Thursday, March 1, 2018

@avargalunmaigal
பேஸ்புக் மரபுகள்  தெரியாவதர்கள் தெரிந்து கொள்ள!


 புதிதாக கணக்கு ஆரம்பித்தவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக லைக்கும் கருத்தும் இட வேண்டும். அவர்களே பிரபலங்கள் ஆகிவிட்டால் யாருக்கும் லைக் இடத் தேவையில்லை.

பேஸ்புக் பிரபலங்கள் ஆகிவிட்டால் அவர்களின் நட்பு வட்டங்களில் இருந்து கொண்டு லைக் போடாமல் ஸ்லீப்பர் செல் மாதிரி இருப்பவர்களை பார்த்து மாதத்திற்கு ஒரு மூறை லைக் போடாமல் இருப்பவர்கள் அன் பிரெண்ட் செய்யப்படுவார்கள் என்று வார்னிங்க் பதிவு கண்டிப்பாக போட வேண்டும்


பெண் ஐடிகளில் இருந்து எந்த மொக்கை பதிவுகள் வந்தாலும் லைக் கண்டிப்பாக போட வேண்டும் அதே சமயத்தில் மிக நல்ல பதிவுகளை போடும் ஆண்களின் பதிவுகளை படிக்க மட்டும் செய்ய வேண்டும் லைக் போட்டுவிடக் கூடாது .ஆனால் அப்படி ஆண்பதிவர் எழுதிய பதிவை பெண் பதிவர்கள் பபி என்று மறுபதிவு செய்தால் பாராட்டி  லைக் மழை பொழிய வேண்டும் என்பதும் ஒரு மரபு

பேஸ்புக் பிரபலம் ஆகிவிட்டால் அவர்களை சமுதாயத்தை காக்க வந்த தலைவர்களாகவே கருத வேண்டும்.

பெண் ஐடி வைத்திருக்கும் பிரபலம் காலையில இருந்து ஒரே தலைவலி என்று ஸ்டேடஸ் போட்டால் டேக் கேர் என்றும் கெட் வெல் சூன் என்றும் உங்கள் ஆரோக்கியத்தை முதலில் கவனித்து கொள்ளவும் என்றும்  ஆயுர் வேத அலோபதி யுனானி போன்ற சிகிச்சைகளுக்கு பரிந்துரைகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும். இப்படிபட்ட கருத்துக்கள் குறைந்தது 500 க்கும் மேல் வரும் வரை விடாமல் கருத்து பதிவிட வேண்டும்


அதே நேரத்தில் டைபாய்ட் நோயால் பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுட்டு இருக்கேன் என்று ஆண் ஐடியில் இருந்து ஸ்டேடஸ் போட்டால் உடனே மவனே நீ இன்னும் சாகமாலா இருக்கே என்றும் அல்லது நாயே சரக்கை கொஞ்சமா அடிடா என்றும் மைச்சி நீ வீட்டுலதானே கிடக்கிற அதனால உன் பைக் சாவி கொடுடா என்றும் கண்டிப்பாக போட வேண்டும் என்பதும் மரபு நல்லா ஞாபகம் வைச்சுக்கோங்க இப்படிபட்ட ஸ்டேடஸை பார்க்கும் போது நாலு பேர் கருத்து சொல்லி இருந்தால் அந்த ஸ்டேடசை கண்டுக்காமல் போயிடனும் அது இல்லாமல் ஐந்தாவதாக கருத்து சொன்னால் பேஸ்புக் சமுகம் உங்களை மதிக்காது


நீங்கள் பாமக ஆதரவு பேஸ்புக் ஆதரவாளர் என்றால் கெட்ட வார்த்தைகளால் சும்மா மானங்கெட்ட தனமாக கருத்து சொல்ல தெரிந்திருக்க வேண்டும்  அப்படி இல்லையென்றால் நீங்கள் பாமக ஆதரவாளர் கிடையாது என்பது இங்குள்ள மரபு


பாஜக ஆதரவு பக்தாள்ஸ் என்றால் மடத்தில் எழுதி அல்லது போட்டோ ஷாப் செய்து தரப்படும் படங்களை ஸ்டேஸாக போட வேண்டும் அதை மற்ற பக்தால்ஸ் ஷேர் செய்யவேண்டும் அப்படி ஷேர் செய்யும் போது காங்கிரஸையும் கலைஞரையும் இஸ்லாமியர்களையும் குறை சொல்லி கருத்துகள் இட வேண்டும்

