Wednesday, March 14, 2018

@avargalunmaigal

Anti Indian எழுதும் அரசியல் கலாய்ப்பு (படிக்க தவறாதீங்க )


அரசியிலுக்கு வருவதால் நிறைய தியாகங்களை பண்ண வேண்டி இருக்கிறது என்று ரஜினி இண்டியா டுடே ரிப்போர்ட்டரிடம் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்ல வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று மட்டும்தான் சார் எங்களுக்காக நீங்கள் எந்த தியாகங்களையும் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்பதுதான். முடிந்தால் நீங்கள் நடைத்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை உங்கள் மனைவிக்கும் தானம் செய்து அந்த பணத்தை பள்ளி வேலையாட்களுக்கும் மற்றும் பள்ளி கட்டிட மற்றும் மாநகராட்சி கட்டிடத்திற்குமான வாடகையை செலுதத செய்தால் மிக நன்றாக இருக்கும்


@avargalUnmaigal

#மோடி 2019 தேர்தலில் கோயம்பத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி வந்து இருக்கிறது..
 #வாய்யா வா என்ன வடநாட்டன் மீது நம்பிக்கை இல்லாமல் போச்சா.  சரி சரி வய்யா வா இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது இப்போதாவது புரிஞ்சால் சரி

#ஆதார் கட்டாயமில்லேனு கோர்ட்ல சொல்லிடாங்களாம் அடே #கோர்ட் சொன்னால் எவன் மதிக்கிறான் #மோடி சொன்னாரா என்று மட்டும் பாருங்க..


பாகிஸ்தான் அரசே சீன அரசே இரவு நேரத்தில் எங்களை தாக்கும் நீங்கள் மிகவும் கோழையானவர்கள். தைரியம் இருந்தால் பகலில் எங்களை தாக்கி பாருங்கள்:- இப்படி பாதுகாப்பு அமைச்சர் #நிர்மலா சீதாராமன் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை



பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணிய ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்தி இருந்தால் #குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை சாகமல் மீட்டு இருக்கலாமோ என்னவோ



நல்லவேளை நிர்மலா சீதாராமன் வெளிநாட்டிலோ அல்லது பூஜையிலோ இல்லை அப்படி இருந்திருந்தால் குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஹெலிகாப்டரை அனுப்பி இருக்க முடியாது. நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் மக்களை அவசர நேரத்தில் காப்பாற்ற ஒரு அமைச்சரின் உத்தரவை எதிர்பார்த்து ஒரு துறை செய்ல்படுகிறது என்பது மிகவும் கேவலமானது


ஆன்மிக பயணத்தில் இருக்கும் தலைவர் அமித்தாப்பச்சனுகாக பாசத்தில் பொங்குகிறார் ஆனால் தமிழகத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்கள் பற்றி ஏதும் பேசமாட்டேங்கிறார்....ஏதாவது கேட்டா ஆன்மிகபயணம் அதனால் கருத்து சொல்ல முடியாதாம் ஆனால் தமிழக முதல்வர் பதவியை மட்டும் இவருக்கு தூக்கி கொடுக்கனுமாம்# அவர் சொன்னது போல தமிழகத்தில் சிஸ்டம் சரியீல்லைதான் சிஸ்டம் மட்டும் சரியாக இருந்திருந்தால் நாயை நாட்டைவிட்டே துரத்திருக்கலாம்


//உண்மையிலேயே, மத்திய அரசை, பாதுகாப்பு அமைச்சகத்தை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை மனமாரப் பாராட்ட வேண்டும். உரிய நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தன. செங்குத்தான மலைப்பகுதிகள்! காட்டுத் தீயின் புகை மூட்டம்! இதில் மேலிருந்து "பருந்துப் பார்வையில்" (Birds' eye view) பார்க்கையில் எவ்வளவுதான் சக்திமிக்க உபகரணங்களைப் பயன்படுத்தினாலும் பார்வை வீச்சு (Range of visibility) மிகச் சிக்கலாகவே இருக்கும்//



அடே பக்தால்ஸ் செங்குத்தான மலைபகுதி அதுவும் இரவு நேரம் தீயின் புகை மூட்டம் அப்படி இருக்கும் போரது என்ன - க்கு இந்த மாதிரி ஹெலிகப்டரை ஏன் அனுப்ப வேண்டும்  கண் துடைப்பிற்காகவா... உண்மையிலே மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் எதிரியின் நாட்டில் இரவு நேரத்தில் கூட சென்று வேவு பார்க்கும் நம் இராணுவத்தில் உள்ள உளவுத்துறையை சேர்ந்த விமானத்தை அல்லவா முதலில் அனுப்பி இருக்க வேண்டும் அவர்களும்மலையேறி சென்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவர்கள் இருக்கும் ஸ்பாட்டை கண்டுபிடித்து அதன் பின் உடனே இந்த ஹெலிகாப்டரை அனுப்பி இருந்தால் நிர்மலா சீதா ராமனை பாராட்டுவதில் அர்த்தமுன்று அதைவிட்டுவிட்டு இறந்தவர்களின் உடலை கண்டுபிடித்து கொண்டுவர அல்லவா இவர் ஹெலிகாப்டரை அனுப்பி இருக்கிறார் அடேய் உங்களை என்ன சொல்லி திட்டுவது என்று எனக்கே தெரியவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நையாண்டி, நகைச்சுவை. அதே சமயம் வழக்கம்போல சிந்திக்கவைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. ரஜினிகாந்தை இன்னும் நம்புறானே அடிமுட்டாள் ரசிகன் இவனுகளை ஒழித்தால்தான் நாடு முன்னேறும்.

    ReplyDelete
  3. ****தற்போது ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். எனவே அரசியல் பேசவேண்டிய களம் இது அல்ல. மனித வாழ்வின் நோக்கமே தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன்.

    என்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் இறந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணம் அடைந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அரசு ஏதாவது செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். ***

    தினத் தந்தியில் இப்படி எழுதி இருக்கிறார்கள்.

    நீங்க ஏன் பதிவுக்காக பொய் பொய்யா எழுதுறீங்களா?

    அவர்கள் பொய்கள் னு உங்க தளத்தை மாத்திடுங்க, தல. இஷ்டத்துக்கு அள்ளி விடுறீங்க!


    உங்க சின்னம்மா இறந்தது, என் பெரியப்பா செத்ததுக்கெல்லாம் ரஜினிகாந்த் விசாரிக்கணும்னு எதிர் பார்க்கிறீர்கள் போல. தனக்குத் தெரிந்தவர்ளைத்தான் விசாரிப்பார்கள். ஶ்ரீதேவி, அமிதாப் போன்றவர்கள்தான் அவர் நட்பு வட்டம்.


    இல்லை, அனாதைப் பிணத்தைத்தான் கட்டி அழணும், தனக்குத் தெரிந்த நடிகர், நடிகையரை எல்லாம் கண்டுக்கக் கூடாதுனு என்பது உங்கள் எதிர்பார்ப்பு போல இருக்கு.

    என்னவோ நல்லாயிருங்க!

    ReplyDelete
  4. நக்கலும் சிந்திக்கத்தூண்டும் சிந்தனை . நீங்க என்ன தான் சொன்னாலும் சிஸ்ரம் சீர் செய்ய கபாலி வரவேண்டும் என்று நிற்கும் விசில்க்குஞ்சுகளை திருத்த முடியாது!)))

    ReplyDelete
  5. ஏன் ரஜனி அங்கிள் லதா அன்ரிக்கு பணம் குடுப்பதில்லையோ? தானம் பண்ண சொல்றீங்க?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.