Thursday, March 22, 2018

@avargal unmaigal
விகடன் குழுமம் ஃப்ராடு தனங்களில் இறங்குகிறதா?


ஆனந்த விகடன் என்று ஒரு வாரநாளிதழ் இருந்தது ஒரு காலத்தில் அதைபடிப்பது என்றாலே ஆனந்தமாக இருக்கும் ஆனால் இன்று அப்படி இல்லை... காரணம் அது ஆரம்பித்தவர்களிடம் இருந்து கைவிட்டு போய்விட்டது என்று ப்லரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனந்தவிகடனின் தரம் குறைந்துவிட்டதால் அதை விற்றுவிட்டார்களா அல்லது அதை வாங்கியவர்களால் அது தரம் குறைந்துவிட்டதா என்று சாலமன் பாப்பையாவை வைத்து பல பட்டி மன்றமே வைக்கலாம்.

முன்பு இணையம் வருவதற்கு முன்பு  விகடன் ஜுனியர் விகடனில் வருவது எல்லாம் படிக்க மிக அருமையாக இருக்கும். ஆனால் இன்றோ அதில் வருவதைவிட சமுக வலைத்தளங்களில் கதையாகட்டும் கட்டுரையாகட்டும் நகைச்சுவையாகட்டும் அரசியலாகட்டும்  எந்த பகுதியை எடுத்தாலும் மிகவும் சுட சுட பல பதிவர்கள்  மிகவும் அட்டகாசமாக எழுதிவருகிறார்கள்..


அப்படி எழுதுபவர்களின் பதிவுகளைத்தான் இவர்கள் அப்படியோ அல்லது டிங்கரிங்க் வேலையோ பார்த்து சொந்த கட்டுரை போல எழுதிவருகிறார்கள் இதில் வீணாப் போன பதிவர்கள் சிலர் தங்காள் எழுதிய துணுக்குகள் அதில் வெளிவருகின்றது என்று பரவசம் அடைகிறார்கள். சரி எது எப்படியோ இந்த வார இதழ் குழுமம் மாத சந்தா ஆண்டு சந்தா ஆயூள் சந்தா என்று ஆன்லைன் மூலம் பணம் வசூலித்து அதை படிக்க தருகிறார்கள் அப்படி பணம் தராமலேயே அதில் வரும் கட்டுரைகளைகவிதைகளை படிக்கலாம் என்று அறியாத பலர் அதற்கு சந்தா கட்டி வருகிறார்கள்


அப்படி சந்தா கட்டி அதை படிப்பவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி அவர் ஆயுள் சந்தா கட்டி படிக்கிறார் போல....ஆனால் பாருங்க இப்ப அவருக்கு வந்த தகவலில் அவர் சந்தாவிற்கான காலம்  இன்னும் 25 நாளில் முடியப் போகிறது என்று தகவ்ல் வந்துஇருக்கிறாதாம்


எனக்கு என்ன டவுட்டுன்னா அந்த பத்திரிக்கையின் ஆயுள் காலம் முடியப் போகிறதா அல்லது கஸ்தூரியின் ஆயுள் முடியப்போகிறாதா  அல்லது  விகடன் குழுமம் ப்ராடுதனங்களில் இறங்குகிறதா என்பதுதான்


இதற்கு விடை தெரிந்தவர் விகடனார் மட்டுமே அவர் பதில் சொல்லுவாரா?


அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments:

  1. விகடன் தரம் குறைந்து பல நாட்களாகின்றன.

    ReplyDelete
  2. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கெல்லாம் விகடனார் பதில் சொல்வாரா என்ன?!

    ReplyDelete
  3. எல்லா பத்திரிக்கையுமே தனது தரத்தை கை விட்டு மாமாங்கம் ஆகி விட்டது நண்பரே...

    ReplyDelete
  4. சந்தா கட்டாமல் எல்லாவற்றையும் படிக்க முடியாது. நானும் ஆண்டு சந்தா புதிப்பித்தேன் கூடுதலாக ஒருமாதம் போனஸ் என்ற விளம்பரத்தை நம்பி ஆனால் Expiry Date கூடுதல் போனஸ் சேர்க்கப் படவில்லை. இதில் போன் செய்து சந்தாதார்களை பிடிப்பது வேறு நடந்து வருகிறது. ஆனால் அதை ஸ்கரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். இப்போது குழுமமாக செயல் படுகிறது. பங்குகள் மூலம் நடத்தப் படுகிறது என நினைக்கிறேன்.ஜூவி சுவாரசியமே இல்லை. பதிவர்கள் அசத்தலாக எழுதுகிறார்கள் என்பது உண்மை.

    ReplyDelete
  5. ஆனந்த விகடனை சமீபத்தில் மாமியார் வீட்டில் பார்க்க நேர்ந்தது....என்னவோ ரசிக்கவில்லை....பழைய தரம் அதாவது நான் கல்லூரி படித்த போது எங்கள் ஊர் லைப்ரரியில் எப்போதேனும் பார்த்து வாசித்ததுண்டு...அப்போது இருந்தது போன்று இல்லை.

    கீதா

    ReplyDelete
  6. ஆனந்தவிகடன் எல்லாம் நான் படிப்பதேயில்லை

    ReplyDelete
  7. Vikatan resolved the issue - https://twitter.com/KasthuriShankar/status/976821489566547968

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.