மோடி எதிர்ப்பாளர் என்றால் மோடி செய்த சாதனைகளை மட்டும் ஸ்டேட்ஸாக போட்டால் மட்டும் போதும் ஹீஹீ


பேஸ்பிக்கிற்கு புதியவர் என்றால் மச்சி 50 ஆயிரத்திற்கு என்ன போன் வாங்கலாம் என்றுகேட்டுதான் ஸ்டேட்ஸ் போட வேண்டும் ஆனால்  50 ஆயிரத்திற்கு என்ன போன் வாங்கலாம் என்றுமட்டும் அட்வைஸ் ஸ்டேட்ஸுக்கள் போடக் கூடாது. அதற்குதானே பிரபலங்கள் இருக்கிறார்கள் இந்த மரபை மீறினால் பிரப்லங்கள் உங்களை அன் பிரெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது




பிரபலம் ஆகிவிட்டால் சமுக சேவையை கைகாசு செலவில்லாமல் செய்ய வேண்டும் என்பது மரபு அதாகப்பட்டது இங்கே இது தேவை இந்த உதவி தேவை என்று மட்டும் பதிவிட வேண்டும். அப்படி பதிவிட்ட பின் அவரின் நட்பு வளையத்தில் இருக்கும் பிரபலமில்லாதவர்கள் இவர்கள் மூலமாக அந்த உதவிகளை செய்து தர வேண்டும். இதற்கு கைமாறாக அவர்கள் உங்களை மிக சிறந்த பேஸ்புக் பதிவர்கள் என்று அறிமுகப்படுத்துவார்கள்

பேஸ்புக்கிற்கு புதியவர்கள் என்றால்  ஒபன் பண்ணிய உடனே கண்ணுலபடுற எல்லா ஸ்டேட்டஸ்க்கும் சகட்டு மேனிக்கு லைக்கு போடனும்.வந்து கொஞ்சகாலம் ஆயிடுசுன்னா படிச்சுட்டு நல்லா இருந்தா மட்டும் லைக் போடனும்.பிரபலம் ஆகிட்டா படிச்சுட்டு நல்லா இருந்தாலும் உள்ளுக்குள் சிரித்துவிட்டு  லைக் கூட  போடாமல் ஆனால் அந்த ஸ்டேடஸை மட்டும் காப்பி பண்ணி வைத்து சில நாட்கள் கழித்து வாட்ஸப்பில் படித்தது என்று போடுவதும் பேஸ்புக் மரபுதான் அதனால் பிரபலங்கள் உங்கள் ஸ்டேடஸை திருடி போடுவதற்கு பொங்கல் எல்லாம் வைக்க கூடாது


அதிக அளவு பாலோவர்களை கொண்டிருப்பவர்கள் மட்டும் தங்களை  செலிபிரட்டிகளாக நினைத்து கொள்ளலாம்





அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. எல்லாம் தெரிந்து கொண்டேன் நண்பரே

    ReplyDelete
  2. முகநூலில் ஆழமாக மூழ்கி எடுத்த முத்துகள்...ஆகா....

    ReplyDelete
  3. ஹாஹாஹா :) இதுக்குதான் அங்கியே இருக்கக்கூடாது இந்தப்பக்கமும் எட்டி பார்க்கணும் :)

    அப்புறம் மீ அங்கிருந்து வெளியேறி ஒரு வருஷமாச்சே :) மீ வெற்ற்ரி ஆப்பி :))

    ReplyDelete
  4. ஸ்ஸ்ஸ்ஸ் :) நீங்க தலைவலின்னு சொன்னாலும் நாங்க டேக் கேர்னு சொல்வோம் :) இதுக்கெல்லாம் கோச்சிக்கப்படாது :)

    ReplyDelete
  5. சிரிப்பாக இருந்தாலும் சில இல்லை, இல்லை, பல உண்மைகள் இருக்கின்றன இதில்!

    ReplyDelete
  6. நிறைய பாலோவேர்ஸ் இருந்தால் கட்சி ஆரம்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  7. பாட்டி இறந்து விட்டாள் என்னும் ஸ்டேடஸ் பார்த்தாலும் லைக் போடவேண்டும் அது சரி பிரபலத்துக்கு என்ன அடையாளம்

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...அதான் மதுரை நான் ஃபேஸ்புக்கில் இல்லையே யே யே யே!!!
    கடைசில பாராவில பச்சை எழுத்தில சொல்லிருக்கீங்க பாருங்க அது 100 % உண்மை!!! ஹையோ அத ஏன் கேக்கறீங்க நம்ம பதிவுகள் கூட அப்படி வருது மதுரை....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.