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தமிழ்நாட்டில் கலாச்சாரமே கிடையாது. அதை புதிதாய் உருவாக்கி பெரிதாக்கியவர்கள் இந்துத்துவா என்ற மத அடிப்படைவாதிகள் ஆவர்.

ஒருவேளை இந்துக்களாகிய நாம் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று விரும்பினால் அதை திமுகவிடம் நியாயமாக வலியுறுத்தும் போது நிச்சயம் திமுகவே இந்து அறநிலையத் துறை சார்பாக பெரிய விநாயகர் ஊர்வலம் நடத்தி நம்மை விநாயகர் வழிபாடு செய்ய வைக்கும்.

ஆனால் அதே சமயம் மற்றவர்கள் விநாயகர் ஊர்வலம் என்று மதவெறி பரப்பும் செயலுக்கும் அரசு தடைவிதித்து, அரசே முன்னின்று மாபெரும் ஊர்வலம் நடத்தும். அது உங்களுக்கு சம்மதமா?

என்ன வேண்டாமா?

அப்படி ஒரு ஊர்வலம் நடத்த இந்து அடிப்படைவாதிகள் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் ஊர்வலம் நடத்துவதே மதத்தின் பெயரால் மக்களை தூண்டுவதற்கு மட்டும்தான்.

ஒணம் ஒரு இந்து பண்டிகை என்று எடுத்துக் கொண்டால், அதற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி.

இதை விட இந்துக்களுக்கு, இந்துக்களின் உணர்வுகளுக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்.

இந்து மதத்தை ஒருவர் பின்பற்ற நிச்சயம் திமுக தன் முழு ஆதரவையும் கொடுக்கும்.
( கோவில் விழாக்கள், தேரோட்டம்)

ஆனால் இந்து மதத்தினால் மத அடிப்படைவாதத்தை பரப்புவதை திமுக பார்த்துக் கொண்டிருக்காது.
(மத அடிப்படைவாத ஊர்வலங்கள்)

இந்து மத அடிப்படைவாதம் என்றில்லை. எந்த மத அடிப்படைவாதத்தையும் திமுக பார்த்துக் கொண்டிருக்காது.

சரி திமுகவின் பகுத்தறிவு கொள்கை இந்துக்களாகிய நம்மை பயமுறுத்துகிறதா?

பகுத்தறிவு கொள்கை இல்லாமல் முன்னேறவே முடியாது சார்.

ஐரோப்பிய, அமெரிக்க சமூகத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவையும், கர்த்தரையும், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதற்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள்.

அதனால்தான் அவர்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

பெரும்பான்மை மதத்தவரின் மதத்தை முதலில் பகுத்தறிவு கொண்டு ஆராய்வது அந்த அந்த பிராந்திய வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் எந்த கட்சியும் செய்யக் கூடிய ஒன்றுதான்.

ஆனால் அதற்காக பெரும்பான்மை மதத்தவரின் மத உரிமையில் தலையிடாது.

உங்கள் வீட்டு குழந்தை சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் வயிறு அழற்சி வரும் என்பது உங்கள் கொள்கை.

ஆனால் அது சாப்பிடும் போது அதை பிடுங்கி எறிய மாட்டீர்கள்.

காரணம் அது சாக்லேட் சாப்பிட அதற்கான உரிமை எப்போதும் உண்டு.

அதே கணக்குதான் திமுகவின் பகுத்தறிவு கொள்கையும்.

மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இருக்க வேண்டும் என்பது திமுகவின் கொள்கை.

ஆனால் மக்களுக்கு அவரவர் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, அந்த உரிமையை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதையும் திமுக உணர்ந்தே இத்தனை வருடங்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறது.

ஆகவே ஒபிசி இளைஞர்களே கொஞ்சம் யோசியுங்கள்.

நம் பெருமைமிகுந்த இந்து மதத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை.

அப்படி வருவதாக நம்மை மூளைச்சலவை செய்பவர்கள் நம் ஒட்டை வாங்கிக் கொண்டு தமிழகத்தில் தமிழை அழித்து இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள்.

திமுக என்னும் “சமூக ஒற்றுமை மற்றும் சமூக நீதி மற்றும் மத நல்லிணக்க” பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறிக்காதீர்கள்.

கொஞ்சம் யோசிப்போம்...

எழுதியவர் Vijay Bhaskar Vijay.. நன்றிகள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இன, மதத் துவேசங்கள் இல்லாத
    இந்தியாவைக் கட்டியெழுப்பினாலே
    ஐக்கிய இந்தியாவாக நிமிரலாம்

    ReplyDelete
  2. சிறப்பு. சிந்திக்க வேண்டிய பதிவு தான்...

    ReplyDelete
  3. சிந்திக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.