Monday, March 26, 2018

இன்றைய மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழகத்திற்கு செய்த சாதனை?


இன்றைய மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழகத்திற்கு செய்த சாதனை சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான வசதி செய்து தந்ததுதான். இதனால் பலன் பெறப் போவது யாரு  வசதி படைத்தவர்கள் மட்டும்தான் சாதாரண மக்கள் அல்ல... இந்த விமானத்தில் குறைந்தது 72 பேர் பயணம் செல்லாம் அதாவது வாரத்திற்கு 504 பேர் பயணம் செய்யலாம் அதாவது மாதத்திற்கு 2016 பேரும் வருடத்திற்கு 24192 பேர்  மட்டும் பயணம் செய்யலாம்.


இந்த விமானத்திற்கான டிக்கெட் தற்போதைய விலை 2600 இந்த விலை மாறுதலுக்கு உடப்பட்டது.. ஆனால் இந்த விமானத்தில் 30 சீட்டுகளுக்கான விலை 1499 மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு இந்த விமான நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் வரும் இழப்பை மத்திய அரசு 80 சதவிகிதமும் மாநில அரசு 20 சதவிகிதமும் பகிர்ந்து கொள்ளும் அது மட்டுமல்ல   ( ஒரு வருடத்திற்கு அரசாங்கம் இந்த 30 சீட்டிற்காக் கொடுக்கும் பணம்  ஒரு சீட்டுக்கு 2600-1499=1101 முப்பது சீட்டிற்கு ரூ 33030  ஒரு மாதத்திற்கு 924840, 12 மாதம் அதாவது ஒரு வருசத்திற்கு 11,09,8080 ரூ இந்த பணத்திற்கு எத்தனை பஸ் வாங்கிவிடலாம்) இதை தவிரஅடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த விமான வழித்தடத்தில் இழப்பு ஏதும் ஏற்பட்டால் மேலே சொன்ன சதவிகதப்படி மாநில மத்திய அரசு இழப்பீட்டை வழங்கும் என்று  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த முப்பது சீட்டும் சாதாரண மக்களுக்கு கிடைக்க போவதில்லை என்பது நிச்சயம்.இந்த பணம் எல்லாம் சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான்  தரப்படுகிறது... ஆனால் சாதாரண மக்கள் இந்த திட்டத்தால் எந்த வித பயனும் அடையப்போவதில்லை அவர்கள் தினம் தினம் செல்லும் வேலைகளுக்கு உடைந்த பஸ்ஸில்தான் உயிரை கையில் பிடித்து  மழையோ வெயிலோ பயணம் செய்ய வேண்டும் அவர்களுக்காக கூடுதல் பஸ்ஸோ அல்லது நல்ல தரமான பஸ்ஸோ இந்த அரசுகள் விடப் போவதில்லை.
இப்படி இதுக இலவசமாக போவதற்குதான் விமான சர்வீஸ் விட்டாங்க போல இருக்கு

இந்த விமானத்தில் அதிகம் பயணம் செய்யப் போவது யாராக இருக்கும் என்று வருங்காலத்தில் பார்த்தால் அரசு உயர் அதிகாரிகளாக்த்தான் இருக்கும் அதுவும் அரசு பணத்தில் செல்பவர்களாகவே இருப்பார்கள் அது போல அரசியல் வாதிகளும் பல நிறுவன் தலைவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள் மீதி உள்ள இடங்களில் அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது...

வசதியானவர்களுக்கு இவ்வளவு வசதி செய்யும் இந்த அரசு தினமும் கஷ்டப்படும் சராசரி மக்களுக்கு மட்டுமே ஏன் இப்படிப்பட்ட வசதிகள் செய்து தர மறுக்கிறது. இந்த சாதாரணம் மக்கள்தானே உங்களுக்கு வாக்கு சாவடியில் வந்து வோட்டு போடுகிறாகள்.. இந்த வசதியான குடும்பத்தார்கள் தேர்தல் அன்று வீட்டை வீட்டே வெளியே வாராமல் குடித்து கும்மாளம் போட்டு கொண்டிருப்பார்கள்

அவனவன் புல்ல்ட் ரெயின் அது இது என்று வசதிகள் செய்து கொடுக்கும் காலத்தில் இப்போதுதான் அதுவும் மத்திய மாநில அரசு இணைந்து சேலத்திற்கும் சென்னைக்கு விமான சர்வீஸ் விட்டதை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது


டிஸ்கி : இவ்வளவு செலவிடும் அரசு அட்லீஸ்ட் சாதாரண மக்களுக்காக  சேலம் டூ சென்னை தினசரி ரதயாத்தை நடத்தினால் இதைவிட வேகமாக சென்னையை சாதாரண மக்கள் அடைந்துவிடலாமே.  மத்திய மாநில அரசு இதை யோசிக்குமா?

4 comments:

  1. நல்ல வசதிகளுடன் பேரூந்துகளும் ரயிலும் விடுவதை விட்டு இம்மாதிரி விமான செர்வீசும் புல்லெட் ரயில்களும் நமக்குத் தேவையா மேல்தட்டில் இருக்கும் சுமார் 15 சதவீதத்தினருக்காக பெரும்பான்மையினரின் தேவைகள் அறியப்பட முடியாமல் போகிறது

    ReplyDelete
    Replies
    1. இதை தட்டிக் கேட்க வேண்டிய மக்களும் வாய்மூடி அரசாங்கம் என்பது யாருக்கோ ஏதோ செய்ய மட்டும் இருப்பதாக கருதி கொண்டிருக்கிறார்கள் என்னத்த சொல்ல....

      Delete
  2. We have two-way tracks both from Madras Central to Coimbatore and If I am right from Madras Egmore to Trichy (maybe up to Madurai, I am not sure).

    Like Caltrans in CA, USA--We can run a train every "half-an-hour" to either Salem or Coimbatore, or Tricky or Madurai---No reservations...First come first served...It will be a success. BUT, our dirty politicians....won't let that happen.

    If we have two tracks--"running a train every half-an-hour is possible"--This can be done done 24 hours/7days/52weeks--for life as safety is MUCH advanced...

    But, "Bus Mafia" won't permit..as Politicians will keep the demand less so that they can rape the poor..

    Ashamed about our country because they suck the poor ONLY...

    ReplyDelete
    Replies
    1. இதை நீங்களும் நானும் எடுத்து சொன்னால் இவங்க வெளிநாட்டில் இருந்து பெரிசா பேச வந்துட்டானுங்க என்று ஒரு கூட்டம் சொல்லும்.. ஆனால் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.