Thursday, March 29, 2018

@avargalunmaigal
தமிழக எம்பிக்கள் தற்கொலை :மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு செய்தியை மறைக்கும் ஊடகங்கள்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளு மன்றத்தில் முழங்கினார் நம் தமிழக எம்பி நவநீதகிருஷ்ணன். அவர் ஒன்று சும்மா பேச வேண்டும் என்பதற்காக பேசி இருக்கமாட்டார் அவர் கட்சியின் மற்ற எம்பிக்களோடு கலைந்துரையாடிதான் அப்படி ஒரு முடிவுக்கு வந்து பேசி இருப்பார். அப்படி இல்லாமல் இப்படி பேச அவர் "ஒன்றும் அரை லூசுவோ அல்லது முழு லூசுவோ" கிடையாது. அதனால் அவர் பேசியது தமிழ்மக்களின் நலனுக்கு என்பதை தவிர வேறு எதற்கும் இல்லை..



அப்படி பட்டவர்கள் சொன்ன சொல் மாறாத மறத்தமிழர்கள். தமிழன் சொன்ன வாக்கு தவறாதவன் அதிலும் ஜெயலலிதாவை குருவாக கொண்டு வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும் போது காவிரி மேலாண்மை வாரியத்தை இன்று வரை அமைக்காததால் அதிமுக எம்பிக்கள் அனைவரும்  இந்நேரம் தற்கொலை செய்து இருப்பார்கள்..


ஆனால் அந்த செய்தியை ஊடகங்கள் இது வரை பிரேக்கிங்க் ந்யூஸாக  போடவில்லை. ஏன் இன்னும் சாதராண நீயூஸாக கூட போடாமல் அப்படியே செய்தியை மக்களிடம் இருந்து மறைக்கிறது. அதனால் மத்திய அரசுடன் சேர்ந்து செய்தியை மறைக்கும் ஊடகங்களை நாம் கண்டிப்போம். அதுமட்டுமல்லாமல் மறைந்த 37 எம்பிக்களுக்காக நாம் துக்க
ம் அனுஷ்டிப்போம்

ஒரு வேளை இறந்தவர்களை நாம் நேரில் பார்க்க நேர்ந்தால். அது அவர்கள் அல்ல அவர்களின் ஆவிதான் நம் முன்னே சுற்றுகிறது என்பதை அறிந்து அந்த ஆவியை விரட்ட செருப்பு மற்றும் விளக்கமாரால் அடித்தாலே போதும் அது நம்மைவிட்டு ஒடிவிடும்

@avargalunmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. ஹா... ஹா... ஹா... (சிரிக்கலாமில்லே?)

    ReplyDelete
    Replies
    1. நோ நோ சிரிக்க கூடாது சீரியஸ்ஸா இருக்கணும் ஹீஹீ

      Delete
  2. வாய் சொல்லில் வீரர்களிடையே கிளியே...

    ReplyDelete
  3. இவர்கள் இருந்துமிறந்தவர்களே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.